அணிசேரா நாடுகளின் தலைவர்களின் 19வது உச்சி மாநாடு உகாண்டாவில் உள்ள கம்பாலா நகரில் ஜனவரி 23 மற்றும் 24 ஆகிய திகதிகளில் நடைபெறவுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான உத்தியோகபூர்வ குழுவொன்று இந்த நிகழ்வில் பங்குபற்றுவதற்கு தயாராகி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அணிசேரா நாடுகளின் தலைவர்களின் கம்பாலா மாநாட்டில் 120 நாடுகளின் அரச தலைவர்கள் அல்லது உத்தியோகபூர்வ பிரதிநிதிகள் பங்கேற்பார்கள்.
அதுமட்டுமின்றி, 17 நாடுகள் பார்வையாளர்களாகவும், 10 சர்வதேச அமைப்புகளும் பார்வையாளர் அமைப்புகளாகவும் பங்கேற்கின்றன.
உகாண்டா அதிபர் யோவேரி முசெவேனி இந்த மாநாட்டைத் தொடங்கி வைக்கிறார்.
அதன் புதிய தலைவராக உகாண்டா தலைவர் நியமிக்கப்படுவார்.
உகாண்டாவுக்கு பறக்கிறார் ஐனாதிபதி ரணில். அணிசேரா நாடுகளின் தலைவர்களின் 19வது உச்சி மாநாடு உகாண்டாவில் உள்ள கம்பாலா நகரில் ஜனவரி 23 மற்றும் 24 ஆகிய திகதிகளில் நடைபெறவுள்ளது.ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான உத்தியோகபூர்வ குழுவொன்று இந்த நிகழ்வில் பங்குபற்றுவதற்கு தயாராகி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.அணிசேரா நாடுகளின் தலைவர்களின் கம்பாலா மாநாட்டில் 120 நாடுகளின் அரச தலைவர்கள் அல்லது உத்தியோகபூர்வ பிரதிநிதிகள் பங்கேற்பார்கள்.அதுமட்டுமின்றி, 17 நாடுகள் பார்வையாளர்களாகவும், 10 சர்வதேச அமைப்புகளும் பார்வையாளர் அமைப்புகளாகவும் பங்கேற்கின்றன.உகாண்டா அதிபர் யோவேரி முசெவேனி இந்த மாநாட்டைத் தொடங்கி வைக்கிறார்.அதன் புதிய தலைவராக உகாண்டா தலைவர் நியமிக்கப்படுவார்.