• Nov 23 2024

புத்தளம் மாவட்ட சிறு கைத்தொழில் முயற்சியாளர்களின் கண்காட்சி..!

Sharmi / Sep 7th 2024, 10:15 pm
image

புத்தளம் பாலாவி முஸ்லிம் பெண்கள் அபிவிருத்தி நம்பிக்கையகத்தின் ஏற்பாட்டில் சிறு கைத்தொழில் முயற்சியாளர்களுடைய மாபெரும் கைத்தொழில் கண்காட்சியும் , மலிவு விற்பனையும் நேற்று (06) வெள்ளிக்கிழமையும், இன்று (07) சனிக்கிழமையும் புத்தளம் நகர மண்டபத்தில் இடம்பெற்றது.

முஸ்லிம் பெண்கள் அபிவிருத்தி நம்பிக்கையகத்தின் நிறைவேற்று பணிப்பாளர் எம்.ஜுவைரியா தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழழ்வில், புத்தளம் மாவட்டச் செயலாளர் எச்.எம்.எஸ்.பி.ஹேரத் மற்றும் புத்தளம் மாவட்ட செயலகத்தின் கைத்தொழில் அபிவிருத்தி சபையின் பிரதி பணிப்பாளர் கயன் சமன்புர சில்வா உட்பட தெங்கு, பனை அபிவிருத்தி சபையின் உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

முஸ்லிம் பெண்கள் அபிவிருத்தி நம்பிக்கையகத்தினால் பயிற்றுவிக்கப்பட்ட பெண்களுடைய பாரம்பரியமான முறையில் உற்பத்தி செய்யப்பட்ட கைவினைப் பொருட்கள், சவர்க்கார வகைகள், ஸ்க்ரீன் பிரிண்டிங், அலங்கார பொருட்கள், ஆடை வகைகள், மூலிகைச் செடிகள், பூ மரங்கள் மற்றும் சுத்தமான உணவு வகைகள் என அழகு சாதனப்பொருட்கள், தென்னை பாகங்களினால் உற்பத்தி செய்யப்படும் ஆபரணங்கள், தும்பினால் தயாரிக்கப்படும் பாபிஸ், தேங்காய் சிரட்டையினால் செய்யக்கூடிய ஆபரணங்கள், அலங்காரப் பொருட்கள், வீட்டுப்பாவனை பொருட்கள் மற்றும் தேங்காய் பால், தேங்காய் துருவலினால் தயாரிக்கக் கூடிய உணவு வகைகள், உடனடியாக தயாரித்து வழங்கும் உணவுகள் ஆகிய உற்பத்திகள் காட்சிப்படுத்தப்பட்டதுடன், மலிவு விலைகளில் விற்பனையும் செய்யப்பட்டன.

அத்துடன், தொழில் முயற்சியாண்மை தொடர்பில் ஐந்து நாட்கள் பயிற்சி நெறிகளை நிறைவுசெய்த பெண் தொழில் முயற்சியாளர்களுக்கு இதன்போது அதிதிகளினால் சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டன.

புத்தளம் மாவட்டத்தில் இன, மத பேதங்களுக்கு அப்பால் பெண்களுக்கு இவ்வாறு சுயதொழில் முயற்சி தொடர்பில் தேவயான வழிகாட்டல்களை வழங்கி, பெண் தொழில் முயற்சியாளர்களின் உற்பத்திக்கு முறைப்படி சந்தைவாய்ப்புக்களையும் பெற்றுக்கொடுக்கும் முஸ்லிம் பெண்கள் அபிவிருத்தி நம்பிக்கையகத்தின் முயற்சிக்கு பாராட்டை தெரிவித்த புத்தளம் மாவட்டச் செயலாளர் எச்.எம்.எஸ்.பி.ஹேரத், இதற்கு மாவட்ட செயலகத்தினால் தேவையான ஒத்துழைப்புக்களையும் வழங்குவதாகவும் இதன்போது குறிப்பிட்டார்.

முஸ்லிம் பெண்கள் அபிவிருத்தி நம்பிக்கையகம் பெண்களின் உரிமை மற்றும் பாதுகாப்பு தொடர்பில் சேவை செய்து வருகின்ற அரச சார்பற்ற நிறுவனமாகும். இந்த நிறுவனம் புத்தளம் மாவட்டத்தில் வீட்டு வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு 12 வருடங்களுக்கு மேலாக சேவை வழங்கி வருகின்றது.

முஸ்லிம் பெண்கள் அபிவிருத்தி நம்பிக்கையகத்தினால் வீட்டு வன்முறையால் பாதிக்கப்பட்ட, பின்தங்கிய மற்றும் முன்னேற முயற்சிக்கும் பெண்களை பொருளாதார ரீதியாக வலுப்படுத்துவதற்காக புத்தளம் மாவட்டத்திலுள்ள பெண்தலைமைத்துவக் குடும்பங்கள், நாளாந்த கூலி தொழிலில் ஈடுபடுகின்ற பெண்களில் 150  மேற்பட்ட பெண்களை தெரிவுசெய்து அவர்களுக்கு பல்வேறு தொழில் பயிற்சிகளை வழங்கியதோடு கணக்கீடு, முகாமைத்துவம் மற்றும் பொதியிடல் பயிற்சியும் வழங்கப்பட்டன.

இத்திட்டத்தின் பிரதான அம்சமாக பயிற்றுவிக்கப்பட்ட சிறு கைத்தொழில் முயற்சியாளர்களை ஒன்றிணைத்து வலையமைப்பு உருவாக்கப்பட்டு அதனை அரச மற்றும் அரச சார்பற்ற அமைப்புகளுடன் ஒன்றிணைக்கும் செயல்பாடுகளையும் மேற்கொண்டுள்ளன.

புத்தளம் மாவட்ட பெண் தொழில் முயற்சியாளர்களின் உற்பத்திகளை சந்தைப்படுத்துவதை நோக்காகக் கொண்டு முஸ்லிம் பெண்கள் அபிவிருத்தி நம்பிக்கையகத்தினால் கடந்த காலங்களில் கொழும்பு பண்டாரநாயக்கா ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்திலும் மற்றும் புத்தளம் நகர மண்டபத்திலும் கண்காட்சி நடைபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

புத்தளம் மாவட்ட சிறு கைத்தொழில் முயற்சியாளர்களின் கண்காட்சி. புத்தளம் பாலாவி முஸ்லிம் பெண்கள் அபிவிருத்தி நம்பிக்கையகத்தின் ஏற்பாட்டில் சிறு கைத்தொழில் முயற்சியாளர்களுடைய மாபெரும் கைத்தொழில் கண்காட்சியும் , மலிவு விற்பனையும் நேற்று (06) வெள்ளிக்கிழமையும், இன்று (07) சனிக்கிழமையும் புத்தளம் நகர மண்டபத்தில் இடம்பெற்றது.முஸ்லிம் பெண்கள் அபிவிருத்தி நம்பிக்கையகத்தின் நிறைவேற்று பணிப்பாளர் எம்.ஜுவைரியா தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழழ்வில், புத்தளம் மாவட்டச் செயலாளர் எச்.எம்.எஸ்.பி.ஹேரத் மற்றும் புத்தளம் மாவட்ட செயலகத்தின் கைத்தொழில் அபிவிருத்தி சபையின் பிரதி பணிப்பாளர் கயன் சமன்புர சில்வா உட்பட தெங்கு, பனை அபிவிருத்தி சபையின் உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.முஸ்லிம் பெண்கள் அபிவிருத்தி நம்பிக்கையகத்தினால் பயிற்றுவிக்கப்பட்ட பெண்களுடைய பாரம்பரியமான முறையில் உற்பத்தி செய்யப்பட்ட கைவினைப் பொருட்கள், சவர்க்கார வகைகள், ஸ்க்ரீன் பிரிண்டிங், அலங்கார பொருட்கள், ஆடை வகைகள், மூலிகைச் செடிகள், பூ மரங்கள் மற்றும் சுத்தமான உணவு வகைகள் என அழகு சாதனப்பொருட்கள், தென்னை பாகங்களினால் உற்பத்தி செய்யப்படும் ஆபரணங்கள், தும்பினால் தயாரிக்கப்படும் பாபிஸ், தேங்காய் சிரட்டையினால் செய்யக்கூடிய ஆபரணங்கள், அலங்காரப் பொருட்கள், வீட்டுப்பாவனை பொருட்கள் மற்றும் தேங்காய் பால், தேங்காய் துருவலினால் தயாரிக்கக் கூடிய உணவு வகைகள், உடனடியாக தயாரித்து வழங்கும் உணவுகள் ஆகிய உற்பத்திகள் காட்சிப்படுத்தப்பட்டதுடன், மலிவு விலைகளில் விற்பனையும் செய்யப்பட்டன.அத்துடன், தொழில் முயற்சியாண்மை தொடர்பில் ஐந்து நாட்கள் பயிற்சி நெறிகளை நிறைவுசெய்த பெண் தொழில் முயற்சியாளர்களுக்கு இதன்போது அதிதிகளினால் சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டன.புத்தளம் மாவட்டத்தில் இன, மத பேதங்களுக்கு அப்பால் பெண்களுக்கு இவ்வாறு சுயதொழில் முயற்சி தொடர்பில் தேவயான வழிகாட்டல்களை வழங்கி, பெண் தொழில் முயற்சியாளர்களின் உற்பத்திக்கு முறைப்படி சந்தைவாய்ப்புக்களையும் பெற்றுக்கொடுக்கும் முஸ்லிம் பெண்கள் அபிவிருத்தி நம்பிக்கையகத்தின் முயற்சிக்கு பாராட்டை தெரிவித்த புத்தளம் மாவட்டச் செயலாளர் எச்.எம்.எஸ்.பி.ஹேரத், இதற்கு மாவட்ட செயலகத்தினால் தேவையான ஒத்துழைப்புக்களையும் வழங்குவதாகவும் இதன்போது குறிப்பிட்டார்.முஸ்லிம் பெண்கள் அபிவிருத்தி நம்பிக்கையகம் பெண்களின் உரிமை மற்றும் பாதுகாப்பு தொடர்பில் சேவை செய்து வருகின்ற அரச சார்பற்ற நிறுவனமாகும். இந்த நிறுவனம் புத்தளம் மாவட்டத்தில் வீட்டு வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு 12 வருடங்களுக்கு மேலாக சேவை வழங்கி வருகின்றது.முஸ்லிம் பெண்கள் அபிவிருத்தி நம்பிக்கையகத்தினால் வீட்டு வன்முறையால் பாதிக்கப்பட்ட, பின்தங்கிய மற்றும் முன்னேற முயற்சிக்கும் பெண்களை பொருளாதார ரீதியாக வலுப்படுத்துவதற்காக புத்தளம் மாவட்டத்திலுள்ள பெண்தலைமைத்துவக் குடும்பங்கள், நாளாந்த கூலி தொழிலில் ஈடுபடுகின்ற பெண்களில் 150  மேற்பட்ட பெண்களை தெரிவுசெய்து அவர்களுக்கு பல்வேறு தொழில் பயிற்சிகளை வழங்கியதோடு கணக்கீடு, முகாமைத்துவம் மற்றும் பொதியிடல் பயிற்சியும் வழங்கப்பட்டன.இத்திட்டத்தின் பிரதான அம்சமாக பயிற்றுவிக்கப்பட்ட சிறு கைத்தொழில் முயற்சியாளர்களை ஒன்றிணைத்து வலையமைப்பு உருவாக்கப்பட்டு அதனை அரச மற்றும் அரச சார்பற்ற அமைப்புகளுடன் ஒன்றிணைக்கும் செயல்பாடுகளையும் மேற்கொண்டுள்ளன.புத்தளம் மாவட்ட பெண் தொழில் முயற்சியாளர்களின் உற்பத்திகளை சந்தைப்படுத்துவதை நோக்காகக் கொண்டு முஸ்லிம் பெண்கள் அபிவிருத்தி நம்பிக்கையகத்தினால் கடந்த காலங்களில் கொழும்பு பண்டாரநாயக்கா ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்திலும் மற்றும் புத்தளம் நகர மண்டபத்திலும் கண்காட்சி நடைபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement