• Nov 26 2024

முடியாவிட்டால் ஜனாதிபதி பதவி விலக வேண்டும் – சபையில் சஜித் கோரிக்கை

Chithra / Jul 26th 2024, 12:20 pm
image

 

பொலிஸ் மா அதிபரை நியமிக்க முடியாவிட்டால் ஜனாதிபதி பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்று உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

பதில் பொலிஸ்மா அதிபரை நியமிப்பதற்கு சட்டரீதியான தடைகள் ஏதும் இல்லாத நிலையில் ஜனாதிபதியால் பதில் பொலிஸ் மா அதிபரை நியமிக்க முடியாது என கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.

ஜனாதிபதி இந்தப் பிரச்சினையில் இருந்து தப்பிக்க முடியாது. அவர் இன்னும் ஜனாதிபதியாக இருக்கிறார்.

ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளர் என்பதற்காக அவர் தனது பொறுப்புகளில் இருந்து விலக முடியாது. அவரால் இதைச் செய்ய முடியாவிட்டால், ஜனாதிபதியை பதவி விலகச் சொல்லுங்கள் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.


முடியாவிட்டால் ஜனாதிபதி பதவி விலக வேண்டும் – சபையில் சஜித் கோரிக்கை  பொலிஸ் மா அதிபரை நியமிக்க முடியாவிட்டால் ஜனாதிபதி பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.நாடாளுமன்றில் இன்று உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.பதில் பொலிஸ்மா அதிபரை நியமிப்பதற்கு சட்டரீதியான தடைகள் ஏதும் இல்லாத நிலையில் ஜனாதிபதியால் பதில் பொலிஸ் மா அதிபரை நியமிக்க முடியாது என கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.ஜனாதிபதி இந்தப் பிரச்சினையில் இருந்து தப்பிக்க முடியாது. அவர் இன்னும் ஜனாதிபதியாக இருக்கிறார்.ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளர் என்பதற்காக அவர் தனது பொறுப்புகளில் இருந்து விலக முடியாது. அவரால் இதைச் செய்ய முடியாவிட்டால், ஜனாதிபதியை பதவி விலகச் சொல்லுங்கள் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement