• Sep 08 2024

நெற்காணிகளின் பதிவுகளை இலத்திரனியல் மயமாக்க திட்டம் - காணியுரிமையாளர்கள் பின்னடிப்பு...!

Anaath / Jul 14th 2024, 11:03 am
image

Advertisement

நாடு முழுவதும்  'ஜிஜோகொவியா” திட்டத்தின் கீழ் நெற்பரப்புக் காணிகள் ஜி.பி.எஸ். மூலம் அடையாளப்படுத்தப்பட்டு வருகின்றது.

இருப்பினும் குறித்த திட்டத்தின் கீழ் நெற்காணி பதிவீடுகளை மேற்கொள்வதில் காணி உரிமையாளர்கள் பின்னப்படிப்பதாக யாழ். மாவட்ட கமநல அபிவிருத்தித் திணைக்களம் தெரிவித்துள்ளது.

குறித்த விடயம் தொடர்பில் அந்த திணைக்களம் மேலும் தெரிவிக்கையில், 

இந்த திட்டத்தின் கீழ்  யாழ். மாவட்டத்தில் 95 சதவிகிதமான காணி கள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. அதன் உரிமையாளர்கள் 50 சதவிகிதத்துக்குள்ளானவர்களே இந்தத் திட்டத்தின்கீழ் பதிவுகளை மேற்கொண்டுள்ளனர்.

சுமார் 50 சதவிகிதத்துக்கும் மேற்பட்ட உரிமையாளர்கள் யாழ். மாவட்டத்தில் இதுவரையில் குறித்த திட்டத்தின் கீழ் காணிகளை அடையாளப்படுத்தவில்லை.

எதிர்வரும் காலங்களில் அவர்களுடைய நலத்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளது. எனவே நெற்பயிர் செய்கையாளர்கள் உடனடியாக தமது காணிகளை அந்தந்தப் பிரதேச செயலர் பிரிவில் அமைந்துள்ள கமநல அபிவிருத்தி நிலையத்தில் பதிவு செய்யுமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

நெற்காணிகளின் பதிவுகளை இலத்திரனியல் மயமாக்க திட்டம் - காணியுரிமையாளர்கள் பின்னடிப்பு. நாடு முழுவதும்  'ஜிஜோகொவியா” திட்டத்தின் கீழ் நெற்பரப்புக் காணிகள் ஜி.பி.எஸ். மூலம் அடையாளப்படுத்தப்பட்டு வருகின்றது.இருப்பினும் குறித்த திட்டத்தின் கீழ் நெற்காணி பதிவீடுகளை மேற்கொள்வதில் காணி உரிமையாளர்கள் பின்னப்படிப்பதாக யாழ். மாவட்ட கமநல அபிவிருத்தித் திணைக்களம் தெரிவித்துள்ளது.குறித்த விடயம் தொடர்பில் அந்த திணைக்களம் மேலும் தெரிவிக்கையில், இந்த திட்டத்தின் கீழ்  யாழ். மாவட்டத்தில் 95 சதவிகிதமான காணி கள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. அதன் உரிமையாளர்கள் 50 சதவிகிதத்துக்குள்ளானவர்களே இந்தத் திட்டத்தின்கீழ் பதிவுகளை மேற்கொண்டுள்ளனர்.சுமார் 50 சதவிகிதத்துக்கும் மேற்பட்ட உரிமையாளர்கள் யாழ். மாவட்டத்தில் இதுவரையில் குறித்த திட்டத்தின் கீழ் காணிகளை அடையாளப்படுத்தவில்லை.எதிர்வரும் காலங்களில் அவர்களுடைய நலத்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளது. எனவே நெற்பயிர் செய்கையாளர்கள் உடனடியாக தமது காணிகளை அந்தந்தப் பிரதேச செயலர் பிரிவில் அமைந்துள்ள கமநல அபிவிருத்தி நிலையத்தில் பதிவு செய்யுமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement