இந்தியாவில் சமூக ஊடக தளங்களில் உருவாக்கப்படும் செயற்கை நுண்ணறிவு (AI) உள்ளடக்கங்களுக்கான விதிகளை இந்தியத் தகவல் தொழில்நுட்ப அமைச்சு அண்மையில் மாற்றியமைத்துள்ளது.
இணையப் பயன்பாட்டில் முறைகேடுகளைத் தடுப்பதே இதன் பிரதான நோக்கமாகும்.
புதிய விதிகளின்படி, அதிகாரிகளால் சட்டவிரோதம் என அடையாளம் காணப்பட்டு அகற்றக் கோரப்படும் உள்ளடக்கங்களை வெறும் 3 மணிநேரத்திற்குள் சமூக ஊடக தளங்கள் நீக்கப்படும்.இதற்கு முன்னர் இந்த நடவடிக்கைக்கு 36 மணிநேர அவகாசம் வழங்கப்பட்டிருந்தது.
இன்ஸ்டகிராம், டிக்டொக், பேஃஸ்புக் மற்றும் யூடியூப் போன்ற தளங்களில் பதிவேற்றப்படும் "செயற்கையாக உருவாக்கப்பட்ட தகவல்களை" (Synthetically generated information) தெளிவாக அடையாளப்படுத்துவது இனி கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இந்த அடையாளங்கள் (Labels) நிரந்தரமானவையாக இருக்க வேண்டும்.
இவற்றை எக்காரணம் கொண்டும் மறைக்கவோ அல்லது நீக்கவோ முடியாது.
அடையாளக் குறியீடு இன்றி இத்தகைய உள்ளடக்கங்கள் வெளியிடப்பட்டால், அதற்கு அந்தந்த சமூக ஊடக தளங்களே பொறுப்பேற்க வேண்டும்.
2021ஆம் ஆண்டு தகவல் தொழில்நுட்ப விதிகளில் திருத்தங்களாகக் கொண்டுவரப்பட்டுள்ள இந்த புதிய விதிகளின் கீழ், குறிப்பிட்ட சில வகையான செயற்கை உள்ளடக்கங்களுக்கு முழுமையான தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய விதிகள் எதிர்வரும் பெப்ரவரி 20ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரவுள்ளன.
சுமார் ஒரு பில்லியன் இணையப் பயனாளர்களைக் கொண்ட இந்தியாவில், டீப்ஃபேக், ஆள்மாறாட்டம் மற்றும் போலியான உள்ளடக்கங்கள் மூலம் முன்னெடுக்கப்படும் மோசடிகள் மற்றும் துன்புறுத்தல்களைத் தடுப்பதற்கு இந்த நடவடிக்கை அவசியமானதாகக் கருதப்படுகிறது.
சமூக ஊடகங்களில் AI காணொளி பயன்பாடுக்கு சிக்கல்-புதிதாக நடைமுறைக்கு வரும் சட்டம் இந்தியாவில் சமூக ஊடக தளங்களில் உருவாக்கப்படும் செயற்கை நுண்ணறிவு (AI) உள்ளடக்கங்களுக்கான விதிகளை இந்தியத் தகவல் தொழில்நுட்ப அமைச்சு அண்மையில் மாற்றியமைத்துள்ளது. இணையப் பயன்பாட்டில் முறைகேடுகளைத் தடுப்பதே இதன் பிரதான நோக்கமாகும்.புதிய விதிகளின்படி, அதிகாரிகளால் சட்டவிரோதம் என அடையாளம் காணப்பட்டு அகற்றக் கோரப்படும் உள்ளடக்கங்களை வெறும் 3 மணிநேரத்திற்குள் சமூக ஊடக தளங்கள் நீக்கப்படும்.இதற்கு முன்னர் இந்த நடவடிக்கைக்கு 36 மணிநேர அவகாசம் வழங்கப்பட்டிருந்தது.இன்ஸ்டகிராம், டிக்டொக், பேஃஸ்புக் மற்றும் யூடியூப் போன்ற தளங்களில் பதிவேற்றப்படும் "செயற்கையாக உருவாக்கப்பட்ட தகவல்களை" (Synthetically generated information) தெளிவாக அடையாளப்படுத்துவது இனி கட்டாயமாக்கப்பட்டுள்ளது.இந்த அடையாளங்கள் (Labels) நிரந்தரமானவையாக இருக்க வேண்டும்.இவற்றை எக்காரணம் கொண்டும் மறைக்கவோ அல்லது நீக்கவோ முடியாது.அடையாளக் குறியீடு இன்றி இத்தகைய உள்ளடக்கங்கள் வெளியிடப்பட்டால், அதற்கு அந்தந்த சமூக ஊடக தளங்களே பொறுப்பேற்க வேண்டும்.2021ஆம் ஆண்டு தகவல் தொழில்நுட்ப விதிகளில் திருத்தங்களாகக் கொண்டுவரப்பட்டுள்ள இந்த புதிய விதிகளின் கீழ், குறிப்பிட்ட சில வகையான செயற்கை உள்ளடக்கங்களுக்கு முழுமையான தடை விதிக்கப்பட்டுள்ளது.இந்த புதிய விதிகள் எதிர்வரும் பெப்ரவரி 20ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரவுள்ளன.சுமார் ஒரு பில்லியன் இணையப் பயனாளர்களைக் கொண்ட இந்தியாவில், டீப்ஃபேக், ஆள்மாறாட்டம் மற்றும் போலியான உள்ளடக்கங்கள் மூலம் முன்னெடுக்கப்படும் மோசடிகள் மற்றும் துன்புறுத்தல்களைத் தடுப்பதற்கு இந்த நடவடிக்கை அவசியமானதாகக் கருதப்படுகிறது.