• Dec 18 2024

பெப்ரவரி முதலாம் திகதி முதல் வாகனங்கள் இறக்குமதி - அனுமதி வழங்கிய ஜனாதிபதி

Chithra / Dec 18th 2024, 3:26 pm
image

 2025 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் முதலாம் திகதி முதல் தனியார் பாவனைக்கான வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். 

நாடாளுமன்றத்தின் இன்றைய அமர்வின் போது ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

இலங்கையில் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு விதிக்கப்பட்டுள்ள தடைகள் படிப்படியாக அகற்றப்பட வேண்டியது அவசியம்.

வாகன இறக்குமதியைக் கொண்டு ஒரு தொழிற்துறை உள்ளது. தொழில் முனைவோர் உள்ளனர். எனவே வாகன இறக்குமதியை நீண்ட காலத்திற்கு தடை செய்ய முடியாது. 

இதன்படி மூன்று கட்டங்களாக வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.  

பயணிகள் போக்குவரத்துக்கான வாகனங்கள், சிறப்பு நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படும் வாகனங்கள் மற்றும் தனியார் பயன்பாட்டிற்கான வாகனங்கள் உள்ளிட்டவை கட்டம் கட்டமாக இறக்குமதி செய்யப்படும் என குறிப்பிட்டுள்ளார். 

பெப்ரவரி முதலாம் திகதி முதல் வாகனங்கள் இறக்குமதி - அனுமதி வழங்கிய ஜனாதிபதி  2025 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் முதலாம் திகதி முதல் தனியார் பாவனைக்கான வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தின் இன்றைய அமர்வின் போது ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இலங்கையில் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு விதிக்கப்பட்டுள்ள தடைகள் படிப்படியாக அகற்றப்பட வேண்டியது அவசியம்.வாகன இறக்குமதியைக் கொண்டு ஒரு தொழிற்துறை உள்ளது. தொழில் முனைவோர் உள்ளனர். எனவே வாகன இறக்குமதியை நீண்ட காலத்திற்கு தடை செய்ய முடியாது. இதன்படி மூன்று கட்டங்களாக வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.  பயணிகள் போக்குவரத்துக்கான வாகனங்கள், சிறப்பு நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படும் வாகனங்கள் மற்றும் தனியார் பயன்பாட்டிற்கான வாகனங்கள் உள்ளிட்டவை கட்டம் கட்டமாக இறக்குமதி செய்யப்படும் என குறிப்பிட்டுள்ளார். 

Advertisement

Advertisement

Advertisement