• May 02 2024

கிளிநொச்சியில் சிறுமியிடம் தவறான முறையில் நடந்துகொண்ட பூசகர்! எட்டு வருடங்களுக்கு பின் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

Chithra / Jan 19th 2024, 8:02 am
image

Advertisement

 

கிளிநொச்சியில் பதினாறு வயதிற்கும் குறைவான சிறுமி ஒருவரை பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தய பூசகர் ஒருவருக்கு எட்டு வருடங்களுக்கு பின் கிளிநொச்சி மேல் நீதிமன்றம் பன்னிரெண்டு ஆண்டுகால கடூழிய சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

கிளிநொச்சி பளைப் பகுதியில் கடந்த 2016 ஆம் ஆண்டு ஜுலை மாதம் முதலாம் திகதி தனக்கு உறவு முறையான பதினாறு வயதிற்கும் குறைவான சிறுமி ஒருவரை பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தய பூசகர் ஒருவரை கைது செய்து அவருக்கு எதிராக கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டது.

சட்டமா அதிபர் திணைக்களத்தினால் கிளிநொச்சி மேல் நீதிமன்றில வழக்கு தொடரப்பட்டு நேற்று   குறித்த வழக்கானது கிளிநொச்சி மேல் நீதிமன்ற நீதிபதி ஏ. எம் .ஏ சகாப்தீன் முன்னிலையில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

குறித்த நபருக்கு பன்னிரெண்டு ஆண்டுகால கடூழிய சிறைத்தண்டனை விதித்து தீர்பளித்துள்ளதுடன், பத்தாயிரம் ரூபா தண்டப்பணமும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இரண்டு இலட்சம் ரூபா நட்டஈடு செலுத்துமாறும் தீர்ப்பளித்துள்ளது.

கிளிநொச்சியில் சிறுமியிடம் தவறான முறையில் நடந்துகொண்ட பூசகர் எட்டு வருடங்களுக்கு பின் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு  கிளிநொச்சியில் பதினாறு வயதிற்கும் குறைவான சிறுமி ஒருவரை பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தய பூசகர் ஒருவருக்கு எட்டு வருடங்களுக்கு பின் கிளிநொச்சி மேல் நீதிமன்றம் பன்னிரெண்டு ஆண்டுகால கடூழிய சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.கிளிநொச்சி பளைப் பகுதியில் கடந்த 2016 ஆம் ஆண்டு ஜுலை மாதம் முதலாம் திகதி தனக்கு உறவு முறையான பதினாறு வயதிற்கும் குறைவான சிறுமி ஒருவரை பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தய பூசகர் ஒருவரை கைது செய்து அவருக்கு எதிராக கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டது.சட்டமா அதிபர் திணைக்களத்தினால் கிளிநொச்சி மேல் நீதிமன்றில வழக்கு தொடரப்பட்டு நேற்று   குறித்த வழக்கானது கிளிநொச்சி மேல் நீதிமன்ற நீதிபதி ஏ. எம் .ஏ சகாப்தீன் முன்னிலையில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.குறித்த நபருக்கு பன்னிரெண்டு ஆண்டுகால கடூழிய சிறைத்தண்டனை விதித்து தீர்பளித்துள்ளதுடன், பத்தாயிரம் ரூபா தண்டப்பணமும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இரண்டு இலட்சம் ரூபா நட்டஈடு செலுத்துமாறும் தீர்ப்பளித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement