• Sep 18 2024

மன்னாரில் இடம்பெற்ற பிரதேச கலாசார விழா..!

Sharmi / Sep 14th 2024, 9:55 am
image

Advertisement

வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம்,மற்றும் கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன்,மன்னார் பிரதேச செயலகமும்,கலாசார பேரவையும் இணைந்து ஏற்பாடு செய்த மன்னார் பிரதேச கலாசார விழா நேற்றையதினம்(13) மாலை மன்னார் நகர சபை மண்டபத்தில் இடம்பெற்றது.

மன்னார் நகர பிரதேச செயலாளர் மனோகரன் பிரதீப் தலைமையில் குறித்த நிகழ்வு இடம்பெற்றது.

ஆரம்ப நிகழ்வாக, விருந்தினர்கள் மாவட்ட செயலக முன்றலில் இருந்து கலாச்சார பேரணியாக மன்னார் நகர சபை மண்டபம் வரை மங்கள வாத்திய இசையுடன் அழைத்து வரப்பட்டனர்.

அதனைத் தொடர்ந்து நகரசபை மண்டபத்தில் கலாச்சார நிகழ்வுகள் இடம்பெற்றதோடு, பரிசளிப்பு நிகழ்வு, மற்றும் கலைஞர்களை கௌரவிக்கும் நிகழ்வும் இடம்பெற்றது.

இந்நிகழ்வில், சர்வமத தலைவர்கள் கலந்து கொண்டதோடு, பிரதம விருந்தினராக மன்னார் மாவட்ட செயலாளர் க.கனகேஸ்வரன்  மற்றும் விருந்தினர்களாக மேலதிக மாவட்ட செயலாளர் (நிர்வாகம்) ய.பரந்தாமன்,மேலதிக மாவட்ட செயலாளர் (காணி) மா.சிறிஸ்கந்தகுமார், வடமாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்கள பிரதி பணிப்பாளர் திருமதி லாஹினி நிருபராஜ், மன்னார் கமநல சேவைகள் திணைக்கள உதவி ஆணையாளர் அ.மரின் குமார்,கலாபூசனம் ஜோண் பொஸ்கோ ஆகியோர் கலந்து கொண்டனர்.



மன்னாரில் இடம்பெற்ற பிரதேச கலாசார விழா. வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம்,மற்றும் கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன்,மன்னார் பிரதேச செயலகமும்,கலாசார பேரவையும் இணைந்து ஏற்பாடு செய்த மன்னார் பிரதேச கலாசார விழா நேற்றையதினம்(13) மாலை மன்னார் நகர சபை மண்டபத்தில் இடம்பெற்றது.மன்னார் நகர பிரதேச செயலாளர் மனோகரன் பிரதீப் தலைமையில் குறித்த நிகழ்வு இடம்பெற்றது.ஆரம்ப நிகழ்வாக, விருந்தினர்கள் மாவட்ட செயலக முன்றலில் இருந்து கலாச்சார பேரணியாக மன்னார் நகர சபை மண்டபம் வரை மங்கள வாத்திய இசையுடன் அழைத்து வரப்பட்டனர்.அதனைத் தொடர்ந்து நகரசபை மண்டபத்தில் கலாச்சார நிகழ்வுகள் இடம்பெற்றதோடு, பரிசளிப்பு நிகழ்வு, மற்றும் கலைஞர்களை கௌரவிக்கும் நிகழ்வும் இடம்பெற்றது.இந்நிகழ்வில், சர்வமத தலைவர்கள் கலந்து கொண்டதோடு, பிரதம விருந்தினராக மன்னார் மாவட்ட செயலாளர் க.கனகேஸ்வரன்  மற்றும் விருந்தினர்களாக மேலதிக மாவட்ட செயலாளர் (நிர்வாகம்) ய.பரந்தாமன்,மேலதிக மாவட்ட செயலாளர் (காணி) மா.சிறிஸ்கந்தகுமார், வடமாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்கள பிரதி பணிப்பாளர் திருமதி லாஹினி நிருபராஜ், மன்னார் கமநல சேவைகள் திணைக்கள உதவி ஆணையாளர் அ.மரின் குமார்,கலாபூசனம் ஜோண் பொஸ்கோ ஆகியோர் கலந்து கொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement