• May 18 2024

உணவு பொருட்களின் விலை அதிரடியாக குறைப்பு..! வெளியானது அறிவிப்பு

Chithra / Mar 5th 2024, 8:51 am
image

Advertisement

 

மின்சார கட்டணம் குறைக்கப்பட்டமை காரணமாக, இன்று நள்ளிரவு முதல் உணவு பொருட்களின் விலையினை குறைப்பதற்கு தீர்மானித்துள்ளதாக இலங்கை சிற்றுண்டிச்சாலை மற்றும் உணவக உரிமையாளர் சங்கம் அறிவித்துள்ளது.

இதற்கமைய, ஒரு கோப்பை தேநீர் ஐந்து ரூபாயினாலும், ஒரு கோப்பை பால் தேநீர் 10 ரூபாயினாலும், சிற்றுண்டிகள் 10 ரூபாயினாலும், குறைக்கப்படவுள்ளன.

அத்துடன், சோற்றுப்பொதி ஒன்று 25 ரூபாயினாலும் கொத்து மற்றும் ப்ரைட் ரைஸ் ஆகியன 50 ரூபாயினாலும் குறைக்கப்படவுள்ளது.

உற்பத்தி செலவு அதிகரித்துள்ள நிலையில் உணவுப்பொருட்களின் விலையை அதிகரிப்பதற்கு நேற்று முன்தினம் அந்த சங்கம் தீர்மானித்திருந்தது.

இதேவேளை, உணவுப்பொருட்களின் விலையினை இந்த வாரத்தில் மீண்டும் குறைப்பதற்கு எதிர்பார்த்துள்ளதாக அந்த சங்கத்தின் தலைவர் ஹர்சன ருக்ஷன் தெரிவித்தார்.

உணவு பொருட்களின் விலை அதிரடியாக குறைப்பு. வெளியானது அறிவிப்பு  மின்சார கட்டணம் குறைக்கப்பட்டமை காரணமாக, இன்று நள்ளிரவு முதல் உணவு பொருட்களின் விலையினை குறைப்பதற்கு தீர்மானித்துள்ளதாக இலங்கை சிற்றுண்டிச்சாலை மற்றும் உணவக உரிமையாளர் சங்கம் அறிவித்துள்ளது.இதற்கமைய, ஒரு கோப்பை தேநீர் ஐந்து ரூபாயினாலும், ஒரு கோப்பை பால் தேநீர் 10 ரூபாயினாலும், சிற்றுண்டிகள் 10 ரூபாயினாலும், குறைக்கப்படவுள்ளன.அத்துடன், சோற்றுப்பொதி ஒன்று 25 ரூபாயினாலும் கொத்து மற்றும் ப்ரைட் ரைஸ் ஆகியன 50 ரூபாயினாலும் குறைக்கப்படவுள்ளது.உற்பத்தி செலவு அதிகரித்துள்ள நிலையில் உணவுப்பொருட்களின் விலையை அதிகரிப்பதற்கு நேற்று முன்தினம் அந்த சங்கம் தீர்மானித்திருந்தது.இதேவேளை, உணவுப்பொருட்களின் விலையினை இந்த வாரத்தில் மீண்டும் குறைப்பதற்கு எதிர்பார்த்துள்ளதாக அந்த சங்கத்தின் தலைவர் ஹர்சன ருக்ஷன் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement