• Feb 14 2026

காதலர் தினத்திற்கு முன்னதான கொண்டாட்டம்;ஏற்பாடுகளை அடித்து நொருக்கிய குண்டர்கள்!

shanuja / Feb 13th 2026, 5:34 pm
image

கல்லூரி ஒன்றில் காதலர் தினத்திற்கு முன்னதான கொண்டாட்டத்திற்காக ஏற்பாடு செய்யப்பட்ட அனைத்து வேலைகளையும் குண்டர் குழுவொன்று அடித்து நொருக்கியுள்ளது. 


மும்பை இந்தூரில் உள்ள நர்சி மோஞ்சி கல்லூரிக்குள்  குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. 


குறித்த கல்லூரியில் காதலர் தினத்திற்கு முந்தைய கொண்டாட்டத்திற்காக  ஒரு விருந்து ஏற்பாடு செய்யப்பட்டது. 


மேலாண்மை மாணவர்களும் பேராசிரியர்களும் உரத்த இசையின் மத்தியில் கலந்து கொண்டிருந்தனர். 


திடீரென்று, பஜ்ரங் தளத்தைச் சேர்ந்த ஒரு கூட்டம், தடிகளையும் மத வாசகங்களையும் ஏந்தி, வளாகத்திற்குள் நுழைந்து தாக்குதல் நடத்தினர். 


வளாகத்தில்  ஏற்பாடு செய்யப்பட்ட கட்டடத்தையும் சேதப்படுத்தினர். மாணவர்கள் தங்கள் பாதுகாப்பிற்காக  ஆங்காங்கே ஓடினார்கள். 


சம்பவத்தையடுத்து கல்லூரிக்கு விரைந்த பொலிஸார் ​​சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் நடவடிக்கை எடுப்பதாகக் கூறி, தாக்குதல் நடத்தியவர்களை அவர்கள் விடுவித்தனர்.


இருப்பினும், இந்த நிகழ்வு குறித்து தகவல் தெரிவிக்காததற்காக கல்லூரி நிர்வாகியிடம் பொலிசார் வழக்குத் தொடுத்துள்ளனர்.

காதலர் தினத்திற்கு முன்னதான கொண்டாட்டம்;ஏற்பாடுகளை அடித்து நொருக்கிய குண்டர்கள் கல்லூரி ஒன்றில் காதலர் தினத்திற்கு முன்னதான கொண்டாட்டத்திற்காக ஏற்பாடு செய்யப்பட்ட அனைத்து வேலைகளையும் குண்டர் குழுவொன்று அடித்து நொருக்கியுள்ளது. மும்பை இந்தூரில் உள்ள நர்சி மோஞ்சி கல்லூரிக்குள்  குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த கல்லூரியில் காதலர் தினத்திற்கு முந்தைய கொண்டாட்டத்திற்காக  ஒரு விருந்து ஏற்பாடு செய்யப்பட்டது. மேலாண்மை மாணவர்களும் பேராசிரியர்களும் உரத்த இசையின் மத்தியில் கலந்து கொண்டிருந்தனர். திடீரென்று, பஜ்ரங் தளத்தைச் சேர்ந்த ஒரு கூட்டம், தடிகளையும் மத வாசகங்களையும் ஏந்தி, வளாகத்திற்குள் நுழைந்து தாக்குதல் நடத்தினர். வளாகத்தில்  ஏற்பாடு செய்யப்பட்ட கட்டடத்தையும் சேதப்படுத்தினர். மாணவர்கள் தங்கள் பாதுகாப்பிற்காக  ஆங்காங்கே ஓடினார்கள். சம்பவத்தையடுத்து கல்லூரிக்கு விரைந்த பொலிஸார் ​​சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் நடவடிக்கை எடுப்பதாகக் கூறி, தாக்குதல் நடத்தியவர்களை அவர்கள் விடுவித்தனர்.இருப்பினும், இந்த நிகழ்வு குறித்து தகவல் தெரிவிக்காததற்காக கல்லூரி நிர்வாகியிடம் பொலிசார் வழக்குத் தொடுத்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement