• Jan 25 2025

பொங்கல் விழா என்பது தமிழர் மண்ணின் அரசியல் காக்கும் விழா! அருட்தந்தை மா.சத்திவேல்

Chithra / Jan 14th 2025, 10:18 am
image


பொங்கல் விழா என்பது வெறுமனே கலாச்சார விழா மட்டுமல்ல. அது தமிழர் மண்ணின் அரசியல் காக்கும் விழா. அவ் விழா எமக்குணர்த்தும் வழியில் பயணிப்போம் என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை  செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார்.

அவரால் நேற்று வெளியிட்ட ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

தை பிறந்தால் வழி பிறக்கும் எனும் நம்பிக்கையை ஊன்றி வளர்த்த ஈழத் தமிழர்களாகிய எமக்கு அரசியல் தீர்வுக்கான வழிகள் எல்லாம் தேசிய மக்கள் சக்தி எனும் மக்கள் விடுதலை முன்னணியினரின் தற்போதைய ஆட்சியின் காலத்தில் நிரந்தரமாகவே ஏக்கிய ராஜ்ஜிய (ஒற்றை ஆட்சி)தால் அடைக்கப்பட்டு விடும் அறிகுறியே தென்படுகின்றன. 

இதற்கு தமிழர் தேசியம் பேசி வாக்கு அரசியல் (தேர்தல் அரசியல்) செய்யும் ஒரு சில கட்சிகளும், அவர்களின் காவடி குழுவினரும் துணை நிற்பது தமிழர்களின் அரசியலுக்கு எதிரான சாபக்கேடு எனக் குறிப்பிடுவதோடு அவற்றை எல்லாம் தகர்த்து தமிழர் தேசியம் காக்கும் தமிழர் வருட தைத்திருநாளில் காலடி வைத்து தமிழர் தாயக அரசியலை பலப்படுத்தும் சக்தியாக எம் மண்ணில் பொங்கி மகிழ, அரசியல் எழுச்சி கொள்ள திடசங்கட்பம் கொள்வோம்.

தமிழ் மண்ணுக்கே உரிய நீண்ட கால வாழ்வியல் கலாச்சாரத்தையும், அதனோடு ஒட்டிய அரசியலையும் உரிமையாக்கி வாழ்வை வளமாக்கிக் கொண்டவர்களே தமிழ் ஈழ தாயக மக்கள்.

இதனை அழிக்கவும், பறிக்கவும் பல கட்டங்களாக பல்வேறு வடிவங்களில் இன அழிப்பும் இனப்படுகொலையும் சர்வதேச சக்திகளின் ஆதரவோடு இம்மண்ணில் நிகழ்த்தப்பட்டது.பயங்கர அழிவுகளை நாம் சந்தித்தும் தமிழர் தேசியம் காக்கும் அரசியலில் நாம் உறுதியாக உள்ளோம் என்பதை தைத்திருநாளில் உறுதிப்படுத்துவோம்.பொங்கல் விழா என்பது வெறுமனே கலாச்சார விழா மட்டுமல்ல. அது தமிழர் மண்ணின் அரசியல் காக்கும் விழா. 

அவ் விழா எமக்குணர்த்தும் வழியில் பயணிப்போம்.எமக்கு எதிரான சக்திகளுக்கு எமது கலாச்சாரத்திற்கூடாக அரசியல் பலத்தை வெளிபடுத்துவோம்.

தமிழர் தேசத்தின் மக்களாக நாம் வியர்வை சிந்தி உழைத்து வாழும் மண்ணும் அதனைக் காக்க எம்மவர்கள் சிந்திய இரத்தம் தோய்ந்த மண்ணும், அந்த மண்ணின் உயிர் காக்க மாவீரர் விதையான மண்ணும் என்றும் எமக்கே சொந்தம். அதனை மீள,மீள மக்களுக்கு உணர்த்தும் இன்னுமொரு நிகழ்வாகவே தைப்பொங்கல் கொண்டாடுகின்றோம். 

எனவே ஒடுக்கப்படும் எமக்கு இது கலாச்சார விழாவிற்கு அப்பால் வாழ்வின் விழா, வாழ்விற்கான போராட்டத்திற்கு உந்து சக்தியான விழா என்பதே உண்மை.

இந்நிலையில் தெற்கின் பேரினவாத ஆட்சியாளர்களும் அவர்களோடு சேர்ந்து இயங்கும் தமிழர் தேச அரசியல் கூலிகளும் தேசிய பொங்கல் என சிங்கள பௌத்த பேரினவாதத்திற்குள் எம்மை கரைத்து விட மீண்டும் மீண்டும் முயற்சிப்பதையும் திட்டமிடுவதையும் ஏற்றுக் கொள்ளவோ அதற்கு இடம் அளிக்கவோ முடியாது என்பதையும் வெளிப்படுத்தும் தேசிய நாளாக இத்திருநாளை அடையாளப்படுத்துவோம்.

அரசியல் விட்டில் பூச்சிகளான எம்மவர்களின் ஆசியோடும், பெரும்பான்மை பலத்தோடும் ஆட்சியில் இருக்கும் தேசிய மக்கள் சக்தியாகிய மக்கள் விடுதலை முன்னணி ஒற்றை ஆட்சி எனும் மீளா அரசியல் இருளுக்குள் ஒட்டுமொத்த தமிழர்களை தள்ளி விடவும்; வடக்கும் கிழக்கும் இணைந்த தாயக அரசியலை வேரோடு அகழ்ந்தெடுக்கவும் பாரிய திட்டத்துடன் உள்ளது என்பதை நாம் அறிவோம்.

இந்நிலையில் நாடு முழுவதும் நிர்வாக சீர்கேடு, ஊழல், இலஞ்சம்,அரச வளங்கள் கொள்ளை என்பன நீண்ட காலமாக நிலவும் சூழ்நிலையில்; வடக்கு கிழக்கில் அதனை மிகை படுத்திக் காட்டி தமிழர்களுக்கு நிர்வாகம் தெரியாது. அரசியல் தெரியாது. தம்முடைய மக்கள் மீது அக்கறை கிடையாது.

தேசிய மக்கள் சக்திக்கு மட்டுமே மக்கள் மீது அக்கறை உண்டு. இலஞ்சம் ஊழலை ஒழிக்க முடியும், தடுக்க முடியும் எனும் மாயைக்குள் வடக்கு கிழக்கு மக்களையும் தள்ளி ஒற்றை ஆட்சிக்குள் அடிமைப்படுத்திடவும் சிங்கள பௌத்தத்திற்குள் முடக்கிவிடவும் திட்டமிட்டு அதற்கான கூலிப்படைகளையும் எம் மண்ணில் இறக்கிவிட்டு உள்ளமை நாம் எதிர் நோக்கும் மிகப்பெரிய ஆபத்து என்பதையும் குறிப்பிட்டே ஆக வேண்டும்.

இதற்கு மத்தியில் எம் மத்தியில் நிலவும் உட்கட்சி அரசியல் போட்டி ,அரசியல் காழ்ப்புணர்வு, தனிநபர் அரசியல் பகைமை என்பன எம் அரசியலை அசிங்கப்படுத்துவதோடு அதுவே எமக்கு எதிரான தெற்கின் அரசியல் சக்திகளுக்கும் தீனி போட்டுக் கொண்டிருக்கின்றது என்பதை எம்மவர்கள் உணர்வதாகவும் இல்லை.


இத்தகைய அரசியல் அநாகரீகமும் அநாகரிகவாதிகளும் தமிழர் தாயக தூய்மை அரசியல் கொள்கை மூலம் அகற்றப்படல் வேண்டும். தமிழர் புத்தாண்டு பிறப்பான தை திருநாளையும் தை பொங்கலையும் அதனை நடைமுறை தங்குவதற்கான நாளாகக் கொண்டு கூட்டு செயற்பாட்டினை முன்னெடுக்கும் பொது விழாவாக்கி, மக்கள் விழாவாக்கி கூட்டாக பயணிப்போம்.

கொடுக்கப்படும் தமிழனமாக ஒடுக்கப்படும் வர்க்கமாக உலக வாழ் தமிழர்களோடு தமிழர் புத்தாண்டில் கைகோர்த்து தைத்திருநாளில் உங்கள் விழாவினை மன்னிப்பு விடுதலை விடவாக்கி சமயம் கடந்து அரசியல் பலமிக்க சக்தியாக மக்களோடு எழுச்சிக் கொள்வோம் அதுவே பொங்கள் விழா.மக்கள் அரசியல் விழா என மேலும் தெரிவித்துள்ளார்.

பொங்கல் விழா என்பது தமிழர் மண்ணின் அரசியல் காக்கும் விழா அருட்தந்தை மா.சத்திவேல் பொங்கல் விழா என்பது வெறுமனே கலாச்சார விழா மட்டுமல்ல. அது தமிழர் மண்ணின் அரசியல் காக்கும் விழா. அவ் விழா எமக்குணர்த்தும் வழியில் பயணிப்போம் என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை  செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார்.அவரால் நேற்று வெளியிட்ட ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார்.அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,தை பிறந்தால் வழி பிறக்கும் எனும் நம்பிக்கையை ஊன்றி வளர்த்த ஈழத் தமிழர்களாகிய எமக்கு அரசியல் தீர்வுக்கான வழிகள் எல்லாம் தேசிய மக்கள் சக்தி எனும் மக்கள் விடுதலை முன்னணியினரின் தற்போதைய ஆட்சியின் காலத்தில் நிரந்தரமாகவே ஏக்கிய ராஜ்ஜிய (ஒற்றை ஆட்சி)தால் அடைக்கப்பட்டு விடும் அறிகுறியே தென்படுகின்றன. இதற்கு தமிழர் தேசியம் பேசி வாக்கு அரசியல் (தேர்தல் அரசியல்) செய்யும் ஒரு சில கட்சிகளும், அவர்களின் காவடி குழுவினரும் துணை நிற்பது தமிழர்களின் அரசியலுக்கு எதிரான சாபக்கேடு எனக் குறிப்பிடுவதோடு அவற்றை எல்லாம் தகர்த்து தமிழர் தேசியம் காக்கும் தமிழர் வருட தைத்திருநாளில் காலடி வைத்து தமிழர் தாயக அரசியலை பலப்படுத்தும் சக்தியாக எம் மண்ணில் பொங்கி மகிழ, அரசியல் எழுச்சி கொள்ள திடசங்கட்பம் கொள்வோம்.தமிழ் மண்ணுக்கே உரிய நீண்ட கால வாழ்வியல் கலாச்சாரத்தையும், அதனோடு ஒட்டிய அரசியலையும் உரிமையாக்கி வாழ்வை வளமாக்கிக் கொண்டவர்களே தமிழ் ஈழ தாயக மக்கள்.இதனை அழிக்கவும், பறிக்கவும் பல கட்டங்களாக பல்வேறு வடிவங்களில் இன அழிப்பும் இனப்படுகொலையும் சர்வதேச சக்திகளின் ஆதரவோடு இம்மண்ணில் நிகழ்த்தப்பட்டது.பயங்கர அழிவுகளை நாம் சந்தித்தும் தமிழர் தேசியம் காக்கும் அரசியலில் நாம் உறுதியாக உள்ளோம் என்பதை தைத்திருநாளில் உறுதிப்படுத்துவோம்.பொங்கல் விழா என்பது வெறுமனே கலாச்சார விழா மட்டுமல்ல. அது தமிழர் மண்ணின் அரசியல் காக்கும் விழா. அவ் விழா எமக்குணர்த்தும் வழியில் பயணிப்போம்.எமக்கு எதிரான சக்திகளுக்கு எமது கலாச்சாரத்திற்கூடாக அரசியல் பலத்தை வெளிபடுத்துவோம்.தமிழர் தேசத்தின் மக்களாக நாம் வியர்வை சிந்தி உழைத்து வாழும் மண்ணும் அதனைக் காக்க எம்மவர்கள் சிந்திய இரத்தம் தோய்ந்த மண்ணும், அந்த மண்ணின் உயிர் காக்க மாவீரர் விதையான மண்ணும் என்றும் எமக்கே சொந்தம். அதனை மீள,மீள மக்களுக்கு உணர்த்தும் இன்னுமொரு நிகழ்வாகவே தைப்பொங்கல் கொண்டாடுகின்றோம். எனவே ஒடுக்கப்படும் எமக்கு இது கலாச்சார விழாவிற்கு அப்பால் வாழ்வின் விழா, வாழ்விற்கான போராட்டத்திற்கு உந்து சக்தியான விழா என்பதே உண்மை.இந்நிலையில் தெற்கின் பேரினவாத ஆட்சியாளர்களும் அவர்களோடு சேர்ந்து இயங்கும் தமிழர் தேச அரசியல் கூலிகளும் தேசிய பொங்கல் என சிங்கள பௌத்த பேரினவாதத்திற்குள் எம்மை கரைத்து விட மீண்டும் மீண்டும் முயற்சிப்பதையும் திட்டமிடுவதையும் ஏற்றுக் கொள்ளவோ அதற்கு இடம் அளிக்கவோ முடியாது என்பதையும் வெளிப்படுத்தும் தேசிய நாளாக இத்திருநாளை அடையாளப்படுத்துவோம்.அரசியல் விட்டில் பூச்சிகளான எம்மவர்களின் ஆசியோடும், பெரும்பான்மை பலத்தோடும் ஆட்சியில் இருக்கும் தேசிய மக்கள் சக்தியாகிய மக்கள் விடுதலை முன்னணி ஒற்றை ஆட்சி எனும் மீளா அரசியல் இருளுக்குள் ஒட்டுமொத்த தமிழர்களை தள்ளி விடவும்; வடக்கும் கிழக்கும் இணைந்த தாயக அரசியலை வேரோடு அகழ்ந்தெடுக்கவும் பாரிய திட்டத்துடன் உள்ளது என்பதை நாம் அறிவோம்.இந்நிலையில் நாடு முழுவதும் நிர்வாக சீர்கேடு, ஊழல், இலஞ்சம்,அரச வளங்கள் கொள்ளை என்பன நீண்ட காலமாக நிலவும் சூழ்நிலையில்; வடக்கு கிழக்கில் அதனை மிகை படுத்திக் காட்டி தமிழர்களுக்கு நிர்வாகம் தெரியாது. அரசியல் தெரியாது. தம்முடைய மக்கள் மீது அக்கறை கிடையாது.தேசிய மக்கள் சக்திக்கு மட்டுமே மக்கள் மீது அக்கறை உண்டு. இலஞ்சம் ஊழலை ஒழிக்க முடியும், தடுக்க முடியும் எனும் மாயைக்குள் வடக்கு கிழக்கு மக்களையும் தள்ளி ஒற்றை ஆட்சிக்குள் அடிமைப்படுத்திடவும் சிங்கள பௌத்தத்திற்குள் முடக்கிவிடவும் திட்டமிட்டு அதற்கான கூலிப்படைகளையும் எம் மண்ணில் இறக்கிவிட்டு உள்ளமை நாம் எதிர் நோக்கும் மிகப்பெரிய ஆபத்து என்பதையும் குறிப்பிட்டே ஆக வேண்டும்.இதற்கு மத்தியில் எம் மத்தியில் நிலவும் உட்கட்சி அரசியல் போட்டி ,அரசியல் காழ்ப்புணர்வு, தனிநபர் அரசியல் பகைமை என்பன எம் அரசியலை அசிங்கப்படுத்துவதோடு அதுவே எமக்கு எதிரான தெற்கின் அரசியல் சக்திகளுக்கும் தீனி போட்டுக் கொண்டிருக்கின்றது என்பதை எம்மவர்கள் உணர்வதாகவும் இல்லை.இத்தகைய அரசியல் அநாகரீகமும் அநாகரிகவாதிகளும் தமிழர் தாயக தூய்மை அரசியல் கொள்கை மூலம் அகற்றப்படல் வேண்டும். தமிழர் புத்தாண்டு பிறப்பான தை திருநாளையும் தை பொங்கலையும் அதனை நடைமுறை தங்குவதற்கான நாளாகக் கொண்டு கூட்டு செயற்பாட்டினை முன்னெடுக்கும் பொது விழாவாக்கி, மக்கள் விழாவாக்கி கூட்டாக பயணிப்போம்.கொடுக்கப்படும் தமிழனமாக ஒடுக்கப்படும் வர்க்கமாக உலக வாழ் தமிழர்களோடு தமிழர் புத்தாண்டில் கைகோர்த்து தைத்திருநாளில் உங்கள் விழாவினை மன்னிப்பு விடுதலை விடவாக்கி சமயம் கடந்து அரசியல் பலமிக்க சக்தியாக மக்களோடு எழுச்சிக் கொள்வோம் அதுவே பொங்கள் விழா.மக்கள் அரசியல் விழா என மேலும் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement

Buy Now