• Nov 28 2024

நுளம்புத்திரி பயன்படுத்துவதனால் நுரையீரல் பாதிப்பு - அதிர்ச்சித் தகவல்

Tharun / Jul 22nd 2024, 6:27 pm
image

நுரையீரல் என்பது மனித உடலில் இருக்கும் மிக முக்கிய உறுப்பு ஆகும். பாக்டீரியா மற்றும் கிருமித் தொற்றால் நுரையீரல் பெரிதும் பாதிக்கப்படுகின்றது. இதனால் மூச்சுக் குழாயில் அடைப்பை ஏற்படுத்தி உயிரிழப்பை கூட ஏற்படுத்துகின்றது.

நுரையீரல் நம் உடலின் முக்கிய உள் உறுப்பு. காற்றில் உள்ள பிராண வாயுவை ரத்தத்தில் சேர்ப்பதும், கரியமில வாய்வை பிரித்து வெளியேற்றுவதும் நுரையீரலின் முக்கியப்பணி.

30 வயதை கடந்த ஆண்களும், பெண்களும் தான் அதிகமாக நுரையீரல் பாதிப்பினால் பாதிக்கப்படுகின்றனர் என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இதற்கு 3 காரணங்கள் உண்டு.

ஒன்று மரபணுக்கள் மூலமாகவோ அல்லது சுற்றுச்சூழல் காரணங்களாகவோ அதாவது காற்று மாசுபாடு, விறகு அடுப்பு பயன்படுத்துவது, கொசுவர்த்தி பயன்படுத்துதல். வெல்டிங் கியாஸ் போன்ற பல காரணங்களால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதினாலும் நுரையீரல் பாதிப்பு ஏற்படுகிறது.

அதுமட்டுமில்லாமல் உணவுமுறைகளினாலோ அல்லது சூரிய வெளிச்சம் அதிகம் இல்லாத பகுதிகளில் வசிப்பவர்களுக்கு கூட நுரையீரல் பாதிப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது.

நுரையீரல் தொற்று ஏற்படுவதற்கு பல காரணங்கள் உள்ளன. அதில் முக்கியமாக புகைப்பிடிப்பதினால் நுரையீரல் அதிகமாக பாதிக்கப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் கொசுவர்த்தியில் இருந்து ஏற்படும் புகையின் மூலமும் நுரையீரல் பாதிக்கப்படும்.

ஏனென்றால் நுளம்புத்திரியை ஏற்றிவிட்டு நாம் வீட்டின் கதவை அடைத்துவிடுகிறோம். அந்த புகை இரவு முழுவதும் அறையை சுற்றியே இருக்கும் அந்த காற்றை தான் நாம் சுவாசிப்போம். நுளம்புத்திரி புகையினால் நுரையீரல் பாதிப்பு அதிகம் இருக்கும் என்று மருத்துவ நிபுணர்கள் ஆய்வறிக்கையில் கூறியுள்ளனர்.

இதுவும் கிட்டத்தட்ட புகைப்பிடிப்பதற்கு சமமாகவே கருதப்படுகிறது. புகைப்பழக்கத்தால் மூச்சுவிடுவதில் சிரமங்கள் ஏற்படும். நாளடைவில் ரத்த அழுத்தம் அதிகரிக்கும்.

நுளம்புத்திரி பயன்படுத்துவதனால் நுரையீரல் பாதிப்பு - அதிர்ச்சித் தகவல் நுரையீரல் என்பது மனித உடலில் இருக்கும் மிக முக்கிய உறுப்பு ஆகும். பாக்டீரியா மற்றும் கிருமித் தொற்றால் நுரையீரல் பெரிதும் பாதிக்கப்படுகின்றது. இதனால் மூச்சுக் குழாயில் அடைப்பை ஏற்படுத்தி உயிரிழப்பை கூட ஏற்படுத்துகின்றது.நுரையீரல் நம் உடலின் முக்கிய உள் உறுப்பு. காற்றில் உள்ள பிராண வாயுவை ரத்தத்தில் சேர்ப்பதும், கரியமில வாய்வை பிரித்து வெளியேற்றுவதும் நுரையீரலின் முக்கியப்பணி.30 வயதை கடந்த ஆண்களும், பெண்களும் தான் அதிகமாக நுரையீரல் பாதிப்பினால் பாதிக்கப்படுகின்றனர் என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இதற்கு 3 காரணங்கள் உண்டு.ஒன்று மரபணுக்கள் மூலமாகவோ அல்லது சுற்றுச்சூழல் காரணங்களாகவோ அதாவது காற்று மாசுபாடு, விறகு அடுப்பு பயன்படுத்துவது, கொசுவர்த்தி பயன்படுத்துதல். வெல்டிங் கியாஸ் போன்ற பல காரணங்களால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதினாலும் நுரையீரல் பாதிப்பு ஏற்படுகிறது.அதுமட்டுமில்லாமல் உணவுமுறைகளினாலோ அல்லது சூரிய வெளிச்சம் அதிகம் இல்லாத பகுதிகளில் வசிப்பவர்களுக்கு கூட நுரையீரல் பாதிப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது.நுரையீரல் தொற்று ஏற்படுவதற்கு பல காரணங்கள் உள்ளன. அதில் முக்கியமாக புகைப்பிடிப்பதினால் நுரையீரல் அதிகமாக பாதிக்கப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் கொசுவர்த்தியில் இருந்து ஏற்படும் புகையின் மூலமும் நுரையீரல் பாதிக்கப்படும்.ஏனென்றால் நுளம்புத்திரியை ஏற்றிவிட்டு நாம் வீட்டின் கதவை அடைத்துவிடுகிறோம். அந்த புகை இரவு முழுவதும் அறையை சுற்றியே இருக்கும் அந்த காற்றை தான் நாம் சுவாசிப்போம். நுளம்புத்திரி புகையினால் நுரையீரல் பாதிப்பு அதிகம் இருக்கும் என்று மருத்துவ நிபுணர்கள் ஆய்வறிக்கையில் கூறியுள்ளனர்.இதுவும் கிட்டத்தட்ட புகைப்பிடிப்பதற்கு சமமாகவே கருதப்படுகிறது. புகைப்பழக்கத்தால் மூச்சுவிடுவதில் சிரமங்கள் ஏற்படும். நாளடைவில் ரத்த அழுத்தம் அதிகரிக்கும்.

Advertisement

Advertisement

Advertisement