• Sep 17 2024

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் இன்று முக்கிய பேச்சு; அரச நிறுவன பிரதானிகளுக்கு விசேட அழைப்பு!

Chithra / Jul 9th 2024, 9:06 am
image

Advertisement

 

ஜனாதிபதித் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து பேச்சு நடத்துவதற்காக அரசாங்க அச்சகர், தபால் மா அதிபர் ஆகியோர் இன்று தேர்தல் ஆணைக்குழுவுக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

தேர்தல் செயற்பாடுகள், வாக்குச் சீட்டு அச்சிடல், வாக்காளர் அட்டை விநியோகம் உட்பட்ட பல விடயங்கள் இந்த சந்திப்பின்போது ஆராயப்படவுள்ளன.

இன்றைய அரச பணியாளர் வேலைநிறுத்தப்போராட்டத்தில் தபால் துறையினரும் பங்கேற்றுள்ளதால், இன்றைய சந்திப்பில் தபால் மா அதிபர் பங்கேற்பாரா என்பது உறுதியாகத் தெரியவில்லை.

இதேவேளை அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதி தேர்தல் தொடர்பான அறிவிப்பை வெளியிடும் அதிகாரம் எதிர்வரும் 17 ஆம் திகதியின் பின்னர், தேர்தல்கள் ஆணைக்குழுவிற்குக் கிடைக்கப் பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் இன்று முக்கிய பேச்சு; அரச நிறுவன பிரதானிகளுக்கு விசேட அழைப்பு  ஜனாதிபதித் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து பேச்சு நடத்துவதற்காக அரசாங்க அச்சகர், தபால் மா அதிபர் ஆகியோர் இன்று தேர்தல் ஆணைக்குழுவுக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.தேர்தல் செயற்பாடுகள், வாக்குச் சீட்டு அச்சிடல், வாக்காளர் அட்டை விநியோகம் உட்பட்ட பல விடயங்கள் இந்த சந்திப்பின்போது ஆராயப்படவுள்ளன.இன்றைய அரச பணியாளர் வேலைநிறுத்தப்போராட்டத்தில் தபால் துறையினரும் பங்கேற்றுள்ளதால், இன்றைய சந்திப்பில் தபால் மா அதிபர் பங்கேற்பாரா என்பது உறுதியாகத் தெரியவில்லை.இதேவேளை அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதி தேர்தல் தொடர்பான அறிவிப்பை வெளியிடும் அதிகாரம் எதிர்வரும் 17 ஆம் திகதியின் பின்னர், தேர்தல்கள் ஆணைக்குழுவிற்குக் கிடைக்கப் பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

Advertisement

Advertisement

Advertisement