• Mar 01 2025

திடீரென பாராளுமன்றுக்கு வருகை தந்த ஜனாதிபதி அநுர..!

Sharmi / Feb 28th 2025, 5:20 pm
image

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க சற்றுமுன்னர் பாராளுமன்றிற்கு விஜயம் செய்துள்ளதுடன் அங்கு இடம்பெற்றுவரும் வரவு செலவுத் திட்ட விவாதத்திலும் பங்கேற்றுள்ளார்.

இன்றைய தினம் பாராளுமன்றத்தில் வரவு செலவு திட்ட அமர்வில் பாதுகாப்பு அமைச்சு மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு தொடர்பான நிதி ஒதுக்கீடு தொடர்பான விவாதங்கள் அதிகளவு கவனத்தை பெற்றிருந்தன.

இந்த நிலையில், பாராளுமன்ற உறுப்பினர் அனுரு ஜெயசேகர உரையாற்றிக் கொண்டிருந்த வேளையில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க பாராளுமன்றத்திற்கு வருகை தந்தார்.

பின்னர் அவர் பிரதமர் ஹரணி அமரசூரியவுக்கு அருகில் அவருக்கு ஒதுக்கப்பட்டிருந்த ஆசனத்தில் அமர்ந்து விவாதத்தை அவதானித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.



திடீரென பாராளுமன்றுக்கு வருகை தந்த ஜனாதிபதி அநுர. ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க சற்றுமுன்னர் பாராளுமன்றிற்கு விஜயம் செய்துள்ளதுடன் அங்கு இடம்பெற்றுவரும் வரவு செலவுத் திட்ட விவாதத்திலும் பங்கேற்றுள்ளார்.இன்றைய தினம் பாராளுமன்றத்தில் வரவு செலவு திட்ட அமர்வில் பாதுகாப்பு அமைச்சு மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு தொடர்பான நிதி ஒதுக்கீடு தொடர்பான விவாதங்கள் அதிகளவு கவனத்தை பெற்றிருந்தன.இந்த நிலையில், பாராளுமன்ற உறுப்பினர் அனுரு ஜெயசேகர உரையாற்றிக் கொண்டிருந்த வேளையில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க பாராளுமன்றத்திற்கு வருகை தந்தார்.பின்னர் அவர் பிரதமர் ஹரணி அமரசூரியவுக்கு அருகில் அவருக்கு ஒதுக்கப்பட்டிருந்த ஆசனத்தில் அமர்ந்து விவாதத்தை அவதானித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement