• Nov 14 2024

யாழில் சமூக பெரியார்களை கௌரவித்து முத்திரைகள் வெளியீடு...!

Sharmi / May 20th 2024, 3:09 pm
image

யாழ்ப்பாணம் நண்பர்களின் பத்தாவது வருட நிறைவு மற்றும் சமூகப் பெரியோர்களின் கௌரவிப்பு நிகழ்வும் நேற்றையதினம் யாழிலுள்ள தனியார் விடுதியில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் கலந்துகொண்டார்.

இதன்போது, சமூக பெரியார்களை கௌரவித்து முத்திரைகள் வெளியிட்டு வைக்கப்பட்டதுடன், வட்டூர் இராமநாதன் புதல்வர்களின் நாதசங்கமும் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் உரையாற்றிய வடமாகாண ஆளுநர்,

“நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையில் இந்த நிகழ்வு அமைந்துள்ளது.

ஒரு சமூகம் மீண்டெழுவதற்கான பல தேவைகள் காணப்படுகின்றன. இன்றைய தினம் மதப் பெரியார்கள், கல்வியியலாளர்கள், கலைத்துறை சார்ந்தவர்கள் என அனைத்து தரப்பினரும் கௌரவிக்கப்பட்டமை சிறப்பான நல்லிணக்க செயற்பாடாகும். 

எமது செயற்பாடுகளுக்கு அயல் நாடாகிய இந்தியா பல வழிகளிலும் தன்னுடைய ஒத்துழைப்பை வழங்கி வருகின்றது. அதேபோல எதிர்வரும் 24ஆம் திகதி தொடக்கம் 26ஆம் திகதி வரை வடக்கில் பல திட்டங்களை ஜனாதிபதி அங்குரார்ப்பணம் செய்து வைக்கவுள்ளார்.

அதேவேளை பட்டதாரி ஆசிரியர்களுக்கான நியமனங்கள் வழங்கப்படவுள்ளன. காணி உரிமங்கள் கையளிக்கப்படவுள்ளன. இவ்வாறாக வடக்கு மாகாண அபிவிருத்திக்கான பல வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் தெரிவித்தார்.



யாழில் சமூக பெரியார்களை கௌரவித்து முத்திரைகள் வெளியீடு. யாழ்ப்பாணம் நண்பர்களின் பத்தாவது வருட நிறைவு மற்றும் சமூகப் பெரியோர்களின் கௌரவிப்பு நிகழ்வும் நேற்றையதினம் யாழிலுள்ள தனியார் விடுதியில் இடம்பெற்றது.இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் கலந்துகொண்டார்.இதன்போது, சமூக பெரியார்களை கௌரவித்து முத்திரைகள் வெளியிட்டு வைக்கப்பட்டதுடன், வட்டூர் இராமநாதன் புதல்வர்களின் நாதசங்கமும் இடம்பெற்றது.இந்நிகழ்வில் உரையாற்றிய வடமாகாண ஆளுநர்,“நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையில் இந்த நிகழ்வு அமைந்துள்ளது.ஒரு சமூகம் மீண்டெழுவதற்கான பல தேவைகள் காணப்படுகின்றன. இன்றைய தினம் மதப் பெரியார்கள், கல்வியியலாளர்கள், கலைத்துறை சார்ந்தவர்கள் என அனைத்து தரப்பினரும் கௌரவிக்கப்பட்டமை சிறப்பான நல்லிணக்க செயற்பாடாகும். எமது செயற்பாடுகளுக்கு அயல் நாடாகிய இந்தியா பல வழிகளிலும் தன்னுடைய ஒத்துழைப்பை வழங்கி வருகின்றது. அதேபோல எதிர்வரும் 24ஆம் திகதி தொடக்கம் 26ஆம் திகதி வரை வடக்கில் பல திட்டங்களை ஜனாதிபதி அங்குரார்ப்பணம் செய்து வைக்கவுள்ளார்.அதேவேளை பட்டதாரி ஆசிரியர்களுக்கான நியமனங்கள் வழங்கப்படவுள்ளன. காணி உரிமங்கள் கையளிக்கப்படவுள்ளன. இவ்வாறாக வடக்கு மாகாண அபிவிருத்திக்கான பல வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement