• May 22 2025

பூவரசங்குளம் காவல்நிலைய பொறுப்பதிகாரி! இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் கைது!

Thansita / May 21st 2025, 10:28 pm
image

வவுனியா பூவரசங்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஐந்து இலட்சம் ரூபாய் இலஞ்சம் பெறப்பட்ட போது இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் இன்று கைதுசெய்யப்பட்டுள்ளார்.

குறித்த கைதுநடவடிக்கை இன்று மாலை இடம்பெற்றுள்ளது....

சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

பூவரசங்குளம் காவல்நிலைய பொறுப்பதிகாரி இலஞ்சம் கோருவதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு முறைப்பாடு வழங்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து இன்றையதினம் பூவரசங்குளம் பொலிஸ்நிலையத்திற்கு வருகைதந்த இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் அதிகாரிகள் குறித்த பொலிஸ் நிலையம் பொறுப்பதிகாரி ஜந்து இலட்சம் ரூபாய் இலஞ்சம் பெறப்பட்ட போது கைதுசெய்துள்ளனர்.

காணி விடயம் ஒன்று தொடர்பாக குறித்த இலஞ்சம் பெறப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

கைதுசெய்யப்பட்ட பொறுப்பதிகாரி மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக வவுனியா தலைமை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
அவரை நாளையதினம் வவுனியா நீதிமன்றில் முற்றுகையிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பூவரசங்குளம் காவல்நிலைய பொறுப்பதிகாரி இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் கைது வவுனியா பூவரசங்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஐந்து இலட்சம் ரூபாய் இலஞ்சம் பெறப்பட்ட போது இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் இன்று கைதுசெய்யப்பட்டுள்ளார்.குறித்த கைதுநடவடிக்கை இன்று மாலை இடம்பெற்றுள்ளது.சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில், பூவரசங்குளம் காவல்நிலைய பொறுப்பதிகாரி இலஞ்சம் கோருவதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு முறைப்பாடு வழங்கப்பட்டிருந்தது.இதனையடுத்து இன்றையதினம் பூவரசங்குளம் பொலிஸ்நிலையத்திற்கு வருகைதந்த இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் அதிகாரிகள் குறித்த பொலிஸ் நிலையம் பொறுப்பதிகாரி ஜந்து இலட்சம் ரூபாய் இலஞ்சம் பெறப்பட்ட போது கைதுசெய்துள்ளனர்.காணி விடயம் ஒன்று தொடர்பாக குறித்த இலஞ்சம் பெறப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.கைதுசெய்யப்பட்ட பொறுப்பதிகாரி மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக வவுனியா தலைமை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.அவரை நாளையதினம் வவுனியா நீதிமன்றில் முற்றுகையிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Advertisement

Advertisement

Advertisement