• Nov 13 2024

அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை குறைப்பு

Chithra / Nov 2nd 2024, 7:08 am
image

 

அத்தியாவசிய உணவுப் பொருட்கள் சிலவற்றின் விலையை லங்கா சதொச நிறுவனம் குறைத்துள்ளது.

இன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த விலைக்குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதன்படி, பாசிப் பயறு ஒரு கிலோ கிராமின் விலை 51 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 799 ரூபாவாகும்.

மேலும், வெள்ளை கௌபி ஒரு கிலோ கிராமின் விலை 20 ரூபாவால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலையாக 880 ரூபா அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், வெள்ளை சீனியின் ஒரு கிலோ கிராமின் விலை 5 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய 243 ரூபாவாகும்.

மேலும், அனைத்து சதொச பல்பொருள் அங்காடிகளிலும் ஒரு கிலோ பெரிய வெங்காயத்தை 300 ரூபாவிற்கு  பெற்றுக்கொள்ள முடியும் என்றும்  சதொச நிறுவனம் அறிவித்துள்ளது.

அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை குறைப்பு  அத்தியாவசிய உணவுப் பொருட்கள் சிலவற்றின் விலையை லங்கா சதொச நிறுவனம் குறைத்துள்ளது.இன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த விலைக்குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, பாசிப் பயறு ஒரு கிலோ கிராமின் விலை 51 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 799 ரூபாவாகும்.மேலும், வெள்ளை கௌபி ஒரு கிலோ கிராமின் விலை 20 ரூபாவால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலையாக 880 ரூபா அறிவிக்கப்பட்டுள்ளது.அத்துடன், வெள்ளை சீனியின் ஒரு கிலோ கிராமின் விலை 5 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய 243 ரூபாவாகும்.மேலும், அனைத்து சதொச பல்பொருள் அங்காடிகளிலும் ஒரு கிலோ பெரிய வெங்காயத்தை 300 ரூபாவிற்கு  பெற்றுக்கொள்ள முடியும் என்றும்  சதொச நிறுவனம் அறிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement