• Nov 23 2024

விலைகளை குறைத்து மது அருந்துபவர்களை மகிழ்விக்க வேண்டும்! வலியுறுத்தும் இராஜாங்க அமைச்சர் சாமர

Chithra / Jul 11th 2024, 11:17 am
image


மனைவியுடனான பிரச்சினையால் பலர் மதுபானங்களை அருந்தி மன ஆறுதல் தேடுவதனால்   மதுபானங்களின் விலைகளை குறைத்து மது அருந்துபவர்களை மகிழ்விக்க வேண்டும் என கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத்  வேண்டுகோள் விடுத்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று (10) இடம்பெற்ற  மது வரி கட்டளைச் சட்டம் மற்றும் ஏற்றுமதி, இறக்குமதி கட்டுப்பாட்டுச் சட்டங்கள் குறித்த வர்த்தமானி அறிவித்தல்கள் தொடர்பான விவாதத்தில் உரையாற்றும் போதே இவ்வாறு வேண்டுகோள் விடுத்தார்.

மதுபானங்களின் விலை அதிகரிப்பால் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி தீவிரமடைந்துள்ளன.

மதுவரி  சட்டங்களை திருத்துவதாலும், புதிதாக மதுபான சாலைகளுக்கு அனுமதி வழங்குவதாலும் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண முடியாது.

 மதுபானங்களின் விலை அதிகரிப்பால் மதுவரி திணைக்களம் இந்த ஆண்டு முதல் காலாண்டில் மாத்திரம் 50 பில்லியன் ரூபா நஷ்டமடைந்துள்ளது.

மொத்த சனத்தொகையில் 60 இலட்சமானோர் மது அருந்துகிறார்கள்.

உடல் வலி, மன வேதனை மற்றும் மனைவியுடனான பிரச்சினை ஆகிய காரணிகளால் இவர்கள் மது அருந்தி மன ஆறுதலடைகின்றனர்.

குறைந்த விலையில் இருந்த அதிவிசேட மதுபான போத்தலின் விலை அதிகரிக்கப்பட்டதால் சமூக கட்டமைப்பில் பாரிய பிரச்சினைகள் தோற்றம் பெற்றுள்ளன.

மதுபான நுகர்வுக்கான கேள்வி குறைவடைந்துள்ளதால்  சட்டவிரோத மதுபான உற்பத்தி அதிகரித்துள்ளன.

இதுவரையான காலப்பகுதியில் மாத்திரம் 50 பேர் உயிரிழந்துள்ளார்கள். 

விலை அதிகரிப்பால்  கடலில் மிதந்து வந்த திரவத்தை அருந்தி ஐந்து மீனவர்கள் உயிரிழந்துள்ளார்கள்.

ஆகவே மதுபான விலைகளை குறைத்து மதுபானங்களை அருந்துபவர்களை மகிழ்விக்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.

விலைகளை குறைத்து மது அருந்துபவர்களை மகிழ்விக்க வேண்டும் வலியுறுத்தும் இராஜாங்க அமைச்சர் சாமர மனைவியுடனான பிரச்சினையால் பலர் மதுபானங்களை அருந்தி மன ஆறுதல் தேடுவதனால்   மதுபானங்களின் விலைகளை குறைத்து மது அருந்துபவர்களை மகிழ்விக்க வேண்டும் என கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத்  வேண்டுகோள் விடுத்தார்.பாராளுமன்றத்தில் நேற்று (10) இடம்பெற்ற  மது வரி கட்டளைச் சட்டம் மற்றும் ஏற்றுமதி, இறக்குமதி கட்டுப்பாட்டுச் சட்டங்கள் குறித்த வர்த்தமானி அறிவித்தல்கள் தொடர்பான விவாதத்தில் உரையாற்றும் போதே இவ்வாறு வேண்டுகோள் விடுத்தார்.மதுபானங்களின் விலை அதிகரிப்பால் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி தீவிரமடைந்துள்ளன.மதுவரி  சட்டங்களை திருத்துவதாலும், புதிதாக மதுபான சாலைகளுக்கு அனுமதி வழங்குவதாலும் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண முடியாது. மதுபானங்களின் விலை அதிகரிப்பால் மதுவரி திணைக்களம் இந்த ஆண்டு முதல் காலாண்டில் மாத்திரம் 50 பில்லியன் ரூபா நஷ்டமடைந்துள்ளது.மொத்த சனத்தொகையில் 60 இலட்சமானோர் மது அருந்துகிறார்கள்.உடல் வலி, மன வேதனை மற்றும் மனைவியுடனான பிரச்சினை ஆகிய காரணிகளால் இவர்கள் மது அருந்தி மன ஆறுதலடைகின்றனர்.குறைந்த விலையில் இருந்த அதிவிசேட மதுபான போத்தலின் விலை அதிகரிக்கப்பட்டதால் சமூக கட்டமைப்பில் பாரிய பிரச்சினைகள் தோற்றம் பெற்றுள்ளன.மதுபான நுகர்வுக்கான கேள்வி குறைவடைந்துள்ளதால்  சட்டவிரோத மதுபான உற்பத்தி அதிகரித்துள்ளன.இதுவரையான காலப்பகுதியில் மாத்திரம் 50 பேர் உயிரிழந்துள்ளார்கள். விலை அதிகரிப்பால்  கடலில் மிதந்து வந்த திரவத்தை அருந்தி ஐந்து மீனவர்கள் உயிரிழந்துள்ளார்கள்.ஆகவே மதுபான விலைகளை குறைத்து மதுபானங்களை அருந்துபவர்களை மகிழ்விக்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement