மாற்றுத்திறனாளிகளின் சிறப்பு அம்சங்களை, தேவைகளை இனங்கண்டு தேர்தல்கள் ஆணைக்குழுவினால் தற்காலிக அடையாள அட்டை வழங்கும் தேசிய வேலைத்திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு புத்தளம் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
தேர்தல் ஆணைக்குழு, மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அமைப்பு மற்றும் பஃப்ரல் அமைப்பு ஆகியவை இணைந்து இந்தத் திட்டத்தை செயல்படுத்துகின்றன.
டிசம்பர் 3ஆம் திகதி சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு தற்காலிக அடையாள அட்டைகள் வழங்கப்படுவதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதன்போது, புத்தளம் மாவட்டத்தில் சுமார் 500 இற்கும் அதிகமான மாற்றுத் திறனாளிகளுக்கு அடையாள அட்டைகள் வழங்கப்படவுள்ளன.
எனினும், அங்குரார்ப்பண நிகழ்வின் போது 75 பேருக்கு அடையாள அடையாள அட்டைகள் உத்தியோகப்பூர்வமாக வழங்கப்பட்டன.
இந்த தற்காலிக அடையாள அட்டைகள் நாடளாவிய ரீதியில் வாழும் சுமார் 5000 மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்பட உள்ளன.
சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலுக்காகவும், வாக்களிக்கத் தகுதியுள்ள 18 வயதுக்கு மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளின் அரசியல் உரிமைகளை உறுதிப்படுத்துவதே இந்த வேலைத்திட்டத்தின் நோக்கமாகும் என தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க ஆரம்ப நிகழ்வில் உரையாற்றிய போது தெரிவித்துள்ளார்.
புத்தளத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு தற்காலிக அடையாள அட்டை வழங்கிவைப்பு.samugammedia மாற்றுத்திறனாளிகளின் சிறப்பு அம்சங்களை, தேவைகளை இனங்கண்டு தேர்தல்கள் ஆணைக்குழுவினால் தற்காலிக அடையாள அட்டை வழங்கும் தேசிய வேலைத்திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு புத்தளம் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.தேர்தல் ஆணைக்குழு, மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அமைப்பு மற்றும் பஃப்ரல் அமைப்பு ஆகியவை இணைந்து இந்தத் திட்டத்தை செயல்படுத்துகின்றன.டிசம்பர் 3ஆம் திகதி சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு தற்காலிக அடையாள அட்டைகள் வழங்கப்படுவதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதன்போது, புத்தளம் மாவட்டத்தில் சுமார் 500 இற்கும் அதிகமான மாற்றுத் திறனாளிகளுக்கு அடையாள அட்டைகள் வழங்கப்படவுள்ளன.எனினும், அங்குரார்ப்பண நிகழ்வின் போது 75 பேருக்கு அடையாள அடையாள அட்டைகள் உத்தியோகப்பூர்வமாக வழங்கப்பட்டன.இந்த தற்காலிக அடையாள அட்டைகள் நாடளாவிய ரீதியில் வாழும் சுமார் 5000 மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்பட உள்ளன.சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலுக்காகவும், வாக்களிக்கத் தகுதியுள்ள 18 வயதுக்கு மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளின் அரசியல் உரிமைகளை உறுதிப்படுத்துவதே இந்த வேலைத்திட்டத்தின் நோக்கமாகும் என தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க ஆரம்ப நிகழ்வில் உரையாற்றிய போது தெரிவித்துள்ளார்.