• Nov 14 2024

கொள்கைக்கு முரணாக செயற்பட்ட ரணில்! மொட்டு தரப்பு குற்றச்சாட்டு

Chithra / Aug 3rd 2024, 12:09 pm
image

 

ஜனாதிபதி  வேட்பாளர் விவகாரத்தில் கட்சியுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுக் கொண்டு கொள்கைக்கு முரணாக ரணில் விக்ரமசிங்க செயற்பட்டார் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் காமினி லொகுகே குற்றம் சுமத்தியுள்ளார்.

பொதுஜன பெரமுனவுடன் ஒன்றிணைந்து பயணிக்கும் சூழலை ரணில் விக்ரமசிங்கவே இல்லாதொழித்தார் எனவும் கடுமையாக சாடியுள்ளார்.

இது தொடர்பில் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவித்த அவர், 

ஜனாதிபதித் தேர்தலில் பொதுஜன பெரமுனவின் உறுப்பினரை வேட்பாளராகக் களமிறக்கும் தீர்மானம் கட்சி உறுப்பினர்களின் முழுமையான ஆதரவுடன் எடுக்கப்பட்டது.

அந்த தீர்மானம் இனி மாற்றம் பெறாது. எமது வேட்பாளரே வெற்றி பெறுவார். 

மாறுபட்ட அரசியல் கொள்கையுடைய ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரான ரணில் விக்ரமசிங்கவை இடைக்கால ஜனாதிபதியாகத் தெரிவு செய்தோம்.

எவ்வாறு செயற்படுவது என்பது தொடர்பில் ஜனாதிபதியுடன் கலந்துரையாடப்பட்டது. ஆனால் கட்சி தீர்மானம் எடுப்பதற்கு முன்னரே ஜனாதிபதி ஒரு குழுவுடன் இணைந்து தீர்மானம் எடுத்துள்ளார் என்றார்

கொள்கைக்கு முரணாக செயற்பட்ட ரணில் மொட்டு தரப்பு குற்றச்சாட்டு  ஜனாதிபதி  வேட்பாளர் விவகாரத்தில் கட்சியுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுக் கொண்டு கொள்கைக்கு முரணாக ரணில் விக்ரமசிங்க செயற்பட்டார் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் காமினி லொகுகே குற்றம் சுமத்தியுள்ளார்.பொதுஜன பெரமுனவுடன் ஒன்றிணைந்து பயணிக்கும் சூழலை ரணில் விக்ரமசிங்கவே இல்லாதொழித்தார் எனவும் கடுமையாக சாடியுள்ளார்.இது தொடர்பில் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவித்த அவர், ஜனாதிபதித் தேர்தலில் பொதுஜன பெரமுனவின் உறுப்பினரை வேட்பாளராகக் களமிறக்கும் தீர்மானம் கட்சி உறுப்பினர்களின் முழுமையான ஆதரவுடன் எடுக்கப்பட்டது.அந்த தீர்மானம் இனி மாற்றம் பெறாது. எமது வேட்பாளரே வெற்றி பெறுவார். மாறுபட்ட அரசியல் கொள்கையுடைய ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரான ரணில் விக்ரமசிங்கவை இடைக்கால ஜனாதிபதியாகத் தெரிவு செய்தோம்.எவ்வாறு செயற்படுவது என்பது தொடர்பில் ஜனாதிபதியுடன் கலந்துரையாடப்பட்டது. ஆனால் கட்சி தீர்மானம் எடுப்பதற்கு முன்னரே ஜனாதிபதி ஒரு குழுவுடன் இணைந்து தீர்மானம் எடுத்துள்ளார் என்றார்

Advertisement

Advertisement

Advertisement