• Oct 19 2024

நாளைமுதல் தனியார் போக்குவரத்து சேவைகள் இடம்பெறாது..!smugammedia

Tharun / Feb 27th 2024, 6:56 pm
image

Advertisement

முறையான பேருந்து தரிப்பிடம் இல்லாததால் நாளை முதல் தனியார் போக்குவரத்து சேவைகள் இடம்பெறாது என வட இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தலைவர் சி.சிவபரன் தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் யாழ்ப்பாணத்தில் நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் ஊடக சந்திப்பில் கருத்து வெளியிடுகையில், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் அழைப்பினை அடுத்து யாழ் மாவட்ட தூர சேவைச் சங்கத்தின் பேருந்து உரிமையாளர்களும், ஏனைய மாவட்ட சங்கப் பிரதிநிதிகளும் இன்று(27) காலை 8 மணிக்கு மின்சார நிலைய வீதித் தரிப்பிடத்திற்கு சென்ற போது, அமைச்சர் எமது தரிப்பிடம் யாழ் போதனா வைத்தியசாலையின் சேவைகளுக்கு இடையூறாக இருப்பதாகவும் அதனால் சேவையில் ஈடுபடுவதற்காக நிற்கும் பேருந்துக்களை அவ்விடத்தில் தரித்து நிற்க வேண்டாம் என பொலிசாரின் முன்னிலையில் கூறி அவ்விடத்திற்கு "No Parking " (வாகனங்கள் நிறுத்தக்கூடாது) என்ற அறிவிப்பு பலகையும் வைத்துள்ளனர்.

ஏற்கனவே இலங்கை போக்குவரத்துச் சபையின் ஒத்துழைப்பின்மையால், குறுகிய அதாவது ஒரே நேரத்தில் 04 பேருந்துக்களை மட்டும் தரித்து நிற்கக் கூடிய மின்சார நிலைய வீதித் தரிப்பிடத்தில் சேவையில் ஈடுபடும் நாம் தற்போது அமைச்சரின் அறிவுறுத்தலால் 02 பேருந்துகள் மட்டும் தரிக்கக் கூடிய தரிப்பு நிலையமாக உள்ளது.

இதனால் அவ்விடத்தில் இருந்து தூர சேவைகளுக்கான சேவைகளை ஆற்ற முடியாதுள்ளது. வெளிமாவட்டங்களில் இருந்து யாழ்ப்பாணம் வரும் பேருந்துக்கள் தரித்து நிற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இக்கட்டான இந்நிலையினை வடமாகாண வீதிப்பயணிகள் போக்குவரத்து அதிகாரசபை எம்மிடம் இருந்து பணங்களை அறவிடுவதில் மட்டும் விளிப்பாக இருக்கின்றது.

நாம் மின்சார நிலைய வீதியில் சிறிய குறுகிய தரிப்பிடத்தில் இருந்து மிகக் கஷ்டான சூழ்நிலையில் சேவையில் ஈடுபடுவதையும் எமக்கான தரிப்பிட வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கும் முயற்சிகள் எதனையும் மேற்கொள்ளாது அசமந்தப் போக்கில் இருக்கின்றது.

இந் நிலையில் ஐந்து மாவட்டச் சங்கங்களின் பிரதிநிதிகள் ஒன்றிணைந்து மீண்டும் அமைச்சருடன் கலந்துரையாடி, எமது தரிப்பு நிலையத்தில் இருந்து சேவைகளை ஆற்ற முடியாத நிலையினை தெரிவிக்கும் முயற்சிகள் பலனளிக்காத காரணத்தினால், தூரசேவைகளுக்கான தனியார் போக்குவரத்துச் சேவைகளும், இலங்கை போக்குவரத்துச் சபையின் தூரசேவைகளும்  புதிய தரிப்பிடத்தில் இணைந்து சேவைகளில் ஈடுபடும் சூழ்நிலை உருவாகும் வரை வடமாகாணத்திற்குள்ளான அனைத்து தனியார் போக்குவரத்து சேவைகளும் நடைபெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்பததை அறியத்தருகின்றோம் - என்றுள்ளது.

நாளைமுதல் தனியார் போக்குவரத்து சேவைகள் இடம்பெறாது.smugammedia முறையான பேருந்து தரிப்பிடம் இல்லாததால் நாளை முதல் தனியார் போக்குவரத்து சேவைகள் இடம்பெறாது என வட இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தலைவர் சி.சிவபரன் தெரிவித்துள்ளார்.இன்றைய தினம் யாழ்ப்பாணத்தில் நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் அவர் ஊடக சந்திப்பில் கருத்து வெளியிடுகையில், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் அழைப்பினை அடுத்து யாழ் மாவட்ட தூர சேவைச் சங்கத்தின் பேருந்து உரிமையாளர்களும், ஏனைய மாவட்ட சங்கப் பிரதிநிதிகளும் இன்று(27) காலை 8 மணிக்கு மின்சார நிலைய வீதித் தரிப்பிடத்திற்கு சென்ற போது, அமைச்சர் எமது தரிப்பிடம் யாழ் போதனா வைத்தியசாலையின் சேவைகளுக்கு இடையூறாக இருப்பதாகவும் அதனால் சேவையில் ஈடுபடுவதற்காக நிற்கும் பேருந்துக்களை அவ்விடத்தில் தரித்து நிற்க வேண்டாம் என பொலிசாரின் முன்னிலையில் கூறி அவ்விடத்திற்கு "No Parking " (வாகனங்கள் நிறுத்தக்கூடாது) என்ற அறிவிப்பு பலகையும் வைத்துள்ளனர்.ஏற்கனவே இலங்கை போக்குவரத்துச் சபையின் ஒத்துழைப்பின்மையால், குறுகிய அதாவது ஒரே நேரத்தில் 04 பேருந்துக்களை மட்டும் தரித்து நிற்கக் கூடிய மின்சார நிலைய வீதித் தரிப்பிடத்தில் சேவையில் ஈடுபடும் நாம் தற்போது அமைச்சரின் அறிவுறுத்தலால் 02 பேருந்துகள் மட்டும் தரிக்கக் கூடிய தரிப்பு நிலையமாக உள்ளது.இதனால் அவ்விடத்தில் இருந்து தூர சேவைகளுக்கான சேவைகளை ஆற்ற முடியாதுள்ளது. வெளிமாவட்டங்களில் இருந்து யாழ்ப்பாணம் வரும் பேருந்துக்கள் தரித்து நிற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இக்கட்டான இந்நிலையினை வடமாகாண வீதிப்பயணிகள் போக்குவரத்து அதிகாரசபை எம்மிடம் இருந்து பணங்களை அறவிடுவதில் மட்டும் விளிப்பாக இருக்கின்றது.நாம் மின்சார நிலைய வீதியில் சிறிய குறுகிய தரிப்பிடத்தில் இருந்து மிகக் கஷ்டான சூழ்நிலையில் சேவையில் ஈடுபடுவதையும் எமக்கான தரிப்பிட வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கும் முயற்சிகள் எதனையும் மேற்கொள்ளாது அசமந்தப் போக்கில் இருக்கின்றது.இந் நிலையில் ஐந்து மாவட்டச் சங்கங்களின் பிரதிநிதிகள் ஒன்றிணைந்து மீண்டும் அமைச்சருடன் கலந்துரையாடி, எமது தரிப்பு நிலையத்தில் இருந்து சேவைகளை ஆற்ற முடியாத நிலையினை தெரிவிக்கும் முயற்சிகள் பலனளிக்காத காரணத்தினால், தூரசேவைகளுக்கான தனியார் போக்குவரத்துச் சேவைகளும், இலங்கை போக்குவரத்துச் சபையின் தூரசேவைகளும்  புதிய தரிப்பிடத்தில் இணைந்து சேவைகளில் ஈடுபடும் சூழ்நிலை உருவாகும் வரை வடமாகாணத்திற்குள்ளான அனைத்து தனியார் போக்குவரத்து சேவைகளும் நடைபெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்பததை அறியத்தருகின்றோம் - என்றுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement