• Oct 05 2026

தோட்டத் தொழிலாளர்களுக்கு எதிரான அழுத்தங்கள் அதிகரிப்பு – தொழிற்சங்கம் குற்றச்சாட்டு

Chithra / Oct 4th 2026, 4:01 pm
image


பெருந்தோட்டப் பகுதிகளில் தொழிலாளர்களுக்கு எதிரான வன்முறைகள், ஒடுக்குமுறைகள், அழுத்தங்கள் மற்றும் வேலைப்பளுக்கள் அதிகரித்து வருவதாக தொழிலாளர் முன்னணியின் செயலாளரும், கொட்டகலை பிரதேச சபை உறுப்பினருமான புஸ்பா விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.


அத்துடன், அரசாங்கத்தினால் வழங்கப்படும் 200 ரூபாய் கொடுப்பனவைக் கூட பெற்றுக்கொள்வதற்கு தோட்டத் தொழிலாளர்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.


கொட்டகலை பகுதியில் நேற்று (03) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.


தோட்டத் தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்காக அனைத்து தொழிற்சங்கங்களும் இன, மத மற்றும் கட்சி பேதங்களை மறந்து ஒன்றிணைந்து செயற்பட வேண்டிய காலகட்டம் இதுவென அவர் குறிப்பிட்டுள்ளார்.


முன்னர் தோட்டத் தொழிலாளர்களுக்கு ஞாயிற்றுக்கிழமை விடுமுறை வழங்கப்பட்டிருந்த நிலையில், தற்போது வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளிலும் வேலை வாய்ப்புகள் குறைக்கப்படுவதாக சில தோட்ட நிர்வாகங்கள் அறிவித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.


குறித்த நாட்களில் பணியாற்ற விரும்பும் தொழிலாளர்கள் கைகாசு அடிப்படையில் பணியாற்ற வேண்டும் என சில தோட்ட நிர்வாகங்கள் அழுத்தம் கொடுத்து வருவதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.


இதன் காரணமாக தொழிலாளர்களுக்காக செலுத்தப்பட வேண்டிய சமூகப் பாதுகாப்பு பங்களிப்புகள் மற்றும் அரசாங்கத்தினால் அதிகரிக்கப்பட்ட 200 ரூபாய் கொடுப்பனவு ஆகியவற்றைத் தவிர்க்கும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


மேலும், பல தோட்டங்கள் முறையாகப் பராமரிக்கப்படாமல் காடுகளாக மாறியுள்ளதால், புலி, சிறுத்தை, காட்டுப்பன்றி உள்ளிட்ட வனவிலங்குகளின் அச்சுறுத்தலுக்கு மத்தியில் தொழிலாளர்கள் பணியாற்ற வேண்டியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


அதேவேளை, குளவி கொட்டுக்கு தொழிலாளர்கள் இலக்காகும் சம்பவங்களும் இடம்பெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


தோட்டப் பகுதிகள் தனியாருக்கு பிரித்துக் கொடுக்கப்படுவதன் மூலம் தோட்டங்கள் துண்டாடப்பட்டு வருவதுடன், தொழிலாளர்களின் உரிமைகளும் வாழ்வாதாரமும் நாளுக்கு நாள் பாதிக்கப்பட்டு வருவதாகவும் புஸ்பா விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.


எனவே, தோட்டத் தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்காக அனைத்து தொழிற்சங்கங்களும் ஒன்றிணைந்து குரல் கொடுக்க வேண்டும் என வலியுறுத்திய அவர், இவ்வாறான நடவடிக்கைகளுக்கு எதிராக ஏதேனும் தொழிற்சங்கம் போராட்டத்தை முன்னெடுத்தால், அதற்கு தமது முழுமையான ஆதரவை வழங்கத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

தோட்டத் தொழிலாளர்களுக்கு எதிரான அழுத்தங்கள் அதிகரிப்பு – தொழிற்சங்கம் குற்றச்சாட்டு பெருந்தோட்டப் பகுதிகளில் தொழிலாளர்களுக்கு எதிரான வன்முறைகள், ஒடுக்குமுறைகள், அழுத்தங்கள் மற்றும் வேலைப்பளுக்கள் அதிகரித்து வருவதாக தொழிலாளர் முன்னணியின் செயலாளரும், கொட்டகலை பிரதேச சபை உறுப்பினருமான புஸ்பா விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.அத்துடன், அரசாங்கத்தினால் வழங்கப்படும் 200 ரூபாய் கொடுப்பனவைக் கூட பெற்றுக்கொள்வதற்கு தோட்டத் தொழிலாளர்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.கொட்டகலை பகுதியில் நேற்று (03) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.தோட்டத் தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்காக அனைத்து தொழிற்சங்கங்களும் இன, மத மற்றும் கட்சி பேதங்களை மறந்து ஒன்றிணைந்து செயற்பட வேண்டிய காலகட்டம் இதுவென அவர் குறிப்பிட்டுள்ளார்.முன்னர் தோட்டத் தொழிலாளர்களுக்கு ஞாயிற்றுக்கிழமை விடுமுறை வழங்கப்பட்டிருந்த நிலையில், தற்போது வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளிலும் வேலை வாய்ப்புகள் குறைக்கப்படுவதாக சில தோட்ட நிர்வாகங்கள் அறிவித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.குறித்த நாட்களில் பணியாற்ற விரும்பும் தொழிலாளர்கள் கைகாசு அடிப்படையில் பணியாற்ற வேண்டும் என சில தோட்ட நிர்வாகங்கள் அழுத்தம் கொடுத்து வருவதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.இதன் காரணமாக தொழிலாளர்களுக்காக செலுத்தப்பட வேண்டிய சமூகப் பாதுகாப்பு பங்களிப்புகள் மற்றும் அரசாங்கத்தினால் அதிகரிக்கப்பட்ட 200 ரூபாய் கொடுப்பனவு ஆகியவற்றைத் தவிர்க்கும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.மேலும், பல தோட்டங்கள் முறையாகப் பராமரிக்கப்படாமல் காடுகளாக மாறியுள்ளதால், புலி, சிறுத்தை, காட்டுப்பன்றி உள்ளிட்ட வனவிலங்குகளின் அச்சுறுத்தலுக்கு மத்தியில் தொழிலாளர்கள் பணியாற்ற வேண்டியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.அதேவேளை, குளவி கொட்டுக்கு தொழிலாளர்கள் இலக்காகும் சம்பவங்களும் இடம்பெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.தோட்டப் பகுதிகள் தனியாருக்கு பிரித்துக் கொடுக்கப்படுவதன் மூலம் தோட்டங்கள் துண்டாடப்பட்டு வருவதுடன், தொழிலாளர்களின் உரிமைகளும் வாழ்வாதாரமும் நாளுக்கு நாள் பாதிக்கப்பட்டு வருவதாகவும் புஸ்பா விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.எனவே, தோட்டத் தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்காக அனைத்து தொழிற்சங்கங்களும் ஒன்றிணைந்து குரல் கொடுக்க வேண்டும் என வலியுறுத்திய அவர், இவ்வாறான நடவடிக்கைகளுக்கு எதிராக ஏதேனும் தொழிற்சங்கம் போராட்டத்தை முன்னெடுத்தால், அதற்கு தமது முழுமையான ஆதரவை வழங்கத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement