• Mar 11 2025

மக்கள் விரும்பும் ஒரே தலைவர் ரணிலே...! அமைச்சர் ஹரின் புகழாரம்...!

Sharmi / Feb 24th 2024, 9:12 am
image

இலங்கையில் உள்ள சகல மக்களும் விரும்புகின்ற ஒரே தலைவராக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க திகழ்கின்றார் என அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணிலின் வெற்றி,  இலங்கை அரசியல் வரலாற்றில் பெரும் சாதனையாகப் பதியப்படும்.

எனவே,  ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து வெளியேறி ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்திருக்கும் உறுப்பினர்கள் அனைவரும் மீண்டும் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

மீண்டும் ரணிலுடன் இணைவதற்குத் தற்போது கிடைத்துள்ள நல்லதொரு சந்தர்ப்பத்தை சஜித் அணியினர் பயன்படுத்த வேண்டும்.

நாட்டின் பொருளாதாரம் சீரான நிலைக்கு வரவேண்டுமெனில் ரணிலின் ஆட்சி நிலைத்திருக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

மக்கள் விரும்பும் ஒரே தலைவர் ரணிலே. அமைச்சர் ஹரின் புகழாரம். இலங்கையில் உள்ள சகல மக்களும் விரும்புகின்ற ஒரே தலைவராக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க திகழ்கின்றார் என அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்தார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணிலின் வெற்றி,  இலங்கை அரசியல் வரலாற்றில் பெரும் சாதனையாகப் பதியப்படும்.எனவே,  ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து வெளியேறி ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்திருக்கும் உறுப்பினர்கள் அனைவரும் மீண்டும் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.மீண்டும் ரணிலுடன் இணைவதற்குத் தற்போது கிடைத்துள்ள நல்லதொரு சந்தர்ப்பத்தை சஜித் அணியினர் பயன்படுத்த வேண்டும்.நாட்டின் பொருளாதாரம் சீரான நிலைக்கு வரவேண்டுமெனில் ரணிலின் ஆட்சி நிலைத்திருக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement