• Nov 23 2024

மீனவ மக்களை மூச்சுவிட வைத்தவர் ரணில்; நன்றிக்காக வாக்களிப்போம்- மீனவ அமைப்புக்கள் கூட்டாக வேண்டுகோள்..!

Sharmi / Sep 18th 2024, 6:09 pm
image

இந்திய எல்லை தாண்டிய மீனவர்களினால் அழிக்கப்பட்டு வந்த  எமது வாழ்வாதாரத்தை பாதுகாத்து வருபவர் ரணில் விக்கிரமசிங்கவை மீண்டும் ஜனாதிபதியாக ஆட்சிப்பீடம்  ஏற்ற வேண்டும் என யாழ். மாவட்ட கடற்தொழில் சங்கங்கள் கூட்டாக அழைப்பு விடுத்தன.

யாழ். மாவட்ட கடற்தொழிலாளர் கூட்டுறவு சங்கத்தில்  இன்றையதினம்(18) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர்கள் இவ்வாறு தெரிவித்தனர்.

எமது மீனவர்கள் இந்திய எல்லை தாண்டிய மீனவர்களின் தொடர்ச்சியான அத்துமீறிய மீன்பிடியினால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இவ் விடயம் இன்று நேற்று ஆரம்பித்த விடையம் அல்ல.

நாங்கள் இலங்கையை ஆட்சி செய்த ஐந்து ஜனாதிபதிகளிடம் இந்திய மீனவர்கள் அத்துமீறல் தொடர்பில் பல கோரிக்கைகளை முன்வைத்தோம்.

தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க காலத்திலும் இந்திய மீனவர்களின் வருகை காணப்பட்டாலும் தொடர்ச்சியாக பலர் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

அதுமட்டுமல்லாது கடந்த காலங்களில் வடபகுதிக் கடலில் அத்துமீறி வருகை தந்த இந்திய ரோலர்களின் எண்ணிக்கை சற்று குறைவடைந்துள்ளதுடன் எமது மீனவர்கள் சுதந்திரமாக  மீன்பிடியில்  ஈடுபட்டு வருகின்றனர்

 எமது கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இந்தியா தரப்புகளுடனும் எமது இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் தொடர்ச்சியாக இடம்பெற்ற பேச்சு வார்த்தைகளின் அடிப்படையில், எல்லை தாண்டும்  இந்திய ரோலர்கள் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது.

ஆகவே, எமது வாழ்வாதாரத்தை பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுத்த ரணில் விக்ரமசிங்கவை ஆதரிப்பதன் மூலம் எதிர்காலத்தில் இந்தியன் ரோலர்களை முற்றும் முழுதாக தடை செய்வதற்கு நடவடிக்கை எடுப்பார் என நம்புவதாக அவர்கள் மேலும் தெரிவித்தனர்.

மீனவ மக்களை மூச்சுவிட வைத்தவர் ரணில்; நன்றிக்காக வாக்களிப்போம்- மீனவ அமைப்புக்கள் கூட்டாக வேண்டுகோள். இந்திய எல்லை தாண்டிய மீனவர்களினால் அழிக்கப்பட்டு வந்த  எமது வாழ்வாதாரத்தை பாதுகாத்து வருபவர் ரணில் விக்கிரமசிங்கவை மீண்டும் ஜனாதிபதியாக ஆட்சிப்பீடம்  ஏற்ற வேண்டும் என யாழ். மாவட்ட கடற்தொழில் சங்கங்கள் கூட்டாக அழைப்பு விடுத்தன.யாழ். மாவட்ட கடற்தொழிலாளர் கூட்டுறவு சங்கத்தில்  இன்றையதினம்(18) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர்கள் இவ்வாறு தெரிவித்தனர்.எமது மீனவர்கள் இந்திய எல்லை தாண்டிய மீனவர்களின் தொடர்ச்சியான அத்துமீறிய மீன்பிடியினால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.இவ் விடயம் இன்று நேற்று ஆரம்பித்த விடையம் அல்ல. நாங்கள் இலங்கையை ஆட்சி செய்த ஐந்து ஜனாதிபதிகளிடம் இந்திய மீனவர்கள் அத்துமீறல் தொடர்பில் பல கோரிக்கைகளை முன்வைத்தோம்.தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க காலத்திலும் இந்திய மீனவர்களின் வருகை காணப்பட்டாலும் தொடர்ச்சியாக பலர் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.அதுமட்டுமல்லாது கடந்த காலங்களில் வடபகுதிக் கடலில் அத்துமீறி வருகை தந்த இந்திய ரோலர்களின் எண்ணிக்கை சற்று குறைவடைந்துள்ளதுடன் எமது மீனவர்கள் சுதந்திரமாக  மீன்பிடியில்  ஈடுபட்டு வருகின்றனர் எமது கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இந்தியா தரப்புகளுடனும் எமது இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் தொடர்ச்சியாக இடம்பெற்ற பேச்சு வார்த்தைகளின் அடிப்படையில், எல்லை தாண்டும்  இந்திய ரோலர்கள் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது.ஆகவே, எமது வாழ்வாதாரத்தை பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுத்த ரணில் விக்ரமசிங்கவை ஆதரிப்பதன் மூலம் எதிர்காலத்தில் இந்தியன் ரோலர்களை முற்றும் முழுதாக தடை செய்வதற்கு நடவடிக்கை எடுப்பார் என நம்புவதாக அவர்கள் மேலும் தெரிவித்தனர்.

Advertisement

Advertisement

Advertisement