ஹட்டன் பகுதியிலுள்ள பொலிஸாரும் ஹட்டன் டிக்கோயா மாநகர சபையும் இணைந்து ஹட்டன் டிக்கோயா மாநகர சபைக்குட்பட்ட பகுதியில் பிரவேசிக்கும் வர்த்தகர்கள், குடியிருப்பாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு சிவப்பு அறிவித்தலுடன் கூடிய கையேடுகளை வழங்கியுள்ளனர்.
இந்நிகழ்வில் நுவரெலியா மாவட்ட அபிவிருத்திக் குழுவின் தலைவர் பி.எம். பிராந்திய செயலாளர் சமீர கம்லத் உட்பட அரச மற்றும் தனியார் துறை அதிகாரிகள் பலரின் பங்குபற்றுதலுடன் இந்த வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.
ஹட்டன் நகர சபை எல்லைக்குட்பட்ட பகுதிகள் 18 பிரதேசங்களாக பிரிக்கப்பட்டு பல மாதங்களாக குவிந்திருந்த குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டதுடன் ஹட்டன் கொழும்பு – ஹட்டன் நுவரெலியா பிரதான வீதிகளும் துப்பரவு செய்யப்பட்டன.
இங்கு இனிமேல் சட்டவிரோதமாக குப்பைகளை அள்ளுபவர்கள் மற்றும் நகருக்குள் வெற்றிலையை எச்சில் துப்புபவர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படுவர் என சிவப்பு அறிவித்தலுடன் நகரிலுள்ள வர்த்தக சமூகம், வாடிக்கையாளர்கள், பிரதேசவாசிகள் உள்ளிட்ட அனைவருக்கும் அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தூய்மை இலங்கை வேலைத்திட்டத்திற்கு ஹட்டன் லயன்ஸ் கழகம் மற்றும் ஹட்டன் நகர வெல்ட சமூகத்தின் பூரண ஆதரவைப் பெற்றுள்ளதாகவும்இ இலங்கையிலுள்ள அழகிய 100 நகரங்களுக்குள் ஹட்டன் நகரமும் இடம்பெறும் எனவும் மஞ்சுள சுரவிரராச்சி தெரிவித்தார்.
இந்த வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்ட போதுஇ ஹட்டன் நகரில் மீன் வியாபாரி ஒருவரினால் ஹட்டன் – கொழும்பு பழைய வீதியில் உள்ள கால்வாயில் லொறியில் இருந்து கழிவுகளை வெளியேற்றும் போது சந்தேக நபர் ஹட்டன் பொலிஸ் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபருக்கு எதிராக ஹட்டன் நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டு சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
ஹட்டன் பகுதியிலுள்ள வர்த்தகர்களுக்கு சிவப்பு அறிவிப்பு ஹட்டன் பகுதியிலுள்ள பொலிஸாரும் ஹட்டன் டிக்கோயா மாநகர சபையும் இணைந்து ஹட்டன் டிக்கோயா மாநகர சபைக்குட்பட்ட பகுதியில் பிரவேசிக்கும் வர்த்தகர்கள், குடியிருப்பாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு சிவப்பு அறிவித்தலுடன் கூடிய கையேடுகளை வழங்கியுள்ளனர்.இந்நிகழ்வில் நுவரெலியா மாவட்ட அபிவிருத்திக் குழுவின் தலைவர் பி.எம். பிராந்திய செயலாளர் சமீர கம்லத் உட்பட அரச மற்றும் தனியார் துறை அதிகாரிகள் பலரின் பங்குபற்றுதலுடன் இந்த வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.ஹட்டன் நகர சபை எல்லைக்குட்பட்ட பகுதிகள் 18 பிரதேசங்களாக பிரிக்கப்பட்டு பல மாதங்களாக குவிந்திருந்த குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டதுடன் ஹட்டன் கொழும்பு – ஹட்டன் நுவரெலியா பிரதான வீதிகளும் துப்பரவு செய்யப்பட்டன.இங்கு இனிமேல் சட்டவிரோதமாக குப்பைகளை அள்ளுபவர்கள் மற்றும் நகருக்குள் வெற்றிலையை எச்சில் துப்புபவர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படுவர் என சிவப்பு அறிவித்தலுடன் நகரிலுள்ள வர்த்தக சமூகம், வாடிக்கையாளர்கள், பிரதேசவாசிகள் உள்ளிட்ட அனைவருக்கும் அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.தூய்மை இலங்கை வேலைத்திட்டத்திற்கு ஹட்டன் லயன்ஸ் கழகம் மற்றும் ஹட்டன் நகர வெல்ட சமூகத்தின் பூரண ஆதரவைப் பெற்றுள்ளதாகவும்இ இலங்கையிலுள்ள அழகிய 100 நகரங்களுக்குள் ஹட்டன் நகரமும் இடம்பெறும் எனவும் மஞ்சுள சுரவிரராச்சி தெரிவித்தார்.இந்த வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்ட போதுஇ ஹட்டன் நகரில் மீன் வியாபாரி ஒருவரினால் ஹட்டன் – கொழும்பு பழைய வீதியில் உள்ள கால்வாயில் லொறியில் இருந்து கழிவுகளை வெளியேற்றும் போது சந்தேக நபர் ஹட்டன் பொலிஸ் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.சந்தேகநபருக்கு எதிராக ஹட்டன் நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டு சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.