• Jun 27 2024

தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபடும் சிறைச்சாலை அதிகாரிகளுக்கு சிக்கல்..! எடுக்கப்பட்ட அதிரடி நடவடிக்கை

Chithra / Jun 20th 2024, 8:56 am
image

Advertisement


தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபடும் அதிகாரிகளுக்கு எதிராக கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு சிறைச்சாலை உத்தியோகத்தர்களுக்கு சட்டரீதியான உரிமை கிடையாது என அதன் ஊடகப் பேச்சாளர், சிறைச்சாலை ஆணையாளர் காமினி பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

இவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் அதிகாரிகளுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் காமினி பீ.திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

மிகச் சிறிய அதிகாரிகள் குழுவொன்று மற்றவர்களை மிரட்டியதாக எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டது. ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறு கொழும்பு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

மூத்த அதிகாரி நியமிக்கப்பட்டு ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும். 

இது குறித்து நீதிமன்றத்தில் அறிக்கையிடுவோம் என நம்புகிறோம் என்றும்  சிறைச்சாலைகள் ஆணையாளர்   கருத்து வெளியிட்டார். 

தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபடும் சிறைச்சாலை அதிகாரிகளுக்கு சிக்கல். எடுக்கப்பட்ட அதிரடி நடவடிக்கை தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபடும் அதிகாரிகளுக்கு எதிராக கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு சிறைச்சாலை உத்தியோகத்தர்களுக்கு சட்டரீதியான உரிமை கிடையாது என அதன் ஊடகப் பேச்சாளர், சிறைச்சாலை ஆணையாளர் காமினி பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.இவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் அதிகாரிகளுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் காமினி பீ.திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.மிகச் சிறிய அதிகாரிகள் குழுவொன்று மற்றவர்களை மிரட்டியதாக எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டது. ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறு கொழும்பு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.மூத்த அதிகாரி நியமிக்கப்பட்டு ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும். இது குறித்து நீதிமன்றத்தில் அறிக்கையிடுவோம் என நம்புகிறோம் என்றும்  சிறைச்சாலைகள் ஆணையாளர்   கருத்து வெளியிட்டார். 

Advertisement

Advertisement

Advertisement