• Jul 04 2024

சம்பந்தனுக்கு பாராளுமன்றத்தில் இரங்கல் தெரிவித்த ஜனாதிபதி ரணில்...!

Anaath / Jul 2nd 2024, 11:05 am
image

Advertisement

மறைந்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனின் மறைவுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார். 

இன்று பாராளுமன்ற அமர்வில் கலந்து கொண்ட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆற்றிய விசேட உரையின் போதே இரங்கலை தெரிவித்தார். 

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், 

என்னுடைய ஒரே ஒரு நண்பர் சம்பந்தன் எம்முடன் இல்லை. அவர் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்து விட்டார். நாங்கள் இக்கட்டான நிலைமையில்  ஒன்றாக பணியாற்றியுள்ளோம். அவர் பாரிய பங்களிப்பை செலுத்தியுள்ளார். அவர் தமிழ் தேசிய கூட்டமைப்பில் ஒரு முக்கிய உறுப்பினராக இருந்தார்.

 அவர் இலங்கையினுடைய  இறையாண்மைக்காக பாடுபட்டிருக்கின்றார். நீங்கள் இந்த நாட்டை பிரிக்கிறீர்களா என என்னிடம் கேட்டார். 1940 இல் நான் சிறிய பையனாக இருந்தேன். நீங்கள் பிறந்து கூட இருந்திருக்க மாட்டீர்கள். எனினும் ஒரு அதிகாரம் எவ்வாறு பகிரப்பட வேண்டும். நாம் அதற்காக சண்டையிட கூடாது என்ற கருத்தை  அவர் கொண்டிருந்தார். 

அதற்காக அவர் அதிகம் பாடுபட்டார். இன்னும் ஒரு சிறிய அளவில் தான் அவருக்கு  அந்த அதிகாரம் இருந்தது. அதற்காக நாம் பணியாற்றுவோம்  என அவர் தெரிவித்துள்ளார்.

சம்பந்தனுக்கு பாராளுமன்றத்தில் இரங்கல் தெரிவித்த ஜனாதிபதி ரணில். மறைந்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனின் மறைவுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார். இன்று பாராளுமன்ற அமர்வில் கலந்து கொண்ட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆற்றிய விசேட உரையின் போதே இரங்கலை தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், என்னுடைய ஒரே ஒரு நண்பர் சம்பந்தன் எம்முடன் இல்லை. அவர் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்து விட்டார். நாங்கள் இக்கட்டான நிலைமையில்  ஒன்றாக பணியாற்றியுள்ளோம். அவர் பாரிய பங்களிப்பை செலுத்தியுள்ளார். அவர் தமிழ் தேசிய கூட்டமைப்பில் ஒரு முக்கிய உறுப்பினராக இருந்தார். அவர் இலங்கையினுடைய  இறையாண்மைக்காக பாடுபட்டிருக்கின்றார். நீங்கள் இந்த நாட்டை பிரிக்கிறீர்களா என என்னிடம் கேட்டார். 1940 இல் நான் சிறிய பையனாக இருந்தேன். நீங்கள் பிறந்து கூட இருந்திருக்க மாட்டீர்கள். எனினும் ஒரு அதிகாரம் எவ்வாறு பகிரப்பட வேண்டும். நாம் அதற்காக சண்டையிட கூடாது என்ற கருத்தை  அவர் கொண்டிருந்தார். அதற்காக அவர் அதிகம் பாடுபட்டார். இன்னும் ஒரு சிறிய அளவில் தான் அவருக்கு  அந்த அதிகாரம் இருந்தது. அதற்காக நாம் பணியாற்றுவோம்  என அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement