• Nov 28 2024

அல்கொய்தா அமைப்புக்கு உதவிய தந்தை, மகன் உள்ளிட்ட இருவருக்கு சிவப்பு பிடியாணை...!samugammedia

Sharmi / Jan 27th 2024, 9:59 am
image

அல்கொய்தா பயங்கரவாத அமைப்புக்கு உதவி வரும் குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ளனர் என சந்தேகப்படும்  நான்கு சந்தேகநபர்களை கைது செய்யுமாறு கொழும்பு மேலதிக நீதவான் பசன் அமரசிங்க நேற்று ஆங்கிலத்தில் சிவப்பு பிடியாணை (Red warrant) பிறப்பித்து உத்தரவிட்டுள்ளார்.

பயங்கரவாத புலனாய்வுப் பிரிவின் கோரிக்கையின் பேரில் இந்த சிவப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, தற்போது அவுஸ்திரேலியா மற்றும் சிரியாவில் வசிப்பதாக கூறப்படும் கலேலிய, கலகெடி ஹென்வெல பிரதேசங்களை சேர்ந்த தந்தை மற்றும் மகன் மற்றும் இருவருக்கு எதிராகவே இந்த சிவப்பு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, அஹமட் கலீல் லுக்மான் தாலிப், அஹ்மான் லுக்மன்ட் ஹலீன், அப்துல் பஹின் மொஹமட் லெப்பே மற்றும் மொஹமட் பாஹிர் ரிப்பன் ஆகிய நால்வருக்கு எதிராகவே சிவப்பு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, 2021 ஆம் ஆண்டில் 16 சந்தேகநபர்களுக்கு எதிராக பயங்கரவாத தடுப்பு பிரிவினர் வழக்கைப் பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது


அல்கொய்தா அமைப்புக்கு உதவிய தந்தை, மகன் உள்ளிட்ட இருவருக்கு சிவப்பு பிடியாணை.samugammedia அல்கொய்தா பயங்கரவாத அமைப்புக்கு உதவி வரும் குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ளனர் என சந்தேகப்படும்  நான்கு சந்தேகநபர்களை கைது செய்யுமாறு கொழும்பு மேலதிக நீதவான் பசன் அமரசிங்க நேற்று ஆங்கிலத்தில் சிவப்பு பிடியாணை (Red warrant) பிறப்பித்து உத்தரவிட்டுள்ளார்.பயங்கரவாத புலனாய்வுப் பிரிவின் கோரிக்கையின் பேரில் இந்த சிவப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, தற்போது அவுஸ்திரேலியா மற்றும் சிரியாவில் வசிப்பதாக கூறப்படும் கலேலிய, கலகெடி ஹென்வெல பிரதேசங்களை சேர்ந்த தந்தை மற்றும் மகன் மற்றும் இருவருக்கு எதிராகவே இந்த சிவப்பு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.அதற்கமைய, அஹமட் கலீல் லுக்மான் தாலிப், அஹ்மான் லுக்மன்ட் ஹலீன், அப்துல் பஹின் மொஹமட் லெப்பே மற்றும் மொஹமட் பாஹிர் ரிப்பன் ஆகிய நால்வருக்கு எதிராகவே சிவப்பு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.இதேவேளை, 2021 ஆம் ஆண்டில் 16 சந்தேகநபர்களுக்கு எதிராக பயங்கரவாத தடுப்பு பிரிவினர் வழக்கைப் பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Advertisement

Advertisement

Advertisement