• Feb 20 2026

சேனைப்புலவு பாலத்தை அமைக்குமாறு வலியுறுத்திய ரவிகரன் எம்.பி!

dileesiya / Feb 19th 2026, 2:19 pm
image

வவுனியா வடக்கு பிரதேச செயலர் பிரிவின், நெடுங்கேணி, சேனைப்புலவு முதலாம் ஒழுங்கையில் அமைந்துள்ள சேனைப்புலவு பாலத்தை நிர்மாணிக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் வலியுறுத்தியுள்ளார்.

இந்நிலையில் குறித்த பாலம் உரிய திட்டங்களினூடக உள்ள வாங்கப்பட்டு நிர்மாணிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படுமென வவுனியா வடக்கு பிரதேசசெயலகத்தின் உதவித் திட்டமிடல் பணிப்பாளரால் இதன்போது பதிலளிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் இடம்பெற்ற வவுனியா வடக்கு பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்திலேயே இவ்விடயம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

அண்மையில் வவுனியா வடக்கு பிரதேசசபை உறுப்பினர் செல்வராசா சுசீலன்,சமூக செயற்பாட்டாளர் ச.வசந்தகுமார் மற்றும் அப்பகுதி மக்களின் அழைப்பை ஏற்று சேனைப்புலவுப் பகுதிக்கு நேரடியாக களவிஜயம் மேற்கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் அப்பகுதிமக்கள் எதிர்நோக்கும் போக்குவரத்து நெருக்கடி தொடர்பில் பார்வையிட்டிருந்ததுடன், குறித்த சேனைப்புலவு முதலாம் ஒழுங்கையில் பாலத்தை அமைப்பது தொடர்பில் தம்மால் கவனஞ் செலுத்தப்படுமெனவுந் தெரிவித்திருந்தார்.

இந்நிலையிலேயே கடந்த 13 ஆம் திகதி  இடம்பெற்ற வவுனியா வடக்கு பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டத்தில் சேனைப்புலவு முதலாம் ஒழுங்கையில் பாலத்தை நிர்மாணிப்பதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் வலியுறுத்தியுள்ளார்.

குறித்த பிரதேச அபிவிருத்திக்குழுக்கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் இவ்விடயம் தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையில்,

குறித்த சேனைப்புலவு முதலாம் ஒழுங்கையில் பாலம் ஒன்று அமைக்கப்படவேண்டும். குறிப்பாக நெடுங்கேணி குளத்திலிருந்து வெளியேறும் மேலதிக நீர் பாதையினை ஊடறுத்துப் பாய்வதால் அவ்வீதியின் போக்குவரத்துத் தடைப்படுகின்றது.

இதனால் 150ஏக்கருக்கும் மேற்பட்ட விவசாய நிலங்களுக்கும், தோட்டங்களுக்கும் செல்லும் மக்கள் பலத்த போக்குவரத்து நெருக்கடிகளுக்கு முகங்கொடுக்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

அத்தோடு இவ்வாறு போக்குவரத்து தடை ஏற்படுவதால் அப்பகுதியில் வசிக்கின்ற மக்கள் அத்திய அவசிய சேவைகளைப் பெறுவதற்குக் கூட இடர்படவேண்டிய நிலை காணப்படுகின்றது. 

குறிப்பாக மருத்துவ சேவையை பெறுவதற்குகூட மக்கள் பலத்த இடர்பாடுகளுக்கு முகங்கொடுத்தே பயணப்படவேண்டிய நிலை காணப்படுகின்றது.

எனவே சேனைப்புலவு முதலாம் ஒழுங்கையில் பாலம் ஒன்றினை அமைக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் இதன்போது வலியுறுத்தினார்.

இந்நிலையில் உரிய திட்டங்களில் உள்வாங்கப்பட்டு சேனைப்புலவு முதலாம் ஒழுங்கையில் பாலத்தினை நிர்மாணிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமென இதன்போது வவுனியா வடக்கு பிரதேசசெயலக உதவித்திட்டமிடல் பணிப்பாளரால் இதன்போது பதிலளிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

சேனைப்புலவு பாலத்தை அமைக்குமாறு வலியுறுத்திய ரவிகரன் எம்.பி வவுனியா வடக்கு பிரதேச செயலர் பிரிவின், நெடுங்கேணி, சேனைப்புலவு முதலாம் ஒழுங்கையில் அமைந்துள்ள சேனைப்புலவு பாலத்தை நிர்மாணிக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் வலியுறுத்தியுள்ளார்.இந்நிலையில் குறித்த பாலம் உரிய திட்டங்களினூடக உள்ள வாங்கப்பட்டு நிர்மாணிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படுமென வவுனியா வடக்கு பிரதேசசெயலகத்தின் உதவித் திட்டமிடல் பணிப்பாளரால் இதன்போது பதிலளிக்கப்பட்டுள்ளது.அண்மையில் இடம்பெற்ற வவுனியா வடக்கு பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்திலேயே இவ்விடயம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,அண்மையில் வவுனியா வடக்கு பிரதேசசபை உறுப்பினர் செல்வராசா சுசீலன்,சமூக செயற்பாட்டாளர் ச.வசந்தகுமார் மற்றும் அப்பகுதி மக்களின் அழைப்பை ஏற்று சேனைப்புலவுப் பகுதிக்கு நேரடியாக களவிஜயம் மேற்கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் அப்பகுதிமக்கள் எதிர்நோக்கும் போக்குவரத்து நெருக்கடி தொடர்பில் பார்வையிட்டிருந்ததுடன், குறித்த சேனைப்புலவு முதலாம் ஒழுங்கையில் பாலத்தை அமைப்பது தொடர்பில் தம்மால் கவனஞ் செலுத்தப்படுமெனவுந் தெரிவித்திருந்தார்.இந்நிலையிலேயே கடந்த 13 ஆம் திகதி  இடம்பெற்ற வவுனியா வடக்கு பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டத்தில் சேனைப்புலவு முதலாம் ஒழுங்கையில் பாலத்தை நிர்மாணிப்பதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் வலியுறுத்தியுள்ளார்.குறித்த பிரதேச அபிவிருத்திக்குழுக்கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் இவ்விடயம் தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையில்,குறித்த சேனைப்புலவு முதலாம் ஒழுங்கையில் பாலம் ஒன்று அமைக்கப்படவேண்டும். குறிப்பாக நெடுங்கேணி குளத்திலிருந்து வெளியேறும் மேலதிக நீர் பாதையினை ஊடறுத்துப் பாய்வதால் அவ்வீதியின் போக்குவரத்துத் தடைப்படுகின்றது.இதனால் 150ஏக்கருக்கும் மேற்பட்ட விவசாய நிலங்களுக்கும், தோட்டங்களுக்கும் செல்லும் மக்கள் பலத்த போக்குவரத்து நெருக்கடிகளுக்கு முகங்கொடுக்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.அத்தோடு இவ்வாறு போக்குவரத்து தடை ஏற்படுவதால் அப்பகுதியில் வசிக்கின்ற மக்கள் அத்திய அவசிய சேவைகளைப் பெறுவதற்குக் கூட இடர்படவேண்டிய நிலை காணப்படுகின்றது. குறிப்பாக மருத்துவ சேவையை பெறுவதற்குகூட மக்கள் பலத்த இடர்பாடுகளுக்கு முகங்கொடுத்தே பயணப்படவேண்டிய நிலை காணப்படுகின்றது.எனவே சேனைப்புலவு முதலாம் ஒழுங்கையில் பாலம் ஒன்றினை அமைக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் இதன்போது வலியுறுத்தினார்.இந்நிலையில் உரிய திட்டங்களில் உள்வாங்கப்பட்டு சேனைப்புலவு முதலாம் ஒழுங்கையில் பாலத்தினை நிர்மாணிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமென இதன்போது வவுனியா வடக்கு பிரதேசசெயலக உதவித்திட்டமிடல் பணிப்பாளரால் இதன்போது பதிலளிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement