அதிக மழை காரணமாக மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான்கதவு ஒன்று திறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அந்த பகுதிகளில் மேலும் மழை பெய்தால் நீர்த்தேக்கத்தின் ஏனைய வான்கதவுகள் திறக்கப்படுமென தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பில் மக்களை அவதானமாக இருக்குமாறு நுவரெலியா மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு கேட்டுக்கொண்டுள்ளது.
இந்நிலையில் நாட்டில் மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (28) வெளியிட்டுள்ள அறிக்கையில் இதனை தெரிவித்துள்ளது.
மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும், வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை, அம்பாந்தோட்டை மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 35 - 45 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
நாட்டின் சில பகுதிகளில் இன்றும் மழை; திறக்கப்பட்ட வான்கதவு அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை அதிக மழை காரணமாக மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான்கதவு ஒன்று திறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.அந்த பகுதிகளில் மேலும் மழை பெய்தால் நீர்த்தேக்கத்தின் ஏனைய வான்கதவுகள் திறக்கப்படுமென தெரிவிக்கப்படுகிறது.இது தொடர்பில் மக்களை அவதானமாக இருக்குமாறு நுவரெலியா மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு கேட்டுக்கொண்டுள்ளது.இந்நிலையில் நாட்டில் மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (28) வெளியிட்டுள்ள அறிக்கையில் இதனை தெரிவித்துள்ளது.மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும், வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை, அம்பாந்தோட்டை மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 35 - 45 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது.