• Nov 23 2024

வவுனியாவில் தேர்தலுக்கான ஏற்பாடுகள் பூர்த்தி- 4,796 அரச ஊழியர்கள் கடமையில்..!

Sharmi / Sep 20th 2024, 12:59 pm
image

வன்னி தேர்தல் மாவட்டத்தில் 387 வாக்குப்பெட்டிகள் மற்றும் தேவையான ஆவணங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக வவுனியா மாவட்ட செயலாளர் பி.எ.சரத்சந்திர தெரிவித்தார்.

தேர்தல் தொடர்பாக வவுனியா மாவட்ட செயலகத்தில் இன்று(20) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில்  வன்னி மாவட்டத்தில் 306,081 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். 

அந்தவகையில், வவுனியா மாவட்டத்தில் 128,585 வாக்காளர்களும், முல்லைத்தீவில் 86889 வாக்காளர்களும், மன்னார் 90,607 வாக்காளர்களும் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். 

இதேவேளை தேர்தலில் வாக்களிப்பதற்காக மூன்று மாவட்டங்களிலும் 387வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. 

அதற்கான வாக்குப் பெட்டிகள் மற்றும் தேவையான ஆவணங்கள் இன்று பேருந்துகள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

தேர்தல் கடமைகளுக்காக வன்னி மாவட்டத்தில் 4,796 அரச ஊழியர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 

அத்துடன் வவுனியா மாவட்டத்தில் பொலிசார்,விசேட அதிரடிப் படையினர், ஊர்காவற்படை என 1500 பேர் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்

வவுனியாவில் இதுவரை 36 சிறியளவிலான தேர்தல் முறைப்பாடுகளே பதிவு செய்யப்பட்டுள்ளது. 

சாதாரண வாக்கு எண்ணும் பணிகளுக்காக வவுனியாவில் 12,முல்லைத்தீவில் 8,மன்னாரில் 7 வாக்கெண்ணும் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதுடன்,  தபால் வாக்குகள் எண்ணுவதற்காக 10 நிலையங்களும்  என மொத்தமாக 37 வாக்கெண்ணும் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, தபால் வாக்குகள் நாளை மாலை 6 மணியளவில் எண்ணுவதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், தேர்தலுக்கான ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்


வவுனியாவில் தேர்தலுக்கான ஏற்பாடுகள் பூர்த்தி- 4,796 அரச ஊழியர்கள் கடமையில். வன்னி தேர்தல் மாவட்டத்தில் 387 வாக்குப்பெட்டிகள் மற்றும் தேவையான ஆவணங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக வவுனியா மாவட்ட செயலாளர் பி.எ.சரத்சந்திர தெரிவித்தார்.தேர்தல் தொடர்பாக வவுனியா மாவட்ட செயலகத்தில் இன்று(20) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில்  வன்னி மாவட்டத்தில் 306,081 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். அந்தவகையில், வவுனியா மாவட்டத்தில் 128,585 வாக்காளர்களும், முல்லைத்தீவில் 86889 வாக்காளர்களும், மன்னார் 90,607 வாக்காளர்களும் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். இதேவேளை தேர்தலில் வாக்களிப்பதற்காக மூன்று மாவட்டங்களிலும் 387வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. அதற்கான வாக்குப் பெட்டிகள் மற்றும் தேவையான ஆவணங்கள் இன்று பேருந்துகள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.தேர்தல் கடமைகளுக்காக வன்னி மாவட்டத்தில் 4,796 அரச ஊழியர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அத்துடன் வவுனியா மாவட்டத்தில் பொலிசார்,விசேட அதிரடிப் படையினர், ஊர்காவற்படை என 1500 பேர் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்வவுனியாவில் இதுவரை 36 சிறியளவிலான தேர்தல் முறைப்பாடுகளே பதிவு செய்யப்பட்டுள்ளது. சாதாரண வாக்கு எண்ணும் பணிகளுக்காக வவுனியாவில் 12,முல்லைத்தீவில் 8,மன்னாரில் 7 வாக்கெண்ணும் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதுடன்,  தபால் வாக்குகள் எண்ணுவதற்காக 10 நிலையங்களும்  என மொத்தமாக 37 வாக்கெண்ணும் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.இதேவேளை, தபால் வாக்குகள் நாளை மாலை 6 மணியளவில் எண்ணுவதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தேர்தலுக்கான ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்

Advertisement

Advertisement

Advertisement