• Nov 25 2024

தங்கநகர் யுவதியின் கொலைக்கு நீதி கோரி ஆர்ப்பாட்டம்

Chithra / Jul 10th 2024, 3:16 pm
image

 

சேருநுவர - தங்கநகர் யுவதியின் கொலைக்கு நீதி கோரியும், பெண்களுக்கெதிரான வன்முறை சம்பவங்களை கண்டித்தும் இன்று புதன்கிழமை   பேரணியும், கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமும் இடம்பெற்றது.

இதனை சேருநுவர -தங்கநகர் பகுதியைச் சேர்ந்த மாதர் சங்கங்கள், கிராம அபிவிருத்திச் சங்கம் ,உள்ளூர் சமூக அமைப்புகள் ஒன்றிணைந்து ஏற்பாடு செய்திருந்தனர்.

இதில் அதிகளவான பெண்கள் கலந்து கொண்டனர்.

இதன்போது தங்கநகர் பகுதியிலிருந்து பேரணியாக வந்தவர்கள் கிளிவெட்டி பிரதான வீதியில் நின்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

இதன்போது யுவதியின் கொலைச் சம்பவத்தின் பிரதான சந்தேக நபரின் வீட்டுக்குச் செல்லும் வீதியில் பொலிஸார் நிறுத்தப்பட்டிருந்தனர்.

எனினும் பொலிஸாரின் தடையையும் மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் சந்தேக நபரின் கிளிவெட்டி வீட்டுக்கு முன்னாள் நின்று கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன் பின்னர் அங்கிருந்து நகர்ந்து நடைபவணியாச் சென்று  கிளிவெட்டி பிரதான வீதியில் நின்று சுலோகங்களை ஏந்தி கோசங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அத்தோடு சேருநுவர -தங்கநகர் யுவதி கொலையின் பிரதான சூத்திரதாரி விடுதலை செய்யப்படக் கூடாது அவருக்கு உயர்ந்த பட்ச தண்டனை வழங்கப்பட வேண்டுமெனவும் கருத்துத் தெரிவித்தனர்.

இதன் பின்னர் ஆர்ப்பாட்ட இடத்திற்கு வருகை தந்த மூதூர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சோமநுவர அவர்களிடம் தமது கோரிக்கை அடங்கிய மகஜர் ஒன்றையும் ஆர்ப்பாட்டக்காரர்கள்  கையளித்து அங்கிருந்து களைந்து சென்றனர். 

மூதூர் -பொலிஸ் பிரிவிலுள்ள கிளிவெட்டி பகுதியில் உள்ள பாழடைந்த கிணற்றில் சேருநுவர -தங்கநகர் யுவதியின் சடலம் கடந்த 05 ஆம் திகதி மீட்கப்பட்ட பின்னணியில் இவ் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.

கொலைப் பின்னணியில் யுவதியின் காதலன் சந்தேகத்தின் பேரில் கடந்த 08 ஆம் திகதி கைது செய்யப்பட்டு மூதூர் நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து இம் மாதம் 19 வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 


தங்கநகர் யுவதியின் கொலைக்கு நீதி கோரி ஆர்ப்பாட்டம்  சேருநுவர - தங்கநகர் யுவதியின் கொலைக்கு நீதி கோரியும், பெண்களுக்கெதிரான வன்முறை சம்பவங்களை கண்டித்தும் இன்று புதன்கிழமை   பேரணியும், கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமும் இடம்பெற்றது.இதனை சேருநுவர -தங்கநகர் பகுதியைச் சேர்ந்த மாதர் சங்கங்கள், கிராம அபிவிருத்திச் சங்கம் ,உள்ளூர் சமூக அமைப்புகள் ஒன்றிணைந்து ஏற்பாடு செய்திருந்தனர்.இதில் அதிகளவான பெண்கள் கலந்து கொண்டனர்.இதன்போது தங்கநகர் பகுதியிலிருந்து பேரணியாக வந்தவர்கள் கிளிவெட்டி பிரதான வீதியில் நின்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதன்போது யுவதியின் கொலைச் சம்பவத்தின் பிரதான சந்தேக நபரின் வீட்டுக்குச் செல்லும் வீதியில் பொலிஸார் நிறுத்தப்பட்டிருந்தனர்.எனினும் பொலிஸாரின் தடையையும் மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் சந்தேக நபரின் கிளிவெட்டி வீட்டுக்கு முன்னாள் நின்று கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இதன் பின்னர் அங்கிருந்து நகர்ந்து நடைபவணியாச் சென்று  கிளிவெட்டி பிரதான வீதியில் நின்று சுலோகங்களை ஏந்தி கோசங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.அத்தோடு சேருநுவர -தங்கநகர் யுவதி கொலையின் பிரதான சூத்திரதாரி விடுதலை செய்யப்படக் கூடாது அவருக்கு உயர்ந்த பட்ச தண்டனை வழங்கப்பட வேண்டுமெனவும் கருத்துத் தெரிவித்தனர்.இதன் பின்னர் ஆர்ப்பாட்ட இடத்திற்கு வருகை தந்த மூதூர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சோமநுவர அவர்களிடம் தமது கோரிக்கை அடங்கிய மகஜர் ஒன்றையும் ஆர்ப்பாட்டக்காரர்கள்  கையளித்து அங்கிருந்து களைந்து சென்றனர். மூதூர் -பொலிஸ் பிரிவிலுள்ள கிளிவெட்டி பகுதியில் உள்ள பாழடைந்த கிணற்றில் சேருநுவர -தங்கநகர் யுவதியின் சடலம் கடந்த 05 ஆம் திகதி மீட்கப்பட்ட பின்னணியில் இவ் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.கொலைப் பின்னணியில் யுவதியின் காதலன் சந்தேகத்தின் பேரில் கடந்த 08 ஆம் திகதி கைது செய்யப்பட்டு மூதூர் நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து இம் மாதம் 19 வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Advertisement

Advertisement