• Nov 22 2024

தோல்வியில் முடிந்த ரணில், மகிந்த, பசில் பேச்சுவார்த்தை: கொழும்பு அரசியலில் பரபரப்பு

Chithra / Mar 8th 2024, 2:22 pm
image

 

சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்க, சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர்களான மஹிந்த ராஜபக்ச மற்றும் பசில் ராஜபக்ச ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு, தோல்வியில் முடிவடைந்துள்ளதாக தென்னிலங்கை ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த வருட இறுதியில் நடைபெறவுள்ள சிறிலங்கா அதிபர் தேர்தலுக்கு முன்னதாக நிலுவையிலுள்ள அரசியல் விடயங்கள் குறித்து கலந்துரையாடுவதற்காகவே இந்த மூன்று தலைவர்களும் நேற்றைய தினம் (07) சந்திப்பில் ஈடுபட்டிருந்தனர்.

இரண்டு சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர்களும் தேசிய சொத்துக்களை வெளிநாடுகளுக்கு விற்றல் மற்றும் அதிகாரப் பகிர்வு ஆகிய இரண்டு கொள்கை விடயங்களில் சிறிலங்கா அதிபருடன் ஒரு கூட்டணியை உருவாக்குவதற்கான கட்சியின் நிலைப்பாட்டை தீர்மானிப்பதற்காக தெளிவுபடுத்தியதாகவும் கூறப்படுகிறது.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் அரசியல் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக அதிகாரப் பகிர்வின் முன்மொழியப்பட்ட வரையறைகள் குறித்தும் அவர்கள் கவலைகளை எழுப்பியதாக கூறப்படுகிறது.

எவ்வாறாயினும், இரு கட்சிகளும் தங்கள் அரசியல் நடவடிக்கைகளை விரைவுபடுத்தவும், ஒருவருக்கொருவர் அக்கறையுள்ள விடயங்களில் எவ்வளவு தூரம் பொதுவான நிலையைக் கண்டறிய முடியும் என்பதைப் பொறுத்து இறுதி முடிவுகளை எடுக்கவும் முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

தோல்வியில் முடிந்த ரணில், மகிந்த, பசில் பேச்சுவார்த்தை: கொழும்பு அரசியலில் பரபரப்பு  சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்க, சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர்களான மஹிந்த ராஜபக்ச மற்றும் பசில் ராஜபக்ச ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு, தோல்வியில் முடிவடைந்துள்ளதாக தென்னிலங்கை ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.இந்த வருட இறுதியில் நடைபெறவுள்ள சிறிலங்கா அதிபர் தேர்தலுக்கு முன்னதாக நிலுவையிலுள்ள அரசியல் விடயங்கள் குறித்து கலந்துரையாடுவதற்காகவே இந்த மூன்று தலைவர்களும் நேற்றைய தினம் (07) சந்திப்பில் ஈடுபட்டிருந்தனர்.இரண்டு சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர்களும் தேசிய சொத்துக்களை வெளிநாடுகளுக்கு விற்றல் மற்றும் அதிகாரப் பகிர்வு ஆகிய இரண்டு கொள்கை விடயங்களில் சிறிலங்கா அதிபருடன் ஒரு கூட்டணியை உருவாக்குவதற்கான கட்சியின் நிலைப்பாட்டை தீர்மானிப்பதற்காக தெளிவுபடுத்தியதாகவும் கூறப்படுகிறது.வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் அரசியல் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக அதிகாரப் பகிர்வின் முன்மொழியப்பட்ட வரையறைகள் குறித்தும் அவர்கள் கவலைகளை எழுப்பியதாக கூறப்படுகிறது.எவ்வாறாயினும், இரு கட்சிகளும் தங்கள் அரசியல் நடவடிக்கைகளை விரைவுபடுத்தவும், ஒருவருக்கொருவர் அக்கறையுள்ள விடயங்களில் எவ்வளவு தூரம் பொதுவான நிலையைக் கண்டறிய முடியும் என்பதைப் பொறுத்து இறுதி முடிவுகளை எடுக்கவும் முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Advertisement

Advertisement