• Dec 11 2024

பொகவந்தலாவையில் ஆணின் சடலம் மீட்பு!

Tharmini / Nov 2nd 2024, 4:41 pm
image

நுவரெலியா, பொகவந்தலாவை, கொட்டியாகலை பிரதேசத்தில் உள்ள கால்வாயிலிருந்து இன்று (02) சனிக்கிழமை ஆணொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கொட்டியாகலை தேயிலைத் தோட்டத்தில் பணிபுரியும் தோட்டத் தொழிலாளர்கள் சிலர் கால்வாயில் சடலம் இருப்பதைக் கண்டு உடனடியாகப் பொலிஸாருக்குத் தகவல் வழங்கியுள்ளனர்.

கொட்டியாகலை தேயிலைத் தோட்டத்தில் பணிபுரியும் தோட்டத் தொழிலாளர்கள் பயன்படுத்தும் குழாய்களுக்கு நீர் இணைப்பை வழங்கும் கால்வாயிலிருந்தே சடலம் மீட்கப்பட்டுள்ளது.

சடலமாக மீட்கப்பட்டவர் தொடர்பில் இதுவரை எந்தவித தகவல்களும் கிடைக்கவில்லை என்று பொகவந்தலாவைப் பொலிஸார் தெரிவித்தனர்.

சடலமானது பிரேத பரிசோதனைக்காக திக்ஓயா ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

பொகவந்தலாவையில் ஆணின் சடலம் மீட்பு நுவரெலியா, பொகவந்தலாவை, கொட்டியாகலை பிரதேசத்தில் உள்ள கால்வாயிலிருந்து இன்று (02) சனிக்கிழமை ஆணொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.கொட்டியாகலை தேயிலைத் தோட்டத்தில் பணிபுரியும் தோட்டத் தொழிலாளர்கள் சிலர் கால்வாயில் சடலம் இருப்பதைக் கண்டு உடனடியாகப் பொலிஸாருக்குத் தகவல் வழங்கியுள்ளனர்.கொட்டியாகலை தேயிலைத் தோட்டத்தில் பணிபுரியும் தோட்டத் தொழிலாளர்கள் பயன்படுத்தும் குழாய்களுக்கு நீர் இணைப்பை வழங்கும் கால்வாயிலிருந்தே சடலம் மீட்கப்பட்டுள்ளது.சடலமாக மீட்கப்பட்டவர் தொடர்பில் இதுவரை எந்தவித தகவல்களும் கிடைக்கவில்லை என்று பொகவந்தலாவைப் பொலிஸார் தெரிவித்தனர்.சடலமானது பிரேத பரிசோதனைக்காக திக்ஓயா ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement