கிளிநொச்சி மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற ஆலயங்களில் ஒன்றான கரைச்சி புளியம்பொக்கணை நாகதம்பிரான் ஆலய வருடாந்த பங்குனி உத்திர பொங்கல் திருவிழாவின் முன்னாயத்த கலந்துரையாடல் இன்றைய தினம்(06) ஆலய முன்றலில் இடம்பெற்றது.
கிளிநொச்சி மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் முரளிதரன் தலைமையில் இடம்பெற்ற இக் கலந்துரையாடலில், கண்டாவளை பிரதேச செயலாளர், கிளிநொச்சி மாவட்ட பிராந்திய சுகாதார பணிப்பாளர், இலங்கை போக்குவரத்து சபையினர், கரைச்சி பிரதேச சபையினர், இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தினர், கிராம சேவையாளர்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இதன்போது எதிர்வரும் 17 ஆம் திகதி விளக்கு வைப்புடன் ஆரம்பமாகி அன்றைய தினமே பண்டமெடுக்கும் நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டு தொடர்ந்து 24 ஆம் திகதி வரை பங்குனி உத்திர பொங்கல் நிகழ்வுகள் நடைபெறவுள்ளது.
24ஆம் திகதியன்று பொங்கல் நிகழ்வுகள் பாரம்பரிய முறைப்படி நடைபெறவுள்ளதுடன், அன்றைய தினம் மக்களின் பாதுகாப்புக்கென 600க்கும் மேற்பட்ட பொலிஸார் பாதுகாப்புக்காக கடமையில் ஈடுபடவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
அத்தோடு ஆலயத் திருவிழா காலங்களில் பொலித்தீன் பாவனை முற்றாக தடை செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டதுடன், ஏனைய நடவடிக்கைகள் வழமை போன்று ஆலய நிர்வாகத்தினரால் முன்னெடுக்கப்படும் எனவும் தீர்மானங்கள் எடுக்கப்பட்டது.
புளியம்பொக்கணை நாகதம்பிரான் ஆலய பங்குனி உத்திர பொங்கல் திருவிழாவின் முன்னாயத்த கலந்துரையாடல். கிளிநொச்சி மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற ஆலயங்களில் ஒன்றான கரைச்சி புளியம்பொக்கணை நாகதம்பிரான் ஆலய வருடாந்த பங்குனி உத்திர பொங்கல் திருவிழாவின் முன்னாயத்த கலந்துரையாடல் இன்றைய தினம்(06) ஆலய முன்றலில் இடம்பெற்றது.கிளிநொச்சி மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் முரளிதரன் தலைமையில் இடம்பெற்ற இக் கலந்துரையாடலில், கண்டாவளை பிரதேச செயலாளர், கிளிநொச்சி மாவட்ட பிராந்திய சுகாதார பணிப்பாளர், இலங்கை போக்குவரத்து சபையினர், கரைச்சி பிரதேச சபையினர், இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தினர், கிராம சேவையாளர்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர். இதன்போது எதிர்வரும் 17 ஆம் திகதி விளக்கு வைப்புடன் ஆரம்பமாகி அன்றைய தினமே பண்டமெடுக்கும் நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டு தொடர்ந்து 24 ஆம் திகதி வரை பங்குனி உத்திர பொங்கல் நிகழ்வுகள் நடைபெறவுள்ளது. 24ஆம் திகதியன்று பொங்கல் நிகழ்வுகள் பாரம்பரிய முறைப்படி நடைபெறவுள்ளதுடன், அன்றைய தினம் மக்களின் பாதுகாப்புக்கென 600க்கும் மேற்பட்ட பொலிஸார் பாதுகாப்புக்காக கடமையில் ஈடுபடவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. அத்தோடு ஆலயத் திருவிழா காலங்களில் பொலித்தீன் பாவனை முற்றாக தடை செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டதுடன், ஏனைய நடவடிக்கைகள் வழமை போன்று ஆலய நிர்வாகத்தினரால் முன்னெடுக்கப்படும் எனவும் தீர்மானங்கள் எடுக்கப்பட்டது.