• May 26 2026

மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கல்!

shanu / Feb 28th 2026, 12:16 pm
image

பாடசாலை மாணவர்களின் கல்வி செயற்பாடுகளை மேம்படுத்தும் நோக்கில் புத்தக பை, கற்றல் உபகரணங்கள் இன்றையதினம் வழங்கி வைக்கப்பட்டிருந்தது.


புதுக்குடியிருப்பு பிரதேச சபை தவிசாளர் வேலாயுதம் கரிகாலனின் ஒழுங்குபடுத்தலில் Tamil Ad மற்றும் BBK Partnership ன் நிதிப் பங்களிப்பில் இன்று (28.02.2026) காலை 

கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு மந்துவில் மற்றும் உடையார்கட்டு பகுதிகளில் நடைபெற்றது.


புதுக்குடியிருப்பு, மந்துவில், வேணாவில், மூங்கிலாறு, உடையார்கட்டு, இளங்கோபுரம், மாணிக்கபுரம் மற்றும் வள்ளுவர்புரம் ஆகிய பகுதிகளில் இருந்து தெரிவு செய்யப்பட்ட 60 பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.


இந்நிகழ்வில் புதுக்குடியிருப்பு பிரதேச சபை தவிசாளர் வே. கரிகாலன், பிரதேச சபை உறுப்பினர்களான சுதாகரன் வளர்மதி, அற்புதம் சற்குணதாஸ், ஓய்வு நிலை கிராம அலுவலர், கிராம மட்ட அமைப்புகளின் பிரதிநிதிகள், மகளீர் அமைப்பின் இணைப்பாளர் தீபன் அனுஸ்ரியா, மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


மாணவர்களின் கல்வி முன்னேற்றத்திற்காக இத்தகைய உதவிகள் தொடர்ந்து வழங்கப்படும் என ஏற்பாட்டாளர்களால் தெரிவிக்கப்பட்டிருந்தது.


மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கல் பாடசாலை மாணவர்களின் கல்வி செயற்பாடுகளை மேம்படுத்தும் நோக்கில் புத்தக பை, கற்றல் உபகரணங்கள் இன்றையதினம் வழங்கி வைக்கப்பட்டிருந்தது.புதுக்குடியிருப்பு பிரதேச சபை தவிசாளர் வேலாயுதம் கரிகாலனின் ஒழுங்குபடுத்தலில் Tamil Ad மற்றும் BBK Partnership ன் நிதிப் பங்களிப்பில் இன்று (28.02.2026) காலை கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு மந்துவில் மற்றும் உடையார்கட்டு பகுதிகளில் நடைபெற்றது.புதுக்குடியிருப்பு, மந்துவில், வேணாவில், மூங்கிலாறு, உடையார்கட்டு, இளங்கோபுரம், மாணிக்கபுரம் மற்றும் வள்ளுவர்புரம் ஆகிய பகுதிகளில் இருந்து தெரிவு செய்யப்பட்ட 60 பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.இந்நிகழ்வில் புதுக்குடியிருப்பு பிரதேச சபை தவிசாளர் வே. கரிகாலன், பிரதேச சபை உறுப்பினர்களான சுதாகரன் வளர்மதி, அற்புதம் சற்குணதாஸ், ஓய்வு நிலை கிராம அலுவலர், கிராம மட்ட அமைப்புகளின் பிரதிநிதிகள், மகளீர் அமைப்பின் இணைப்பாளர் தீபன் அனுஸ்ரியா, மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.மாணவர்களின் கல்வி முன்னேற்றத்திற்காக இத்தகைய உதவிகள் தொடர்ந்து வழங்கப்படும் என ஏற்பாட்டாளர்களால் தெரிவிக்கப்பட்டிருந்தது.

Advertisement

Advertisement

Advertisement