• Nov 24 2024

அரச வங்கிகளில் கோடிக்கணக்கில் கடன் பெற்று திருப்பி செலுத்தாத தரப்பினருக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்

Chithra / Feb 21st 2024, 8:02 am
image

 

அரச வங்கிகளில் கோடிக்கணக்கில் கடன் பெற்று, திருப்பி செலுத்தாத தரப்பினரை வெளிப்படுத்துமாறு எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச கோரிக்கை விடுத்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

அரச வங்கிகளில் கோடிக்கணக்கில் கடன் பெற்று திருப்பி செலுத்தாதவர்கள் ஏராளம் பேர் இருக்கின்றனர்.

இவர்களது பெயர் பட்டியல் கூட சமர்ப்பிக்கப்படாத நிலையில், மாணவர்களின் கல்விக்கு நடவடிக்கைகளுக்கு தேவையான கடன் வசதிகள் வழங்காமையை ஏற்க முடியாது.

KIU போன்ற தனியார் பல்கலைக்கழக மாணவர்களுக்கு கிடைக்க வேண்டிய வட்டியில்லா கடன் வசதி வழங்கப்பட வேண்டும் என பல முறை கோரிக்கை விடுத்தும், இன்னும் இதற்கு முறையான தீர்வு கிடைக்கவில்லை.

அரச வங்கிகளிடம் இருந்து உகந்த பதில் கிடைக்கவில்லை. இதனால், மாணவர்களின் கல்வி தடைபட்டுள்ளது. இந்த பிரச்சினை குறித்து மீண்டும் கவனம் செலுத்த வேண்டும்.

இலங்கை வங்கி வட்டியில்லா கடன்களுக்கு இன்னும் உத்தரவாதம் வழங்காமையினால், இந்த கல்வி நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ள மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை நிறுத்த வேண்டி ஏற்படுவதாக தெரிவித்துள்ளனர்.

கல்வி அமைச்சர் இது தொடர்பாக எழுத்துப்பூர்வமாக தெரிவித்தும் இந்த கடன் வசதிக்கு இந்த வங்கிகள் இன்னும் ஒப்புதல் வழங்கவில்லை. 

ஜனாதிபதி செயலகம்,கல்வி அமைச்சரின் அறிவுறுத்தல்களை கூட இலங்கை வங்கி ஏற்றுக்கொள்ளாதவாறு நடந்து கொண்டுள்ளது.

இலங்கை வங்கியால் இந்த கடன் வசதிகளை வழங்க முடியாவிட்டால், மற்றுமொரு அரச வங்கியுடன் இணைந்து இந்த வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.   

அரச வங்கிகளில் கோடிக்கணக்கில் கடன் பெற்று திருப்பி செலுத்தாத தரப்பினருக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்  அரச வங்கிகளில் கோடிக்கணக்கில் கடன் பெற்று, திருப்பி செலுத்தாத தரப்பினரை வெளிப்படுத்துமாறு எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச கோரிக்கை விடுத்துள்ளார்.நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.அரச வங்கிகளில் கோடிக்கணக்கில் கடன் பெற்று திருப்பி செலுத்தாதவர்கள் ஏராளம் பேர் இருக்கின்றனர்.இவர்களது பெயர் பட்டியல் கூட சமர்ப்பிக்கப்படாத நிலையில், மாணவர்களின் கல்விக்கு நடவடிக்கைகளுக்கு தேவையான கடன் வசதிகள் வழங்காமையை ஏற்க முடியாது.KIU போன்ற தனியார் பல்கலைக்கழக மாணவர்களுக்கு கிடைக்க வேண்டிய வட்டியில்லா கடன் வசதி வழங்கப்பட வேண்டும் என பல முறை கோரிக்கை விடுத்தும், இன்னும் இதற்கு முறையான தீர்வு கிடைக்கவில்லை.அரச வங்கிகளிடம் இருந்து உகந்த பதில் கிடைக்கவில்லை. இதனால், மாணவர்களின் கல்வி தடைபட்டுள்ளது. இந்த பிரச்சினை குறித்து மீண்டும் கவனம் செலுத்த வேண்டும்.இலங்கை வங்கி வட்டியில்லா கடன்களுக்கு இன்னும் உத்தரவாதம் வழங்காமையினால், இந்த கல்வி நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ள மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை நிறுத்த வேண்டி ஏற்படுவதாக தெரிவித்துள்ளனர்.கல்வி அமைச்சர் இது தொடர்பாக எழுத்துப்பூர்வமாக தெரிவித்தும் இந்த கடன் வசதிக்கு இந்த வங்கிகள் இன்னும் ஒப்புதல் வழங்கவில்லை. ஜனாதிபதி செயலகம்,கல்வி அமைச்சரின் அறிவுறுத்தல்களை கூட இலங்கை வங்கி ஏற்றுக்கொள்ளாதவாறு நடந்து கொண்டுள்ளது.இலங்கை வங்கியால் இந்த கடன் வசதிகளை வழங்க முடியாவிட்டால், மற்றுமொரு அரச வங்கியுடன் இணைந்து இந்த வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.   

Advertisement

Advertisement

Advertisement