கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் உற்பத்தித் திறன் செயற்பாடுகளை மேம்படுத்தும் நோக்கில் இடம்பெறுகின்ற தரவட்டக் குழு கூட்டங்களில் மாவட்ட செயலக வளாகத்தில் உயிர்வாயு தயாரிப்பு செயன்முறையினை ஆரம்பிப்பது தொடர்பாக அதிக கவனம் செலுத்தப்பட்டது.
அதனடிப்படையில், மாவட்ட செயலக சிற்றுண்டிச்சாலையில் குறித்த திட்டத்தின் பூர்வாங்க நடவடிவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் அடுத்துவரும் பத்து நாட்களில் பயன்பாட்டிற்கு வரவுள்ளது.
குறித்த உயிர்வாயு தயாரிப்பு செயன்முறை தொடர்பாக உத்தியோகத்தர்களுக்கான தொழில்நுட்ப வழிகாட்டல் விழிப்புணர்வு செயலமர்வு இன்று(13) புதன்கிழமை மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
குறித்த தெளிவூட்டல் செயலமர்வு கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி. றூபவதி கேதீஸ்வரன் அவர்களின் தலைமையில், மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
இதன்போது குறித்த தொழில்நுட்பம் தொடர்பான கருத்துரைகள் இடம்பெற்றதைத் தொடர்ந்து, மாவட்ட செயலகத்தில் அமைக்கப்பட்டுள்ள உயிர்வாயு தயாரிப்பு மேற்கொள்ளும் இடத்தில் செயன்முறையான விளக்கமளிக்கப்பட்டது.
உயிர்வாயு தயாரிப்பு செயன்முறைகள் தொடர்பான விளக்கத்தினை விவசாய பட்டதாரிகள் ஒன்றிணைந்து உருவாக்கியுள்ள Thaayincare(pvt).Ltd நிறுவனத்தினர் வழங்கியிருந்தனர்.
மேலும், Thaayincare(pvt).Ltd நிறுவனம் உயிர்வாயு சமையல் மற்றும் விவசாயிகளுக்கான சூரிய படலம் ஆகியவற்றை அமைத்துக்கொடுக்கின்றது. அதனடிப்படையில் அரச திணைக்களங்கள், வீடுகள் உள்ளடங்கலாக சுமார் 200 உயிர்வாயு நிலையங்களை இந்நிறுவனம் அமைத்துள்ளது.
அந்தவகையில் மாவட்ட செயலக வளாக கழிவுகளை மீள்சுழற்சிக்கு உட்படுத்துகின்ற வகையில் சேதனப்பசளை உற்பத்திக்கு மேலதிகமாக, உயிர்வாயு தயாரிப்பு செயன்முறையினை மாவட்ட செயலக வளாகத்தில் ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந் நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர் எஸ். முரளிதரன், திட்டமிடல் பணிப்பாளர் ஸ்ரீ. பாஸ்கரன், உற்பத்தித் திறன் பிரிவின் மாவட்ட இணைப்பாளர் மற்றும் உத்தியோகத்தர்கள், தரவட்டக் குழு தலைவர்கள், உத்தியோகத்தர்கள், Thaayincare(pvt).Ltd நிறுவனத்தினர், சிற்றுண்டிச்சாலையினர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் உயிர்வாயு தயாரிப்பு செயன்முறை தொடர்பாக விளக்கமளிப்பு.samugammedia கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் உற்பத்தித் திறன் செயற்பாடுகளை மேம்படுத்தும் நோக்கில் இடம்பெறுகின்ற தரவட்டக் குழு கூட்டங்களில் மாவட்ட செயலக வளாகத்தில் உயிர்வாயு தயாரிப்பு செயன்முறையினை ஆரம்பிப்பது தொடர்பாக அதிக கவனம் செலுத்தப்பட்டது.அதனடிப்படையில், மாவட்ட செயலக சிற்றுண்டிச்சாலையில் குறித்த திட்டத்தின் பூர்வாங்க நடவடிவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் அடுத்துவரும் பத்து நாட்களில் பயன்பாட்டிற்கு வரவுள்ளது.குறித்த உயிர்வாயு தயாரிப்பு செயன்முறை தொடர்பாக உத்தியோகத்தர்களுக்கான தொழில்நுட்ப வழிகாட்டல் விழிப்புணர்வு செயலமர்வு இன்று(13) புதன்கிழமை மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.குறித்த தெளிவூட்டல் செயலமர்வு கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி. றூபவதி கேதீஸ்வரன் அவர்களின் தலைமையில், மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.இதன்போது குறித்த தொழில்நுட்பம் தொடர்பான கருத்துரைகள் இடம்பெற்றதைத் தொடர்ந்து, மாவட்ட செயலகத்தில் அமைக்கப்பட்டுள்ள உயிர்வாயு தயாரிப்பு மேற்கொள்ளும் இடத்தில் செயன்முறையான விளக்கமளிக்கப்பட்டது.உயிர்வாயு தயாரிப்பு செயன்முறைகள் தொடர்பான விளக்கத்தினை விவசாய பட்டதாரிகள் ஒன்றிணைந்து உருவாக்கியுள்ள Thaayincare(pvt).Ltd நிறுவனத்தினர் வழங்கியிருந்தனர்.மேலும், Thaayincare(pvt).Ltd நிறுவனம் உயிர்வாயு சமையல் மற்றும் விவசாயிகளுக்கான சூரிய படலம் ஆகியவற்றை அமைத்துக்கொடுக்கின்றது. அதனடிப்படையில் அரச திணைக்களங்கள், வீடுகள் உள்ளடங்கலாக சுமார் 200 உயிர்வாயு நிலையங்களை இந்நிறுவனம் அமைத்துள்ளது.அந்தவகையில் மாவட்ட செயலக வளாக கழிவுகளை மீள்சுழற்சிக்கு உட்படுத்துகின்ற வகையில் சேதனப்பசளை உற்பத்திக்கு மேலதிகமாக, உயிர்வாயு தயாரிப்பு செயன்முறையினை மாவட்ட செயலக வளாகத்தில் ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.இந் நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர் எஸ். முரளிதரன், திட்டமிடல் பணிப்பாளர் ஸ்ரீ. பாஸ்கரன், உற்பத்தித் திறன் பிரிவின் மாவட்ட இணைப்பாளர் மற்றும் உத்தியோகத்தர்கள், தரவட்டக் குழு தலைவர்கள், உத்தியோகத்தர்கள், Thaayincare(pvt).Ltd நிறுவனத்தினர், சிற்றுண்டிச்சாலையினர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.