• Oct 06 2026

ராஜபக்‌ஷர்கள் கைது: அரசுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை திசைதிருப்பும் முயற்சியா? கேள்வியெழுப்பிய மொட்டு

Chithra / Oct 5th 2026, 11:54 am
image


அரசின் மீது முன்வைக்கப்படும் ஊழல் மற்றும் மோசடிக் குற்றச்சாட்டுகள் மக்கள் மத்தியில் பேசுபொருளாகும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், கவனத்தைத் திசைதிருப்பும் வகையில் ராஜபக்‌ஷ குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் கைது செய்யப்படுகின்றனர் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் டி.வி. சானக குற்றஞ்சாட்டினார்.


ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.


அவர் மேலும் தெரிவிக்கையில்,


"நிலக்கரி கொள்வனவு மோசடி, கொள்கலன் விவகாரம் மற்றும் டொலர் நெருக்கடி தொடர்பில் மக்கள் கேள்வி எழுப்பியபோதெல்லாம், ராஜபக்‌ஷ குடும்பத்தைச் சேர்ந்தவர்களைக் கைது செய்து நாட்டில் புதிய பேசுபொருளை உருவாக்கி அரசின் மீதான குற்றச்சாட்டுகளை மறைக்க முற்படுகின்றனர்.


நாமல் ராஜபக்‌ஷ கைது செய்யப்பட்டுள்ள விவகாரத்திலும் இதே நிலைமையே காணப்படுகின்றது. ரக்பி போட்டி விவகாரத்தில் போட்டி நடைபெற்றதா, அதனை ஏற்பாடு செய்தவர்கள் யார், பணம் எவ்வாறு பயன்படுத்தப்பட்டது போன்ற ஆரம்பகட்ட உண்மைகளை விசாரிக்காமல் தனிநபர்களை இலக்கு வைத்துச் செயற்படுவதில் நியாயம் இல்லை.


ராஜபக்‌ஷக்களைக் கைது செய்வதன் மூலம் எங்களது அரசியல் நடவடிக்கைகளை ஒருபோதும் முடக்கிவிட முடியாது. அரசின் ஊழல்கள் தொடர்பிலும் முழுமையான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும்.


சட்டம் அரசுக்கும் எதிர்க்கட்சிக்கும் சமமாகச் செயற்பட வேண்டும். எதிர்க்கட்சியினருக்கு எதிராக மாத்திரம் சட்டம் வளைக்கப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது." - என்றார்.


ராஜபக்‌ஷர்கள் கைது: அரசுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை திசைதிருப்பும் முயற்சியா கேள்வியெழுப்பிய மொட்டு அரசின் மீது முன்வைக்கப்படும் ஊழல் மற்றும் மோசடிக் குற்றச்சாட்டுகள் மக்கள் மத்தியில் பேசுபொருளாகும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், கவனத்தைத் திசைதிருப்பும் வகையில் ராஜபக்‌ஷ குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் கைது செய்யப்படுகின்றனர் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் டி.வி. சானக குற்றஞ்சாட்டினார்.ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,"நிலக்கரி கொள்வனவு மோசடி, கொள்கலன் விவகாரம் மற்றும் டொலர் நெருக்கடி தொடர்பில் மக்கள் கேள்வி எழுப்பியபோதெல்லாம், ராஜபக்‌ஷ குடும்பத்தைச் சேர்ந்தவர்களைக் கைது செய்து நாட்டில் புதிய பேசுபொருளை உருவாக்கி அரசின் மீதான குற்றச்சாட்டுகளை மறைக்க முற்படுகின்றனர்.நாமல் ராஜபக்‌ஷ கைது செய்யப்பட்டுள்ள விவகாரத்திலும் இதே நிலைமையே காணப்படுகின்றது. ரக்பி போட்டி விவகாரத்தில் போட்டி நடைபெற்றதா, அதனை ஏற்பாடு செய்தவர்கள் யார், பணம் எவ்வாறு பயன்படுத்தப்பட்டது போன்ற ஆரம்பகட்ட உண்மைகளை விசாரிக்காமல் தனிநபர்களை இலக்கு வைத்துச் செயற்படுவதில் நியாயம் இல்லை.ராஜபக்‌ஷக்களைக் கைது செய்வதன் மூலம் எங்களது அரசியல் நடவடிக்கைகளை ஒருபோதும் முடக்கிவிட முடியாது. அரசின் ஊழல்கள் தொடர்பிலும் முழுமையான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும்.சட்டம் அரசுக்கும் எதிர்க்கட்சிக்கும் சமமாகச் செயற்பட வேண்டும். எதிர்க்கட்சியினருக்கு எதிராக மாத்திரம் சட்டம் வளைக்கப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது." - என்றார்.

Advertisement

Advertisement

Advertisement