• Apr 03 2025

விடுதியில் 5 சிறுமிகளை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய பாதிரியார்..!

Chithra / Dec 18th 2023, 1:05 pm
image

 

ஐந்து சிறுமிகளை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக கூறப்படும் 63 வயதுடைய பாதிரியார் ஒருவரை கிருலப்பனை பொலிஸார் கைது செய்துள்ளனர். 

கிருலப்பனை பிரதேசத்தில் குறிப்பிட்டவொரு மத சபையொன்றின் கீழ் நிர்வகிக்கப்பட்டு வரும் விடுதியொன்றிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றள்ளது . 

துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட 5 சிறுமிகளையும் மருத்துவ பரிசோதனைக்குட்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர் .

9 முதல் 17 வயதுக்குட்பட்ட ஐந்து சிறுமிகள் கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் குறித்த பாதிரியாரால் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு  உள்ளாக்கப்பட்டுள்ளதுடன் குறித்த விடுதி பதிவு செய்யப்படாத நிலையில் உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கைதுசெய்யப்பட்ட பாதிரியார் தொடர்பான  மேலதிக விசாரணைகளை கிருலப்பனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது . 

விடுதியில் 5 சிறுமிகளை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய பாதிரியார்.  ஐந்து சிறுமிகளை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக கூறப்படும் 63 வயதுடைய பாதிரியார் ஒருவரை கிருலப்பனை பொலிஸார் கைது செய்துள்ளனர். கிருலப்பனை பிரதேசத்தில் குறிப்பிட்டவொரு மத சபையொன்றின் கீழ் நிர்வகிக்கப்பட்டு வரும் விடுதியொன்றிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றள்ளது . துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட 5 சிறுமிகளையும் மருத்துவ பரிசோதனைக்குட்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர் .9 முதல் 17 வயதுக்குட்பட்ட ஐந்து சிறுமிகள் கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் குறித்த பாதிரியாரால் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு  உள்ளாக்கப்பட்டுள்ளதுடன் குறித்த விடுதி பதிவு செய்யப்படாத நிலையில் உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.கைதுசெய்யப்பட்ட பாதிரியார் தொடர்பான  மேலதிக விசாரணைகளை கிருலப்பனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது . 

Advertisement

Advertisement

Advertisement