போருக்காகச் செய்யப்படும் பிரார்த்தனைகளைக் கடவுள் ஏற்பதில்லை என திருத்தந்தை லியோ
தெரிவித்துள்ளார்.
திருத்தந்தை லியோ வெளியிட்ட கருத்தை அல்ஜசீரா மீண்டும் காணொளி வடிவில் வெளியிட்டுள்ளது.
வன்முறை மற்றும் அழிவுக்கான வேண்டுதல்கள் ஆன்மீகத்திற்குப் புறம்பானவை என திருத்தந்தை லியோ அண்மையில் இடம்பெற்ற ஆராதனையில் குறிப்பிட்டிருந்தார்.
அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்செத், ஈரானில் "முற்றிலும் அழிவை" ஏற்படுத்த வேண்டும் எனப் பிரார்த்தனை செய்த சில நாட்களிலேயே, திருத்தந்தையின் இந்த முக்கிய கருத்து வெளியாகியிருந்தது.
இதற்கிடையில், இராணுவ மத சுதந்திர அறக்கட்டளை ஒரு முக்கியமான தகவலை வெளியிட்டுள்ளது.
முன்னதாக இராணுவத்தின் உயர்மட்ட அதிகாரிகள், போரை நியாயப்படுத்துவதற்காக மத ரீதியான கருத்துக்களைப் பயன்படுத்துவதாக குற்றம் சுமத்தி 200-க்கும் மேற்பட்ட வீரர்கள் முறைப்பாடு அளித்துள்ளதாக இராணுவ மத சுதந்திர அறக்கட்டளையை கோடிட்டு அல்ஜசீரா செய்தி வெளியிட்டுள்ளது.
மத்திய கிழக்கு மோதல்கள் தீவிரமடைந்து வரும் நிலையில் இவ்வாறான கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
அழிவுக்கான வேண்டுதல்கள் ஆன்மீகத்திற்கு புறம்பானவை; போருக்கான பிரார்த்தனைகளை கடவுள் ஏற்பதில்லை போருக்காகச் செய்யப்படும் பிரார்த்தனைகளைக் கடவுள் ஏற்பதில்லை என திருத்தந்தை லியோ தெரிவித்துள்ளார். திருத்தந்தை லியோ வெளியிட்ட கருத்தை அல்ஜசீரா மீண்டும் காணொளி வடிவில் வெளியிட்டுள்ளது.வன்முறை மற்றும் அழிவுக்கான வேண்டுதல்கள் ஆன்மீகத்திற்குப் புறம்பானவை என திருத்தந்தை லியோ அண்மையில் இடம்பெற்ற ஆராதனையில் குறிப்பிட்டிருந்தார்.அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்செத், ஈரானில் "முற்றிலும் அழிவை" ஏற்படுத்த வேண்டும் எனப் பிரார்த்தனை செய்த சில நாட்களிலேயே, திருத்தந்தையின் இந்த முக்கிய கருத்து வெளியாகியிருந்தது. இதற்கிடையில், இராணுவ மத சுதந்திர அறக்கட்டளை ஒரு முக்கியமான தகவலை வெளியிட்டுள்ளது.முன்னதாக இராணுவத்தின் உயர்மட்ட அதிகாரிகள், போரை நியாயப்படுத்துவதற்காக மத ரீதியான கருத்துக்களைப் பயன்படுத்துவதாக குற்றம் சுமத்தி 200-க்கும் மேற்பட்ட வீரர்கள் முறைப்பாடு அளித்துள்ளதாக இராணுவ மத சுதந்திர அறக்கட்டளையை கோடிட்டு அல்ஜசீரா செய்தி வெளியிட்டுள்ளது.மத்திய கிழக்கு மோதல்கள் தீவிரமடைந்து வரும் நிலையில் இவ்வாறான கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.