• Apr 29 2026

மயில்வாகனபுரம் கொழுந்துப்புலவு வீதி புனரமைப்பு ஆரம்பம்!

shanu / Mar 12th 2026, 5:57 pm
image

கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட மயில்வாகனபுரம் கொழுந்துப்புலவு வீதி புனரமைப்பு ஆரம்ப நிகழ்வு  கண்டாவளை பிரதேச செயலாளர் த.பிருந்தாகரன் தலைமையில் நடைபெற்றது. 


குறித்த நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன்,  மாவட்ட அரசாங்கதிபர் எஸ்.முரளிதரன், தேசிய மக்கள் சக்தியின் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளர் மருங்கன் மோகன், பிரதேச சபை உறுப்பினர்கள், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் மாவட்ட பிரதம பொறியியலாளர், நிறைவேற்று பொறியியலாளர், பிரதேச மக்கள் கலந்து கொண்டனர்.


குறித்த வீதியானது வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் 5.5Km காப்பெற் வீதியாக புனரமைக்கப்படவுள்ளது. குறித்த வீதி புனரமைப்பதற்கு  265மில்லியன் செலவிடப்படவுள்ளது. குறித்த வீதி தொடர்பாக மக்கள் கூறுகையில்


நீண்ட காலமாக இப்பகுதியில் வாழும்மக்கள் நிரந்தரமான சீரான வீதி இன்மையால் 50 வருடங்களுக்கு மேலாக இவ்வீதி நிரந்தர புனரமைப்பின்றி குன்றம் குழியுமாக மழை காலங்களில் சேரும் சகதியுமாக வெயில் காலங்களில் வெறும் புழுதியாகவும் காணப்பட்டதாகவும் குறித்த  வீதி ஊடாக அவசர தேவை கருதி வைத்தியசாலைக்குஅல்லது வேறு எந்த தேவைக்கும் செல்ல முடியாத நிலை காணப்பட்டதாகவும் தற்போதைய அரசாங்கத்தின் ஊடாக எமது பகுதியில் நிரந்தரமான ஒரு கார்பெட் வீதி அமைக்கப்படுவதை பெரும் மகிழ்ச்சி அடைவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். 

மயில்வாகனபுரம் கொழுந்துப்புலவு வீதி புனரமைப்பு ஆரம்பம் கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட மயில்வாகனபுரம் கொழுந்துப்புலவு வீதி புனரமைப்பு ஆரம்ப நிகழ்வு  கண்டாவளை பிரதேச செயலாளர் த.பிருந்தாகரன் தலைமையில் நடைபெற்றது. குறித்த நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன்,  மாவட்ட அரசாங்கதிபர் எஸ்.முரளிதரன், தேசிய மக்கள் சக்தியின் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளர் மருங்கன் மோகன், பிரதேச சபை உறுப்பினர்கள், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் மாவட்ட பிரதம பொறியியலாளர், நிறைவேற்று பொறியியலாளர், பிரதேச மக்கள் கலந்து கொண்டனர்.குறித்த வீதியானது வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் 5.5Km காப்பெற் வீதியாக புனரமைக்கப்படவுள்ளது. குறித்த வீதி புனரமைப்பதற்கு  265மில்லியன் செலவிடப்படவுள்ளது. குறித்த வீதி தொடர்பாக மக்கள் கூறுகையில்நீண்ட காலமாக இப்பகுதியில் வாழும்மக்கள் நிரந்தரமான சீரான வீதி இன்மையால் 50 வருடங்களுக்கு மேலாக இவ்வீதி நிரந்தர புனரமைப்பின்றி குன்றம் குழியுமாக மழை காலங்களில் சேரும் சகதியுமாக வெயில் காலங்களில் வெறும் புழுதியாகவும் காணப்பட்டதாகவும் குறித்த  வீதி ஊடாக அவசர தேவை கருதி வைத்தியசாலைக்குஅல்லது வேறு எந்த தேவைக்கும் செல்ல முடியாத நிலை காணப்பட்டதாகவும் தற்போதைய அரசாங்கத்தின் ஊடாக எமது பகுதியில் நிரந்தரமான ஒரு கார்பெட் வீதி அமைக்கப்படுவதை பெரும் மகிழ்ச்சி அடைவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். 

Advertisement

Advertisement

Advertisement