• Apr 02 2025

பொறுப்பை ஒப்படைத்தால் பாதாள உலகக்கும்பல்களை கட்டுப்படுத்த தயார்! பொன்சேகா அறிவிப்பு

Chithra / Apr 1st 2025, 9:46 am
image

 

அரசாங்கம் தன்னிடம் பொறுப்பை ஒப்படைக்கும் பட்சத்தில் பாதாள உலகக்கும்பல்களை ஒழித்துக் கட்ட தான் தயாராக இருப்பதாக பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா அறிவித்துள்ளார்.

அவரது கட்சி அலுவலகத்தில் நேற்றைய தினம் நடைபெற்ற நிகழ்வின் பின் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

முப்பதினாயிரம் பேரளவு கொண்ட நன்கு பயிற்றப்பட்ட தீவிரவாதக் கும்பல் ஒன்றையே நாள்குறித்து அழித்தவன் நான்.

இந்தப் பாதாள உலகக்கும்பல்களை ஒழிப்பது ஒன்றும் பெரிய காரியம் கிடையாது.

அரசாங்கம் என்னிடம் பொறுப்பை ஒப்படைத்தால் 1500 பேரளவான எண்ணிக்கை கொண்ட இந்த பாதாள உலகக்கும்பல்களையும் சில மாதங்களுக்குள்ளாகவே முற்றாக அழித்துவிடுவேன்.

எதிர்வரும் தேர்தலில் தேசிய மக்கள் சக்தியே அமோக வெற்றி பெறும். அரசாங்கத்தை வலுப்படுத்தும் வகையில் பொதுமக்கள் வாக்களிக்க வேண்டும் என்றும் சரத் பொன்சேகா தொடர்ந்தும் குறிப்பிட்டுள்ளார்.

பொறுப்பை ஒப்படைத்தால் பாதாள உலகக்கும்பல்களை கட்டுப்படுத்த தயார் பொன்சேகா அறிவிப்பு  அரசாங்கம் தன்னிடம் பொறுப்பை ஒப்படைக்கும் பட்சத்தில் பாதாள உலகக்கும்பல்களை ஒழித்துக் கட்ட தான் தயாராக இருப்பதாக பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா அறிவித்துள்ளார்.அவரது கட்சி அலுவலகத்தில் நேற்றைய தினம் நடைபெற்ற நிகழ்வின் பின் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.முப்பதினாயிரம் பேரளவு கொண்ட நன்கு பயிற்றப்பட்ட தீவிரவாதக் கும்பல் ஒன்றையே நாள்குறித்து அழித்தவன் நான்.இந்தப் பாதாள உலகக்கும்பல்களை ஒழிப்பது ஒன்றும் பெரிய காரியம் கிடையாது.அரசாங்கம் என்னிடம் பொறுப்பை ஒப்படைத்தால் 1500 பேரளவான எண்ணிக்கை கொண்ட இந்த பாதாள உலகக்கும்பல்களையும் சில மாதங்களுக்குள்ளாகவே முற்றாக அழித்துவிடுவேன்.எதிர்வரும் தேர்தலில் தேசிய மக்கள் சக்தியே அமோக வெற்றி பெறும். அரசாங்கத்தை வலுப்படுத்தும் வகையில் பொதுமக்கள் வாக்களிக்க வேண்டும் என்றும் சரத் பொன்சேகா தொடர்ந்தும் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement