• Nov 08 2024

பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த உற்பத்திப் பொருட்கள் விற்பனை கண்காட்சி

Tharmini / Nov 7th 2024, 1:13 pm
image

பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில்  தையல் பயிற்சி யுவதிகளின் உற்பத்திப் பொருட்கள் விற்பனை கண்காட்சி இன்று (07) நடைபெற்றது.

டயகோனியா அனுசரணையுடன் முஸ்லிம் பெண்கள் ஆராய்ச்சி செயல் முன்னணி நடாத்தி வரும் இத்தையல் பயிற்சியானது ஆசிரியை ஜெமினா பர்வின் நெறிப்படுத்தலில் மருதமுனை பகுதியில் உள்ள அலுவலகத்தில்  இடம்பெற்றது.

இதன்  போது சந்தைப்படுத்தலும்  அதற்கான யுத்தி முறைகளும்  தொடர்பில்  விழிப்புணர்வு  கருத்தரங்கினை அம்பாறை  மாவட்ட இணைப்பாளர் ஹபீலா அஸீஸ் தலைமையில் வளவாளராக நிந்தவூர் பிரதேச செயலக மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தர் றிஸ்வானுல் ஜென்னா மேற்கொண்டார்.

குறித்த கண்காட்சியில் யுவதிகளினால் பயிற்சிக்காலத்தில் பூர்த்தி செய்யப்பட்ட பாடசாலை சீருடை வகைகள் ஆடை அணிகலன்கள் சாரிகள் சல்வார்கள் சட்டைகள் நவநாகரீக உடுதுணிகள் என பல்வேறு பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும், பெண் தலைமைத்துவ மற்றும் பாடசாலை கல்வியை இடைநிறுத்திய யுவதிகள் இத்திட்டத்தில்  இணைக்கப்பட்டுள்ளதுடன் அவர்களது வருமானத்தை மேம்படுத்தி வாழ்வாதாரத்தை முன்னெடுப்பதற்காக இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

குறித்த கண்காட்சியில் உற்பத்தி பொருட்களையும் சந்தைப்படுத்துவதற்கான வழிவகைகளை இலகுவாக மேற்கொள்ள பல்வேறு விளக்கவுரைகள் வழங்கப்பட்டன.





பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த உற்பத்திப் பொருட்கள் விற்பனை கண்காட்சி பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில்  தையல் பயிற்சி யுவதிகளின் உற்பத்திப் பொருட்கள் விற்பனை கண்காட்சி இன்று (07) நடைபெற்றது.டயகோனியா அனுசரணையுடன் முஸ்லிம் பெண்கள் ஆராய்ச்சி செயல் முன்னணி நடாத்தி வரும் இத்தையல் பயிற்சியானது ஆசிரியை ஜெமினா பர்வின் நெறிப்படுத்தலில் மருதமுனை பகுதியில் உள்ள அலுவலகத்தில்  இடம்பெற்றது.இதன்  போது சந்தைப்படுத்தலும்  அதற்கான யுத்தி முறைகளும்  தொடர்பில்  விழிப்புணர்வு  கருத்தரங்கினை அம்பாறை  மாவட்ட இணைப்பாளர் ஹபீலா அஸீஸ் தலைமையில் வளவாளராக நிந்தவூர் பிரதேச செயலக மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தர் றிஸ்வானுல் ஜென்னா மேற்கொண்டார்.குறித்த கண்காட்சியில் யுவதிகளினால் பயிற்சிக்காலத்தில் பூர்த்தி செய்யப்பட்ட பாடசாலை சீருடை வகைகள் ஆடை அணிகலன்கள் சாரிகள் சல்வார்கள் சட்டைகள் நவநாகரீக உடுதுணிகள் என பல்வேறு பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.மேலும், பெண் தலைமைத்துவ மற்றும் பாடசாலை கல்வியை இடைநிறுத்திய யுவதிகள் இத்திட்டத்தில்  இணைக்கப்பட்டுள்ளதுடன் அவர்களது வருமானத்தை மேம்படுத்தி வாழ்வாதாரத்தை முன்னெடுப்பதற்காக இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. குறித்த கண்காட்சியில் உற்பத்தி பொருட்களையும் சந்தைப்படுத்துவதற்கான வழிவகைகளை இலகுவாக மேற்கொள்ள பல்வேறு விளக்கவுரைகள் வழங்கப்பட்டன.

Advertisement

Advertisement

Advertisement