ஸ்ரீகொத்தாவில் அமைந்துள்ள ஐக்கிய தேசிய கட்சியின் தலைமை காரியாலயத்திற்கு முன்பாக போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மக்கள் போராட்டத்தின் குடிமக்கள் என்ற அமைப்பின் உறுப்பினர்களே இன்று இந்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர், பாலித ரங்கே பண்டார நேற்றைய ஊடக சந்திப்பில் முன்வைத்த கருத்தினை எதிர்த்தே தற்போது ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி தேர்தலை 2 வருடங்கள் பிற்போடவேண்டும் என அவர் முன்வைத்த கருத்தானது ஜனநாயகத்துக்கு விரோதமானது என ஆர்ப்பாட்டக்காரர்கள் கூறியுள்ளனர்.
மேலும் உடனடியாக ஜனாதிபதி தேர்தல் நடத்தப்பட வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்நிலையில் ஆர்ப்பாட்டத்தை கட்டுப்படுத்தும் முகமாக பொலிஸார் இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
ஐக்கிய தேசிய கட்சியின் தலைமை காரியாலயத்திற்கு முன் போராட்டம் - குவிக்கப்பட்ட பொலிஸார். ஸ்ரீகொத்தாவில் அமைந்துள்ள ஐக்கிய தேசிய கட்சியின் தலைமை காரியாலயத்திற்கு முன்பாக போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.மக்கள் போராட்டத்தின் குடிமக்கள் என்ற அமைப்பின் உறுப்பினர்களே இன்று இந்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர், பாலித ரங்கே பண்டார நேற்றைய ஊடக சந்திப்பில் முன்வைத்த கருத்தினை எதிர்த்தே தற்போது ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.ஜனாதிபதி தேர்தலை 2 வருடங்கள் பிற்போடவேண்டும் என அவர் முன்வைத்த கருத்தானது ஜனநாயகத்துக்கு விரோதமானது என ஆர்ப்பாட்டக்காரர்கள் கூறியுள்ளனர்.மேலும் உடனடியாக ஜனாதிபதி தேர்தல் நடத்தப்பட வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இந்நிலையில் ஆர்ப்பாட்டத்தை கட்டுப்படுத்தும் முகமாக பொலிஸார் இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர்.