• Nov 22 2024

வாகன இறக்குமதி குறித்து ஜனாதிபதியின் அறிவிப்பு!

Tamil nila / Aug 11th 2024, 7:31 pm
image

வரி தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைகளுக்கு சர்வதேச நாணய நிதியத்துடன் கலந்துரையாடியதன் பின்னர் தீர்வு காண்பதற்கு எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்துடன் இணக்கப்பாடுகள் காணப்படுவதுடன் கருத்து வேறுபாடுகளும் காணப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கண்டி மாவட்ட வர்த்தக சங்க பிரதிநிதிகளுக்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இடையில் நேற்று கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.

கண்டி ஐக்கிய வர்த்தக முன்னணியின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த சந்திப்பில் பிரதேசத்தின் சிங்கள, தமிழ், முஸ்லிம் வர்த்தக சங்கங்களின் பிரதிநிதிகள் பலர் கலந்துகொண்டனர்.

அங்கு உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க,

"வரி உயர்வால் 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டின் தொடக்கம் கடினமான காலமாக இருந்தது.

இப்போது பொருளாதாரம் மெல்ல மெல்ல முன்னேறி வருகிறது.

முதன்மை வரவு செலவு உபரியை பராமரிக்க முடிந்தது.

இந்த நடவடிக்கை தனியார் துறையை பாதிக்கிறது.

IMF உடன் 6 மாதங்களுக்கு ஒருமுறை கலந்துரையாடல் நடத்தப்படும்.

இதன் ஊடாக வளர்ச்சி ஏற்படுகிறது.வரிச் சிக்கல்களைத் திருத்த IMF உடனான பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்.

சர்வதேச நாணய நிதியத்துடன் உடன்பாடு மற்றும் கருத்து வேறுபாடுகளும் உள்ளன.வரும் ஆண்டில் அந்நிய செலாவணி கையிருப்பு குறையும்.

வாகனங்கள் இறக்குமதி தொடங்கும் போது அது நடக்கும். ஆனால் எமக்கு வாகனங்கள் இன்றி இருக்க முடியாது.

வருவாயில் பெரும் பகுதி வாகன வரி மூலம் வருகிறது.அடுத்த ஆண்டு மத்தியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்” என்றார்.

 

வாகன இறக்குமதி குறித்து ஜனாதிபதியின் அறிவிப்பு வரி தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைகளுக்கு சர்வதேச நாணய நிதியத்துடன் கலந்துரையாடியதன் பின்னர் தீர்வு காண்பதற்கு எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.சர்வதேச நாணய நிதியத்துடன் இணக்கப்பாடுகள் காணப்படுவதுடன் கருத்து வேறுபாடுகளும் காணப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.கண்டி மாவட்ட வர்த்தக சங்க பிரதிநிதிகளுக்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இடையில் நேற்று கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.கண்டி ஐக்கிய வர்த்தக முன்னணியின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த சந்திப்பில் பிரதேசத்தின் சிங்கள, தமிழ், முஸ்லிம் வர்த்தக சங்கங்களின் பிரதிநிதிகள் பலர் கலந்துகொண்டனர்.அங்கு உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க,"வரி உயர்வால் 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டின் தொடக்கம் கடினமான காலமாக இருந்தது.இப்போது பொருளாதாரம் மெல்ல மெல்ல முன்னேறி வருகிறது.முதன்மை வரவு செலவு உபரியை பராமரிக்க முடிந்தது.இந்த நடவடிக்கை தனியார் துறையை பாதிக்கிறது.IMF உடன் 6 மாதங்களுக்கு ஒருமுறை கலந்துரையாடல் நடத்தப்படும்.இதன் ஊடாக வளர்ச்சி ஏற்படுகிறது.வரிச் சிக்கல்களைத் திருத்த IMF உடனான பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்.சர்வதேச நாணய நிதியத்துடன் உடன்பாடு மற்றும் கருத்து வேறுபாடுகளும் உள்ளன.வரும் ஆண்டில் அந்நிய செலாவணி கையிருப்பு குறையும்.வாகனங்கள் இறக்குமதி தொடங்கும் போது அது நடக்கும். ஆனால் எமக்கு வாகனங்கள் இன்றி இருக்க முடியாது.வருவாயில் பெரும் பகுதி வாகன வரி மூலம் வருகிறது.அடுத்த ஆண்டு மத்தியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்” என்றார். 

Advertisement

Advertisement

Advertisement