• Mar 17 2026

கிளிநொச்சியில் அடையாளம் காணப்பட்ட எலிக்காய்ச்சல் நோயாளி!

Chithra / Dec 5th 2025, 2:55 pm
image

 

கிளிநொச்சியில் எலிக்காய்ச்சல் நோயாளி ஒருவர் இன்றையதினம் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

கண்டாவளை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட புன்னைநீராவி கிராமத்தில் வசிக்கும் ஒருவரே எலிக்காய்ச்சல் நோயாளியாக அடையாளம் காணப்பட்டார்.

குறித்த நபருக்கு காய்ச்சல் ஏற்பட்ட நிலையில், தர்மபுரம் பிரதேச வைத்தியசாலைக்கு சிகிச்சை பெற சென்றபோது இவரின் குருதி மாதிரி பரிசோதனைக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையிலேயே அவருக்கு எலிக்காய்ச்சல் இருப்பது இனங்காணப்பட்டது.


இவர் தற்போது யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். 

வெள்ள நிலைமையைத் தொடர்ந்து எலிக்காய்ச்சல் நோய் பரவும் அபாயம் உள்ளதாக சுகாதார பிரிவினர் அண்மைக்காலமாக அறிவுறுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கிளிநொச்சியில் அடையாளம் காணப்பட்ட எலிக்காய்ச்சல் நோயாளி  கிளிநொச்சியில் எலிக்காய்ச்சல் நோயாளி ஒருவர் இன்றையதினம் அடையாளம் காணப்பட்டுள்ளார்.கண்டாவளை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட புன்னைநீராவி கிராமத்தில் வசிக்கும் ஒருவரே எலிக்காய்ச்சல் நோயாளியாக அடையாளம் காணப்பட்டார்.குறித்த நபருக்கு காய்ச்சல் ஏற்பட்ட நிலையில், தர்மபுரம் பிரதேச வைத்தியசாலைக்கு சிகிச்சை பெற சென்றபோது இவரின் குருதி மாதிரி பரிசோதனைக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.இந்நிலையிலேயே அவருக்கு எலிக்காய்ச்சல் இருப்பது இனங்காணப்பட்டது.இவர் தற்போது யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். வெள்ள நிலைமையைத் தொடர்ந்து எலிக்காய்ச்சல் நோய் பரவும் அபாயம் உள்ளதாக சுகாதார பிரிவினர் அண்மைக்காலமாக அறிவுறுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement