• Apr 16 2026

வடக்கு, கிழக்கு உள்ளிட்ட பகுதிகளில் மழைவீழ்ச்சி அதிகரிக்கும்...!வளிமண்டலவியல் திணைக்களம் அறிவிப்பு...!samugammedia

Ziya / Jan 9th 2024, 10:18 am
image

வடக்கு, கிழக்கு உள்ளிட்ட சில மாகாணங்களில்  இன்றும் நாளையும் மழையுடனான வானிலை அதிகரிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

இது தொடர்பில் இன்று காலை வெளியிடப்பட்ட  ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

வடக்கு, கிழக்கு, ஊவா, மத்திய மற்றும் தென் மாகாணங்களில் இன்றும் நாளையும் மழையுடனான வானிலை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதுடன், தீவின் பெரும்பாலான பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் .

வடக்கு, கிழக்கு, ஊவா, மத்திய மற்றும் தென் மாகாணங்களிலும் பொலன்னறுவை மாவட்டத்திலும் அவ்வப்போது மழை பெய்யும். அனுராதபுரம் மாவட்டத்தில் பல தடவைகள் மழை பெய்யும்.

ஏனைய இடங்களில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் .

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் காலையிலும் மழை பெய்யக்கூடும்.

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும்.

இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


வடக்கு, கிழக்கு உள்ளிட்ட பகுதிகளில் மழைவீழ்ச்சி அதிகரிக்கும்.வளிமண்டலவியல் திணைக்களம் அறிவிப்பு.samugammedia வடக்கு, கிழக்கு உள்ளிட்ட சில மாகாணங்களில்  இன்றும் நாளையும் மழையுடனான வானிலை அதிகரிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.இது தொடர்பில் இன்று காலை வெளியிடப்பட்ட  ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,வடக்கு, கிழக்கு, ஊவா, மத்திய மற்றும் தென் மாகாணங்களில் இன்றும் நாளையும் மழையுடனான வானிலை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதுடன், தீவின் பெரும்பாலான பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் .வடக்கு, கிழக்கு, ஊவா, மத்திய மற்றும் தென் மாகாணங்களிலும் பொலன்னறுவை மாவட்டத்திலும் அவ்வப்போது மழை பெய்யும். அனுராதபுரம் மாவட்டத்தில் பல தடவைகள் மழை பெய்யும்.ஏனைய இடங்களில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் .மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் காலையிலும் மழை பெய்யக்கூடும்.கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும்.இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement