முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எதிர்கொள்ளும் அச்சுறுத்தல்களை மதிப்பிட்டு அறிவித்தால், அவருக்கான பாதுகாப்பை வழங்குவதற்கு அரசாங்கம் தயாரென பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு நேற்று கருத்துரைக்கையில் அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், நிலைமைகளை மதிப்பீடு செய்ததன் பின்னர், பாதுகாப்பு வழங்குவதில் எவ்வித பிரச்சினையும் இருக்காது என அரசாங்கம் ஏற்கனவே முன்னாள் ஜனாதிபதிக்கு உறுதியளித்துள்ளதாகவும் பிரதி அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆகவே, இந்த விடயம் தொடர்பில் எவ்வித பிரச்சினையும் இருக்காது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, முன்னாள் ஜனாதிபதி சிறிது காலமாக பில்லியன் கணக்கான அரச நிதியை அநாவசியமான முறையில் செலவு செய்துள்ளதாகவும் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க குற்றம் சுமத்தியுள்ளார்.
மஹிந்த ராஜபக்ஷவுக்கு தேவையான பாதுகாப்பு வழங்க தயார் அரசாங்கம் அறிவிப்பு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எதிர்கொள்ளும் அச்சுறுத்தல்களை மதிப்பிட்டு அறிவித்தால், அவருக்கான பாதுகாப்பை வழங்குவதற்கு அரசாங்கம் தயாரென பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு நேற்று கருத்துரைக்கையில் அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், நிலைமைகளை மதிப்பீடு செய்ததன் பின்னர், பாதுகாப்பு வழங்குவதில் எவ்வித பிரச்சினையும் இருக்காது என அரசாங்கம் ஏற்கனவே முன்னாள் ஜனாதிபதிக்கு உறுதியளித்துள்ளதாகவும் பிரதி அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். ஆகவே, இந்த விடயம் தொடர்பில் எவ்வித பிரச்சினையும் இருக்காது என அவர் குறிப்பிட்டுள்ளார். இதனிடையே, முன்னாள் ஜனாதிபதி சிறிது காலமாக பில்லியன் கணக்கான அரச நிதியை அநாவசியமான முறையில் செலவு செய்துள்ளதாகவும் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க குற்றம் சுமத்தியுள்ளார்.