• Nov 24 2024

பணிப்புறக்கணிப்பால் சுமார் 10 கோடி நட்டம் - ரயில் ஊழியர்கள் பதவி நீக்கம்..! அமைச்சர் அதிரடி

Chithra / Jul 11th 2024, 5:00 pm
image

 


பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள ரயில் நிலைய அதிபர்கள் சேவையிலிருந்து நீக்கப்பட்டதாக கருதி உத்தியோகபூர்வ கடிதம் அனுப்பப்பட்டதாக போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

மக்களை நெருக்கடிக்குள்ளாக்கும் செயற்பாடுகளை கோட்டாபய ராஜபக்‌ஷ பார்த்துக் கொண்டிருப்பார். தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சகித்துக் கொள்ளமாட்டார் என்றும் போக்குவரத்து அமைச்சர் குறிப்பிட்டார்.


கடுமையான தீர்மானங்களை எடுக்காவிடின் இவர்களை கட்டுப்படுத்த முடியாதெனவும்,

மக்களை பணயக் கைதிகளாக்கும் தொழிற்சங்கங்களுக்கு அடிப்பணிய முடியாதெனவும்  போக்குவரத்து அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

இதேவேளை ரயில்வே பணிப்புறக்கணிப்பு இடம்பெற்ற இரண்டு தினங்களில் புகையிரத திணைக்களத்திற்கு ஏறக்குறைய 10 கோடி ரூபா வருமான இழப்பு ஏற்பட்டுள்ளதாக திணைக்களத்தின் உயர் அதிகாரி ஒருவர் இன்று (11) தெரிவித்தார்.

சாதாரண நாளில் ரயில்வே துறையின் பயணிகள் போக்குவரத்து டிக்கெட் வருமானம் 4 கோடி மட்டுமே என்றும், அந்த வருவாயுடன் சரக்கு உள்ளிட்ட இதர வருவாயையும் சேர்த்தால் தினசரி வருமானம் சுமார் 5 கோடி என்று அதிகாரி கூறினார்.

திணைக்களத்தின் தலையீட்டால் ஸ்டேஷன் மாஸ்டர்கள் டிக்கெட் வழங்கத் தவறியதால், வேலை நிறுத்த நாட்களில் ஓடிய ரயில்களில் பயணம் செய்த பயணிகளுக்கு டிக்கெட் கட்டணம் கிடைக்கவில்லை என்றும் குறிப்பிட்டார்.

பணிப்புறக்கணிப்பால் சுமார் 10 கோடி நட்டம் - ரயில் ஊழியர்கள் பதவி நீக்கம். அமைச்சர் அதிரடி  பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள ரயில் நிலைய அதிபர்கள் சேவையிலிருந்து நீக்கப்பட்டதாக கருதி உத்தியோகபூர்வ கடிதம் அனுப்பப்பட்டதாக போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.மக்களை நெருக்கடிக்குள்ளாக்கும் செயற்பாடுகளை கோட்டாபய ராஜபக்‌ஷ பார்த்துக் கொண்டிருப்பார். தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சகித்துக் கொள்ளமாட்டார் என்றும் போக்குவரத்து அமைச்சர் குறிப்பிட்டார்.கடுமையான தீர்மானங்களை எடுக்காவிடின் இவர்களை கட்டுப்படுத்த முடியாதெனவும்,மக்களை பணயக் கைதிகளாக்கும் தொழிற்சங்கங்களுக்கு அடிப்பணிய முடியாதெனவும்  போக்குவரத்து அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.இதேவேளை ரயில்வே பணிப்புறக்கணிப்பு இடம்பெற்ற இரண்டு தினங்களில் புகையிரத திணைக்களத்திற்கு ஏறக்குறைய 10 கோடி ரூபா வருமான இழப்பு ஏற்பட்டுள்ளதாக திணைக்களத்தின் உயர் அதிகாரி ஒருவர் இன்று (11) தெரிவித்தார்.சாதாரண நாளில் ரயில்வே துறையின் பயணிகள் போக்குவரத்து டிக்கெட் வருமானம் 4 கோடி மட்டுமே என்றும், அந்த வருவாயுடன் சரக்கு உள்ளிட்ட இதர வருவாயையும் சேர்த்தால் தினசரி வருமானம் சுமார் 5 கோடி என்று அதிகாரி கூறினார்.திணைக்களத்தின் தலையீட்டால் ஸ்டேஷன் மாஸ்டர்கள் டிக்கெட் வழங்கத் தவறியதால், வேலை நிறுத்த நாட்களில் ஓடிய ரயில்களில் பயணம் செய்த பயணிகளுக்கு டிக்கெட் கட்டணம் கிடைக்கவில்லை என்றும் குறிப்பிட்டார்.

Advertisement

Advertisement

Advertisement